background img

புதிய வரவு

Showing posts with label Manmohan Singh. Show all posts

 Attacks On Tamil Nadu Fishermen Sri Lanka தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று முன் தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளது என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கச்சத்தீவில் ஆண்டாண்டுகாலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் நிலையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் அச்சமடைந்திருப்பதாகவும் ஜெயலலிதா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கும் நிலையில்தான் நள்ளிரவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் இலங்கை கடற்படை தாக்குதல்- பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

 Cvc Refers Coal Block Allocation Case Cbi பிரதமர் மன்மோகன் சிங் மீதான ரூ1. லட்சம் கோடி மதிப்பிலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐக்கு மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ ஆராய ஆரம்பித்துள்ளது.

2008-2009ம் ஆண்டில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றது என்பது தணிக்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ள புகார். இந்தப் புகாரை கையில் எடுத்துக் கொண்டுள்ள சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவினர் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி வந்தனர்.

தம் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் என்றும்கூட மன்மோகன் சிங் கூறியிருந்தார். இந் நிலையில் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சி.பி.ஐக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைத்தது.

இதையடுத்து நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக எப்படி விசாரணை நடத்துவது என்பது குறித்து இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இந்த ஊழல் தொடர்பான புகாரில் கூறப்பட்ட விவரங்களை சிபிஐ ஆராய ஆரம்பித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புகாரில் உண்மையிருப்பதாக சிபிஐ கருதினால் முழு அளவிலான விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.

பிரதமர் மீதான நிலக்கரி சுரங்க ஊழல் புகார்: விசாரணை நடத்த சி.பி.ஐ முடிவு?

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை அடைக்க அண்மையில் தமிழக அதிகாரிகள் சென்றிருந்தனர். ஆனால் அவர்களை கேரள அதிகாரிகள் தடுத்து தாக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கேரளத்தின் அடாவடியை சுட்டிக்காட்டியுள்ளதுடன் அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகள் நிறுத்தப்படவில்லை எனில், தமிழக போலீசாரையே அங்கு நிறுத்த நேரிடும் என்றும் பிரதமருக்கு ஜெயலலிதா தமது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு படையை அனுப்புங்கள்: மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை அடைக்க அண்மையில் தமிழக அதிகாரிகள் சென்றிருந்தனர். ஆனால் அவர்களை கேரள அதிகாரிகள் தடுத்து தாக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கேரளத்தின் அடாவடியை சுட்டிக்காட்டியுள்ளதுடன் அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகள் நிறுத்தப்படவில்லை எனில், தமிழக போலீசாரையே அங்கு நிறுத்த நேரிடும் என்றும் பிரதமருக்கு ஜெயலலிதா தமது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங் 3 நால் சுற்றுப் பயணமாக மியான்மருக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். கடந்த 25 ஆண்டுகளில் மியான்மருக்கு பயணம் மேற்கொண்ட முதலாவது இந்திய பிரதமர் மன்மோகன்சிங்தான்.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் ஜனநாயகத்துக்காக ஆங்சாங்சூயி தலைமையில் போராட்டமும் நடைபெற்று வந்தது. மேற்குலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் ஜனநாயகப் பாதைக்கு மியான்மர் திரும்பியது. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ஆங்சாங்சூயி-யின் ஜனநாயகக் கட்சிக்கு கணிசமான இடங்களும் கிடைத்தது. ஆங்சாங்சூயியும் நாட்டின் எம்.பியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதைத் தொடந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கிமூன் மியான்மர் சென்றிருந்தார். இங்கிலாந்து பிரதமரும் அண்மையில் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மெதுமெதுவாக விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று மியான்மர் பயணம் மேற்கொள்கிறார். மியான்மர் செல்லும் முன்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும் உறவு நாடாகவும் மியான்மர் திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.மேலும் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங்சாங்சூயியையும் மன்மோகன்சிங் சந்தித்துப் பேச உள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமாக மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

3 நாள் பயணமாக மியான்மர் சென்றார் மன்மோகன்சிங்

பிரதமர் உள்ளிட்ட உயர் பதவியில் உள்ளவர்களையும் ஊழல் புகார் தொடர்பாக மக்கள் கோர்ட்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்கும் வகையில், லோக்பால் சட்டம்' உருவாகி வருகிறது.

அந்த சட்டத்துக்காக நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே, பெங்களூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், லோக்பால் சட்ட மசோதா உருவாக்கும் குழுவில் மக்கள் பிரதிநிதிகளை 50 சதவீதம் அளவுக்கு சேர்த்துக் கொள்ள மத்திய அரசு இறுதியாக இறங்கி வந்தது.

ஆனால், இன்னமும் அரசிடம் இருந்து பல்வேறு பிரச்சினைகளை அந்த குழு எதிர் கொண்டு வருகிறது. நமது பிரதமர் சுத்தமானவர். நல்ல மனிதர். ஆனால், ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படும் பின்னணி சக்திகள் தான் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்றார்.

நமது பிரதமர் சுத்தமானவர்: அன்னா ஹசாரே!!

அடிஸ் அபாபா : சோமாலிய கடல் பகுதியில் நடக்கும் கடல் கொள்ளையை, ஆப்ரிக்க நாடுகளுடன் இணைந்து தடுக்க இந்தியா தயாராக உள்ளது என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், எத்தியோபியா மற்றும் தான்சானியா நாடுகளுக்கு ஆறு நாள் பயணமாக சென்றுள்ளார். முதல் கட்டமாக, எத்தியோபியாவின் அடிஸ் அபாபா நகரில் நடந்த இந்திய - ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.

எத்தியோபிய பார்லிமென்டில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவும், ஆப்ரிக்காவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்தவை. இந்திய பெருங்கடல் நமது நாடுகளை பிரித்து விட்டது. இந்திய கலாசாரத்துக்கும், ஆப்ரிக்க நாட்டு மக்களுக்கிடையேயும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. எத்தியோபியாவில் அணியப்படும் தலைப்பாகைக்கும் இந்தியர்களின் தலைப்பாகைக்கும் நிறைய ஒற்றுமை காணப்படுகிறது. தென்னிந்தியர்களின் உணவான தோசைக்கும், எத்தியோபியாவின் "இன்ஜாரா' என்ற உணவுக்கும் ஒற்றுமை உள்ளது. எத்தியோபியாவின் அடுலிஸ் நகரம் முன்பொரு காலத்தில் பட்டு, தந்தம், தங்கம் மற்றும் நறுமண உணவுப் பொருட்களின் சந்தையாக இருந்துள்ளது. வியாபார நிமித்தமாக இந்த நகருக்கு வந்த இந்தியர்கள் பலர் இங்கேயே தங்கி விட்டனர். மகாராஷ்டிராவில் உள்ள முருட் ஜன்ஜிரா என்ற கோட்டை, ஆப்ரிக்க சின்னங்களை பிரதிபலிப்பவையாக உள்ளது.

மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் புரட்சியும், கிளர்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், ஆப்ரிக்க கூட்டமைப்பு நாடுகள் தங்கள் பகுதியில் அமைதியையும், ஸ்திர தன்மையையும் ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்கை நிர்ணயிப்பதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது. சர்வதேச நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டதாகவும், ஐ.நா., வரையறை செய்துள்ள தீர்மானத்துக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். சோமாலிய கடற்பகுதியில் கடற்கொள்ளையை தடுக்க ஆப்ரிக்க நாடுகளுடன் இணைந்து செயலாற்ற இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

கடற்கொள்ளையை தடுக்க இந்தியா தயார்: மன்மோகன்

புதுடில்லி : நாட்டை மட்டுமின்றி, உலகையே உலுக்கிய "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாதது போன்ற சூழலில், பிரதமர் மன்மோகன் சிங்(79) தலைமையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மூன்றாவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன்பின், 2009 தேர்தலிலும் இந்தக் கூட்டணியே வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. மன்மோகன் சிங் மீண்டும் பிரதமரானார். 2வது முறையாக ஆட்சி அமைத்த ஐ.மு., கூட்டணி அரசு, கடந்த எட்டு மாதங்களில் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியது. ரூ.1.76 லட்சம் கோடி "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், மகாராஷ்டிரா ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் உட்பட பல வகையான ஊழல் புகார்கள், மன்மோகன் சிங் அரசு மீது கூறப்பட்டன. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும்போது, இடதுசாரிகளின் ஆதரவை இழந்த பிரதமர், அதை விட மிகவும் சிக்கலான நெருக்கடிக்கு உள்ளானது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளியான இக்காலகட்டத்தில்தான்.

" 2ஜி' ஊழலில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா மீது ஏன் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமரிடம், சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது இந்திய வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்தது. சுரேஷ் கல்மாடி, ராஜா, கனிமொழி போன்றோரின் கைதும், "2ஜி' வழக்கின் மையமான நிரா ராடியா விவகாரமும், இக்கூட்டணிக்குப் பெரும் தலைக்குனிவையே ஏற்படுத்தியுள்ளன. "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரையே எதிர்க்கட்சிகள் முடக்கின. அதேபோல், தலைமைக் கண்காணிப்பு கமிஷனராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரத்திலும், மத்திய அரசு பெரும் தலைக்குனிவை சந்தித்தது.

விலைவாசியும், செயலின்மையும்: பொருளாதார மேதைகளான, மன்மோகன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தும் கூட, அடித்தட்டு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு விலைவாசி விண்ணை முட்டியது. விலைவாசியைக் குறைக்க இயலாமல் மத்திய அரசு விழிபிதுங்கியது. நாட்டின் பல்வேறு உணவுக் கிடங்குகளில், தானியங்கள் பாழாகிக் கொண்டிருந்த வேளையில், மத்திய விவசாய அமைச்சர், அவற்றை வினியோகிப்பதில் போதுமான அக்கறை காட்டாததை சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டி, கண்டனம் தெரிவித்தது. இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில், மும்பையில் நடந்த சில குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான, வாசுர் கமார் கான் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தும் கூட, பாகிஸ்தானிடம் மத்திய அரசு அளித்த, தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் கானின் பெயர் சேர்க்கப்பட்டதும், அரசின் செயல்பாட்டில் பெரும் குளறுபடிகள் நடந்து கொண்டிருப்பதை வெட்டவெளிச்சமாக்கின. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், வழக்கம் போல சாக்குபோக்கு சொல்லி இவ்விவகாரத்தைச் சமாளித்தார்.

ஊழல் புகார் உட்பட பலவிதமான புகார்களால் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் மன்மோகன் சிங் அரசு, வரும் ஆண்டுகளில் மேலும் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தி.மு.க., மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான காங்கிரசின் முரண்பாடான செயல்பாடுகள், 2012ல் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்கள் ஆகியவை இவற்றில் குறிப்பிடத் தக்கவை. சமீபத்தில், ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பாதியளவுக்கு நிம்மதியைத் தந்ததுள்ளன. அசாமில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும், கேரளாவில் புதிய அரசு அமைத்ததும், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலும், ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதற்கு காரணம். இந்த திருப்தி நிலை தொடர வேண்டும் எனில், இரண்டாவது முறையாக பதவியேற்று இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மன்மோகன் சிங் அரசு, மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நல்ல பல பணிகளைச் செய்ய வேண்டும். இதுவே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு.

சவால்கள், பிரச்னைகளை சமாளிக்குமா மன்மோகன் அரசு? : இன்று 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

டெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அதே போல மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந் நிலையில் அ.தி.முக. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, முதல் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல் மந்திரி ஷீலா தீட்சித், ஒரிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக், மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, எம்.பி., நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஜெயலலிதாவிடம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

ஜெயலலிதாவை, திரைப்பட நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், பல்வேறு துறைகளை சார்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகளும், காவல் துறையைச் சார்ந்த ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, மலர் கொத்துக்களை அளித்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து, பல்வேறு துறை அதிகாரிகளும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளும், திரைப்பட துறையை சார்ந்தவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், ஜெயலலிதா, தனது இதயம் நிறைந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.

ஜெ.வுக்கு பிரதமர்-சோனியா, அத்வானி போனில் வாழ்த்து: விஜய் நேரில் வாழ்த்து

டெல்லி: சிபிஐ யாருக்கும் பயப்படாமல் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சிபிஐக்கு டெல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள தலைமை அலுவலகத்தை இன்று திறந்து வைத்து பேசிய அவர்,

இந்தியாவின் புலனாய்வு துறைகளில் சிபிஐ முதன்மை துறையாக விளங்குகிறது. இதன் பணிகள் எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டும்.

முக்கிய வழக்குகளை கையாள்வது சிபிஐ அதிகாரிகளுக்கு ஒரு பரிசோதனை போன்றது. சிபிஐயின் நடவடிக்கைகள் அப்பாவிகளுக்கு துன்புறுத்தல் இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

சட்டத்தை மீறுபவர்கள், எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் ஊழல் புரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஐ தயங்கக் கூடாது. சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமம்.

தங்கள் பணிகளில் எந்த குறுக்கீடு வந்தாலும் அதற்கு சிபிஐ அதிகாரிகள் பயப்படக் கூடாது. தங்கள் கடமைகளை விருப்பு, வெறுப்பின்றி செய்ய வேண்டும். அதே நேரத்தில் நடுநிலை தவறக் கூடாது என்றார்.

'தைரியமா இருக்கனும்..': சிபிஐக்கு மன்மோகன் அறிவுரை!

புட்டபர்த்தி : புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இன்று புட்டபர்த்தி வந்து நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர். நாளை பாபாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி கிராமத்தில் பிறந்த சத்ய நாராயணா தனது 14வது வயதில் ஆன்மீக சக்தி பெற்றவர். தானே ஷிர்டி பாபாவின் மறுபிறவி என்று அறிவித்தவர். அதன்பின், புட்டபர்த்தி சத்ய சாய்பாபா என்று உலகமெங்கும் பக்தர்களால் அழைக்கப்படுபவர். உடல்நலம் பாதிக்கப்பட்ட பாபா நேற்றுமுன்தினம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீசத்யசாய் மருத்துவமனையில் காலமானார்.

அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தின் குல்வந்த் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பாபாவின் உடல் அருகில், ஆந்திர சுகாதார துறை அமைச்சர் கீதா ரெட்டி, பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர், பாபாவின் நேர்முக உதவியாளர் சத்யஜித் உட்பட பலர் சோகத்தில் அமர்ந்துள்ளனர்.

இன்று மாலை வரை மக்கள் அங்கு பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் நாளை காலை அரசு மரியாதையுடன் ஆன்மீக குருக்கள் இறுதி சடங்குகள் செய்ய பாபாவின் உடல், பிரசாந்தி நிலையத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என்று ராயலசீமா டி.ஐ.ஜி சாரு சின்ஹா தெரிவித்தார்.

இந்நிலையில், புட்டபர்த்தி முழுவதும் சோக வெள்ளமாக காட்சியளிக்கிறது. பாபாவின் உடலுக்கு வி.ஐ.பி.க்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தியா மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் அனந்தபூர் மாவட்டமே ஸ்தம்பித்துள்ளது. பாபா மறைவால் துக்கம் அனுசரிப்பதால், ஓட்டல்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எல்லாம் மூடிக்கிடக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் உணவு, குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அனந்தபூர் கலெக்டர் ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், ‘பாபாவுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் போன்றவை ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளதால் நிலைமையை கட்டுப்படுத்த போலீசாரும் முடிந்த அளவுக்கு உதவி செய்து வருகின்றனர்’ என்றார்.
ரயில் நிலையங்களுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புட்டபர்த்தி முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும், சத்ய சாய் டிரஸ்ட் பாதுகாவலர்களும் பொதுமக்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். பக்தர்கள் அஞ்சலி செலுத்த புட்டபர்த்தி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் வரிசையில் காத்திருந்து பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார், முன்னாள் முதல்வர்கள் சந்திரபாபு நாயுடு, ரோசய்யா, நடிகர் சிரஞ்சீவி, மற்றும் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதி பிரதிபா பாட்டில், துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள் விலாஸ்ராவ் தேஷ்முக், பிரபுல் படேல், ராகுல் காந்தி, பா.ஜ தலைவர்கள் நிதின் கட்கரி, அத்வானி, தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் சாய்பாபா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாபாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உட்பட பலர் இன்று புட்டபர்த்தி வருகின்றனர். நாளை நடக்கும் பாபாவின் இறுதிச் சடங்கில் பா.ஜ மூத்த தலைவர் அத்வானி பங்கேற்கிறார். பாபா மறைவையொட்டி ஆந்திர அரசு சார்பில் நேற்று முன்தினம் முதல் நாளை வரை 4 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கர்நாடகமும் 2 நாள் துக்கம் அனுசரிக்கிறது.

சாய்பாபாவுக்கு கண்ணீர் அஞ்சலி : மன்மோகன், சோனியா இன்று வருகை!

புது தில்லி, மார்ச் 18: ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பண புழக்கம் அதிகரித்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைத்தால் இது குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'இந்தியா டுடே'-யின் 10-ம் ஆண்டு மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது:
முத்திரைத்தாள் கட்டண விகிதம் அதிகமாக இருப்பதால்தான் சொத்துகளின் மதிப்பை குறைத்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதனாலேயே ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவில் கறுப்புப் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இதைக் கட்டுப்படுத்த ஒரு வழி உள்ளது. அது முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைப்பதுதான். இருப்பினும் நமது நாட்டில் முத்திரைத்தாள் பதிவு கட்டணம் மிகவும் குழப்பான விஷயம். இதை சரி செய்வது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
ரியல் எஸ்டேட் துறையில் மிக அதிக அளவில் கறுப்புப் பணம் புழங்குவதாகவும், இதற்கு அடுத்தபடியாக உற்பத்தித் துறையில் அதிக அளவில் கறுப்புப் பணம் உள்ளதாகவும் நிதி அமைச்சகம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் இக்கருத்தை தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் தனியார் முதலீடு அதிகரிக்கும்போது இத்தகைய கறுப்புப் பண புழக்கம் குறைந்து இத்துறைக்கு தூய்மையான ஒரு தோற்றம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்திரத்தன்மை: சர்வதேச அளவில் அரசியலில் ஸ்திரமற்ற நிலை நிலவும் சூழலில் இந்திய அரசியலில் ஸ்திரத்தன்மை நிலவுகிறது. அணுகுமுறையில் பல புதுமைகளும், நெகிழ்வுத் தன்மையும் சேர்ந்தால் அது மேலும் பொலிவுபெறும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதற்கு அதிகார பகிர்வு மிகவும் அவசியம் என்று சுட்டிக்காட்டினார். சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு உரிய வகையில் மாறிக்கொள்ளும் சாதகமான சூழல் இந்தியாவில் காணப்படுகிறது.
சர்வதேச அளவில் நிதி நெருக்கடி நிலவியபோது அதிலிருந்து மீள்வதற்கு இந்தியா உதவியது என்று பிரதமர் குறிப்பிட்டார். நமது நிர்வாக செயல்பாடுகளில் சில குறைகள் உள்ளதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் குறிப்பாக ஊழலை ஒழிக்க வேண்டும் என்றார். அனைத்து நிலையிலும் நிர்வாகத் திறன் மேம்பட ஊழலை ஒழிப்பது மிகவும் அவசியம் என்றார்.
பழைய முறைகள் முற்றிலுமாக மாறி வருகின்றன, புதிய முறை என்ன என்பதை இனிமேல்தான் வரையறுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அத்தகைய புதிய முறையின் மூலம் நாம் வளர்ச்சியடைய வேண்டும் என்றார்.
ஜனநாயக இந்தியா இப்போது தனது சகோதர நாடுகளான மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியைப் பார்த்து பூரிப்பதோடு அவை தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க காரணமாக அமைந்துள்ளது என்றார். ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு சர்வதேச சரிவுக்குப் பிறகு மிக முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது. இதைப் போலவே அரசியல், பாதுகாப்பு சார்ந்த துறைகளில் ஐக்கிய நாடுகள் சபையைப் போன்று பல நாடுகளின் கூட்டமைப்பு இப்போதைய சூழலுக்கு ஏற்ப உருவாக வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது என்றார் பிரதமர்.
உள்நாட்டிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டுக்குள் 50 கோடி இளைஞர்களின் திறனை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்திரமான வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இப்போது அரசியலில் அதிகார பரவல் நிகழ்ந்து வருகிறது. சாதாரண மக்களிடமும் அரசியல் அதிகாரத்தை ஒப்படைக்கும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. ஜனநாயக மாற்றத்தை அர்த்தமுள்ளதாக்க அரசு முழு முயற்சி எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.
பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. ரியல் எஸ்டேட் துறையில் மிக அதிக அளவில் கறுப்புப் பணம் புழங்குகிறது. முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைக்கும் யோசனை வரவேற்கத்தக்கது என்று டாடா ஹவுசிங் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் புரோடின் பானர்ஜி தெரிவித்தார்.
முத்திரைத்தாள் கட்டணம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. மும்பையில் 4 சதவீதமாக உள்ள கட்டணம் கேரளத்தில் 13 சதவீதமாக உள்ளது. ஹரியாணாவில் 6 சதவீதமாகவும், உத்தரப் பிரதேசத்தில் 8 சதவீதமாகும், பிற மாநிலங்களில் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையிலும் உள்ளது.
முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே உள்ளது. அனாவசிய கட்டணம் காரணமாக குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தர முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசு மீது சுமத்தப்படுகிறது.
இப்போது முத்திரைத்தாள் கட்டணம் கட்டட மேம்பாட்டாளர்களிடமும் வசூலிக்கப்படுகிறது. வீடு வாங்குவோரிடமும் வசூலிக்கப்படுகிறது. முத்திரைத் தாள் கட்டணத்தை நாடு முழுவதும் 4 சதவீதமாக நிர்ணயித்தால், சொத்து மதிப்பை குறைத்து காட்டுவோரை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று பானர்ஜி குறிப்பிட்டார்.
மத்திய அரசு ஒரு நிதியத்தை ஏற்படுத்தி முத்திரைத்தாள் கட்டண குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்கிறது. இதை தில்லி, உத்தரப் பிரதேசம் பயன்படுத்திக் கொள்வதற்காக வரி குறைப்பு செய்துள்ளது. இதே முறையை பிற மாநிலங்களும் பின்பற்றலாம் என்று பர்சாவந்த் மேம்பாட்டு தலைவர் பிரதீப் ஜெயின் குறிப்பிட்டார்.

ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பண புழக்கம் துரதிருஷ்டவசமானது: பிரதமர் குமுறல்

புதுடெல்லி: ஜப்பானில் பூகம்பம், சுனாமி ஆகிய இயற்கை சீற்றங்களாலும் அணுக்கதிர் வீச்சாலும் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றார். அவருடன் வெளியுறவுத் துறை இணை செயலாளர் கவுதம் உள்ளிட்ட வெளியுறவு துறை அதிகாரிகளும் சென்றனர். அவர்களை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அகிதகா சைகி வரவேற்றார். அவரிடம் ஜப்பான் மக்களுக்கு ஆழ்ந்த கவலையை பிரதமர் தெரிவித்தார்.

ஜப்பான் தூதரகத்துக்கு சென்ற பிரதமர்!

புதுடில்லி : மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேறுவதால், மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.

லோக்சபாவில் காங்கிரஸ் கட்சிக்கு 207 எம்.பி.,க்களும், திரிணமுல் காங்கிரசுக்கு 19 எம்.பி.,க்களும், தி.மு.க., 18, தேசியவாத காங்கிரஸ் 9, தேசிய மாநாட்டு கட்சி 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, ஜே.வி.எம்., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 1 எம்.பி.,க்களும் உள்ளனர். அதாவது 260 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த 18 எம்.பி.,க்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால், காங்கிரஸ் கூட்டணியின் பலம் 242 ஆகக் குறையும்.தற்போது லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. இதில், தனிப் பெரும்பான்மைக்கு 272 உறுப்பினர்கள் ஆதரவு அவசியம். தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றால் கூட, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதால், அரசுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது.

லோக்சபாவில் சமாஜ்வாடி கட்சிக்கு 22 எம்.பி.,க்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 எம்.பி.,க்களும் உள்ளனர். சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி.,யான ஜெயப்பிரதாவும் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இவர்கள் தவிர, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நான்கு பேர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று பேரும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கின்றனர்.இந்த ஆதரவுகளை எல்லாம் கணக்கில் கொண்டால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 311 எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளது. அதனால், அரசுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

தி.மு.க., விலகல் காங்., மழுப்பல் : காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக தி.மு.க., அறிவித்தது குறித்து கருத்து தெரிவிக்க, காங்., மறுத்துவிட்டது.

காங்., செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, நிருபர்களிடம் கூறியதாவது:காங்., - தி.மு.க., இடையிலான தொகுதி உடன்பாட்டில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை இன்னமும் எங்களுக்கு உள்ளது. இது போன்ற ஒரு சூழலில், ஐ.மு., கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., விலக்கிக் கொள்வதாக அறிவித்தது குறித்து, எதுவும் கூற முடியாது. அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில், அது குழப்பத்தையே ஏற்படுத்தும்.இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

பா.ஜ., கருத்து :"மத்திய அரசிலிருந்து தி.மு.க., விலகியதால் உருவாகியுள்ள சூழ்நிலைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தொடர்ச்சியாக பல ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கித் தவிக்கும் மன்மோகன்சிங் அரசுக்கு இது மற்றொரு அடியாகும்' என, பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.

மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமா?

புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நேற்று சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து, பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைப்பது குறித்தும், அரபு நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் விவாதித்தார். இவர்களது உரையாடல் 40 நிமிடங்கள் நீடித்ததாக, ஜனாதிபதி மாளிகை தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பிரதமர் சந்திப்பு

புதுடில்லி:""2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னையால், குளிர்கால கூட்டத்தொடர் முழுவதுமாக வீணடிக்கப்பட்டது. தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களுக்கு, சேவை செய்ய தவறி விட்டோம். அதுபோல அல்லாமல், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க வேண்டும். அவை அலுவல்கள் முழுவதுமாக நடைபெற வேண்டும். அதற்கு வழி செய்யும் வகையில் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வழிமுறைகள் விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நேற்று முன்தினம் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையுடன் பார்லிமென்ட் கூடியது. இதையடுத்து, முறைப்படி நேற்று லோக் சபாவும், ராஜ்ய சபாவும் வழக்கமான அலுவல்களுடன் இயங்க துவங்கின. அனைவரும் எதிர்பார்த்த "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் மீதான விசாரணை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வாசிக்க இருந்ததால் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.சமீபத்தில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் சிலர் கேபினட்டில் இடம் பிடித்தனர். இதனால், லோக்சபா கூடியதும் அந்த அமைச்சர்களை அவைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்தினார். இந்த அறிமுக படலம் முடிந்ததும் "2ஜி' ஸ்பெக்ட்ரம் குறித்து கூட்டுக்குழு அமைப்பது குறித்த முடிவை அறிவித்தார்.

அப்போது பிரதமர் கூறியதாவது:கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் எந்த அலுவல்களும் நடைபெறவில்லை. அந்த கூட்டத்தொடர் முழுவதுமாக வீணடிக்கப்பட்டது. அதற்கு காரணம் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த ஊழல் தான். இப்பிரச்னைக்காக பார்லிமென்ட் முற்றிலுமாக முடங்கி விட்டது. அத்தியாவசிய அலுவல்கள் கூட நடைபெறாமல் போனது. இதன் மூலம் நம்மை தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களுக்கு, உரிய சேவை செய்ய தவறி விட்டோம்.ஊழல்களை ஒழிக்க வேண்டுமென்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்கு தேவைப்படும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு குறித்து, ஏற்கனவே சி.பி.ஐ., விசாரணை நடத்துகிறது. பார்லிமென்டின் பொதுக்கணக்கு குழு விசாரிக்கிறது.சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் குழு விசாரித்து முடித்து, அந்த அறிக்கை மக்கள் மத்தியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தவிர தொலைத்தொடர்பு துறை அமைச்சமும் விரைந்து செயல்படுகிறது. இவ்வளவு நடவடிக்கைகள் இருந்தும் கூட எதிர்க்கட்சிகள் இடைவிடாமல் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென்று வலியுறுத்துகின்றன.

இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவது, வீணடிக்கப்படுவது என்பதெல்லாம் நடக்க கூடாது. அதனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இக்குழுவை அமைப்பது தொடர்பான வழிமுறைகள் அனைத்தும் ஆலோசிக்கப்பட்டு முடிவு விரைவில் அறிவிக்கப்படும். கூட்டுக்குழு அமைக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து, இனிமேல் பார்லிமென்டின் அவை நடவடிக்கைகள் எல்லாம் சுமுகமாக நடைபெற வேண்டும்.இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, "கூட்டுக்குழு அமைப்பதற்கு ஒப்புக் கொண்ட பிரதமக்கு மிக்க நன்றி. இவ்விஷயத்தில் யாருக்கும் வெற்றியும் அல்ல; யாருக்கும் தோல்வியும் அல்ல. இது ஜனநாயகத்தின் வெற்றி' என்றார்.

முலாயம் சிங் பேசும் போது, "இந்த கூட்டுக்குழுவை அமைப்பதற்கு முன்கூட்டியே அரசு ஒப்புக் கொண்டிருந்திருக்கலாம். அவ்வாறு ஒப்புக் கொண்டிருந்தால் குளிர்கால கூட்டத்தொடர் வீணாகியிருக்காது' என்றார்.

குருதாஸ் தாஸ் குப்தா பேசும்போது, "பிரதமருக்கு சுஷ்மா சுவராஜ் எதற்காக நன்றி தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை. பிரதமர் செய்திருப்பது அவரது கடமையை. அதுவும் மிக தாமதமாக தன் கடமையை பிரதமர் செய்துள்ளார். அதற்கு நன்றி சொல்லவோ, பாராட்டு சொல்லவோ அவசியமில்லை' என்றார்.

சரத்யாதவ் பேசும் போது, "2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்னைக்கு மட்டும் கூட்டுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ.,வில் கொள்ளை நடந்துள்ளது. ஆதர்ஷ் ஊழல் உள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. இவை பற்றியெல்லாம் பூசி மொழுகப்பட்டு, ஸ்பெக்ட்ரம் பற்றி மட்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சரியல்ல' என்றார்.

தம்பித்துரை பேசும் போது, "கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென்று, கடந்த 2 ஆண்டுகளாக இடைவிடாமல் வலியுறுத்தி வந்தது அ.தி.மு.க., மட்டுமே. அமைக்கப்படபோகும் கூட்டுக்குழுவில் சிறிய கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்' என்றார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் விஷயத்தின் மையமாக விமர்சிக்கப்படும் தி.மு.க., சார்பில், நேற்று அவையில் கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இதுவரை எத்தனை ஜே.பி.சி., : இதுவரை, நான்கு முறை, பார்லிமென்ட் கூட்டுக்குழு (ஜே.பி.சி.,) விசாரணை நடத்தப்பட்டுள்ளது.முதன்முறையாக, போபர்ஸ் பீரங்கி பேர ஊழலுக்காக ஜே.பி.சி., அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான தீர்மானம், 1987, ஆக., 6ம் தேதி, அப்போதைய ராணுவ அமைச்சர் கே.சி.பந்த்தால் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இக்குழுவின் தலைவராக சங்கரானந்த் இருந்தார். மொத்தம், 50 முறை கூட்டம் நடத்தப்பட்டு, 1988, ஏப்., 26ம் தேதி, இதற்கான அறிக்கை, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இரண்டாவதாக பண பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட முறைகேடுகளை விசாரிக்க ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானம், 1992, ஆக., 6ம் தேதி, அப்போதைய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தால் நிறைவேற்றப்பட்டது. இதன் தலைவராக ராம் நிவாஸ் சர்மா இருந்தார். மொத்தம், 91 முறை இக்குழு கூடி, 1993, டிச., 21ம் தேதி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

மூன்றாவதாக, பங்குச் சந்தை ஊழல் குறித்து விசாரிக்க, ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானம், 2001, ஏப்., 26ம் தேதி, அப்போதைய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜனால் நிறைவேற்றப்பட்டது. இதன் தலைவராக எஸ்.பி.எம்.திரிபாதி இருந்தார். 105 முறை கூட்டம் நடத்தப்பட்டு, 2002, டிச., 19ம் தேதி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

நான்காவதாக, குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லிகள் கலக்கப்படுவதாக எழுந்த பிரச்னை குறித்து விசாரிக்க, ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானம், 2003, ஆக., 22ம் தேதி, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜால் நிறைவேற்றப்பட்டது. இதன் தலைவராக சரத் பவார் இருந்தார். 17 முறை கூட்டம் நடத்தப்பட்டு, 2004ம் ஆண்டு பிப்., 4ம் தேதி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ராஜ்ய சபாவில் வாக்குவாதம் : ராஜ்ய சபாவில் கேள்வி நேரம் முடிந்ததும், பிரதமர் மன்மோகன் சிங் கூட்டுக்குழு அமைப்பது குறித்த தன் உரையை வாசித்தார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, பிரதமரின் அறிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.கடந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் வீணடிக்கப்பட்டதற்கு "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஊழல் என்பது போல பிரதமர் பேசுகிறார். எதிர்க்கட்சிகள் மீது பழி போடுவது போல இந்த அறிக்கை உள்ளது. கூட்டுக்குழு அமைப்பது தொடர்பாக அரசின் தொடர் பிடிவாதமே குளிர்கால கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்டதற்கு காரணம்' என்று குறிப்பிட்டார்.இதனால், அவையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., - அ.தி.மு.க., கட்சி எம்.பி.,க்களுக்கு இடையில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

"ஜவ்வ்வ்வாய்' இழுத்த ஜே.பி.சி., : 2007 மே 18: தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
ஆக., 18: டிராய் (மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சந்தை விலை நிர்ணயம் உள்ளிட்ட பரிந்துரைகளை, தொலைத்தொடர்பு அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது.
ஆக., 28: ராஜா தலைமையிலான மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம், டிராயின் பரிந்துரைகளை நிராகரித்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, "முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிப்பது' என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. 2001ல், 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். 2007 முதல், 2008 வரையிலான காலத்தில், இது, 35 கோடியாக உயர்ந்திருந்தது. இதனால், அரசுக்கு வரவேண்டிய வருமானம் வராமல், இழப்பு ஏற்படக் காரணமாக, இந்த முடிவு அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
செப்., 20 - 25: "யூனிடெக், லூப், டாடாகாம் மற்றும் ஸ்வான்' ஆகிய நிறுவனங்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமத்தை பெற்றன. யூனிடெக் மற்றும் ஸ்வான் ஆகிய இரு நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறையில் முன் அனுபவம் இல்லாத நிறுவனங்கள்.
2007 டிசம்பர்: இவ்விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி ராஜினாமா செய்தார். ஸ்வான் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இரு அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டனர். இதன்மூலம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எளிதாக நிறைவேறியது.
2008 ஜன., 1 - 10: அமைச்சர் ராஜா, சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது செயலராக பணியாற்றிய சித்தார்த்தா பெகுராவை தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் செயலராக நியமித்தார். பின் தொலைத்தொடர்பு அமைச்சகம், 10 நாட்களில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான ஒன்பது லைசென்ஸ் உரிமங்களை வழங்கியது. மேலே குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களும் ஒதுக்கீடு பெற்றன.
செப்., - அக்.,: ஸ்வான் நிறுவனம், 45 சதவீத பங்குகளை எட்டிசேலட் என்ற ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த நிறுவனத்துக்கு, 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக் நிறுவனம், 60 சதவீத பங்குகளை, டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு, 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைத்தொடர்புத் துறை லைசென்சை, 1,661 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்து யூனிடெக் நிறுவனம் வாங்கியிருந்தது. டாடா டெலிசர்வீசஸ், 26 சதவீத பங்குகளை டோகோமா என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு, 13,230 கோடி ரூபாய்க்கு விற்றது.
இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், 70 ஆயிரத்து 22.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால், தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு, 10 ஆயிரத்து 772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. இதனால், ஒதுக்கீடு செய்யப்பட்ட, ஒன்பது லைசென்சில் மட்டும், 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
2009 அக்., 21: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
2010 ஏப்., 12: சுப்பிரமணியசாமி, டில்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல்.
அக்., 29: மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,க்கு "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், மந்தமாக செயல்படுவதாகக் கூறி சுப்ரீம் கோர்ட் கண்டனத்தை தெரிவித்தது.

சபை சுமுகமாக நடக்க ஜே.பி.சி., அமைக்க முடிவு : பிரதமர் அறிவிப்பு

பிரதமர் மன்மோகன்சிங்கை சனிக்கிழமையன்று டில்லியில் சந்தித்த வைகோ, அவருடன் அரசியல் பேசவில்லை; தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தினேன் என்று கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கை சனிக்கிழமை காலை டில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா குறித்து அவர் எழுதிய `யெஸ் வி கேன்' என்ற நூலைக் கையெழுத்திட்டு பிரதமரிடம் கொடுத்தார். பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கயல்விழி என்கிற அங்கயற்கண்ணி, இலங்கை ராணுவத்தினரால், ஓமந்தையில் கைது செய்யப்பட்டு உள்ள செய்தியை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். அவர்களை உடனடியாக விடுவித்து, பாதுகாப்பாகத் தமிழகம் திரும்பிட ஆவன செய்திடுமாறு தங்களிடம் கேட்டுக்கொண்டேன்.

நேற்று இரவு, அவர்கள் பாதுகாப்பாகத் தமிழகம் திரும்பி விட்டார்கள். அதற்காக தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போரிடுகிறோம் என்ற போர்வையில், இலங்கை அரசு தமிழர் இனக்கொலையை நடத்தி இருக்கிறது. அந்தப் படுகொலைகளைத் தடுப்பதற்குப் பதிலாக, இந்திய அரசு, இலங்கைக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து இருக்கிறது.

அதற்கும் மேலாக, இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சிறப்பு விருந்தினராக, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுப் பெருமைப்படுத்தியது தமிழரின் மனக்காயங்களை மேலும் குத்திக் கிளறி இருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளில், தமிழ்நாட்டு மீனவர்கள் சிந்திய வியர்வையும், சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி அவர்கள் உடலில் இருந்து கொட்டிய ரத்தமும், பாக் நீரிணையில் கலந்து இருக்கிறது. இந்திய கடற்படையும், கடலோரக் காவல்படையும், அத்தனை கொடுமைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததே தவிர, சிங்களக் கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை. தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டியது, இந்திய கடற்படை, கடலோரக் காவல்படையினரின் கடமை இல்லையா?

குஜராத் மீனவர்கள் எத்தனையோ முறை கடல் எல்லையைத் தாண்டிச் சென்றபோதிலும்கூட, பாகிஸ்தான் கடற்படை ஒருபோதும் அவர்களைத் தாக்கியது இல்லை. ஆனால், இலங்கைக் கடற்படை, 500 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்று விட்டது. இந்தப் பிரச்சனையின் கடுமையை உணர்ந்து, இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை அல்லவா? எனவே, இந்தப் பிரச்சினையை தொலைநோக்குப் பார்வையோடு அணுகுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ குறிப்பிட்டு உள்ளார். சந்திப்பு முடிந்து வெளியில் வந்தபோது, வைகோவிடம் செய்தியாளர்கள், `நீங்கள் வேறு அரசியல் பற்றிப் பேசினீர்களா?' என்று கேட்டனர்.

`இல்லை. நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் வலுவாக இருக்கிறோம். தி.மு.க., காங்கிரசைத் தமிழ்நாட்டில் தோற்கடிக்க உறுதியோடு இருக்கிறோம். அந்த அணி, படுதோல்வி அடையும். அ.தி.மு.க. அணி வெல்லும். அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். அதனால், நான் வேறு அரசியல் எதுவும் பிரதமரிடம் பேசவில்லை' என்றார் வைகோ.

பிரதமருடன் அரசியல் பேசவில்லை: வைகோ!

முக நூல்

Popular Posts