background img

புதிய வரவு

தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ட்விட்டருக்கு தடை விதிக்க பரிசீலனை

கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் ட்விட்டர் இணையளதளத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

வடகிழக்கு மாநில மக்கள் இடையே கடந்த மாதம் வதந்தியை கிளப்பும் வகையில் தகவல்களை வெளியிட்டதாக கூறி இந்த நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் கடந்த மாதம் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

செல்போன் மற்றும் இணையதளங்களே இந்த வதந்தி வேகமாக பரவக் காரணம் என்பதை அறிந்த மத்திய அரசு செல்போனில் எஸ்.எஸ்.எம். அனுப்ப கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இப்போது நிலைமை சீரடைந்தபின் அந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மக்களிடையே விரோதத்தை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிட்டதாக 310 இணைய தளங்கள் கண்டறியப்பட்டு அவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டன.

கர்நாடகா, தமிழ்நாடு, அஸ்ஸாம், மகாராஷ்டிரா,உத்தரப்பிரதேசம் உள்பட 8 மாநிலங்களில் இந்த வதந்தி கிளப்பப்பட்டதாக மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.

இதனையடுத்து இந்த மாநிலங்களில் ட்விட்டர் இணையதளத்தை எப்படி முடக்குவது பற்றி தொழில்நுட்ப வல்லுனர்களிடம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆலோசனை கேட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி இத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதே நேரத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பிரதமரின் முதன்மைச் செயலாளர் புலோக் சாட்டர்ஜி ஆகியோர் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

முன்னதாக டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், இணையம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டி, அதனைத் தடுக்க மத்திய அரசு சைபர் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்திருந்தார்.


-விகடன் இணையதளம் 

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts