background img

புதிய வரவு

Showing posts with label Court. Show all posts

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடந்து.

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையொட்டி திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, இதய நோயாளியான திமுக எம்பி ஆதிசங்கர் திடீரென நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

2ஜி விசாரணை: நீதிமன்றத்தில் திமுக எம்பி மயங்கி விழுந்தார்

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடந்து.

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையொட்டி திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, இதய நோயாளியான திமுக எம்பி ஆதிசங்கர் திடீரென நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் வள்ளி தன்னுடன் பணிபுரிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் செக்ஸ் தொல்லைகள் கொடுத்ததாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் பெண் ஊழியர்கள் மீதான செக்ஸ் புகார் தொடர்பாக உச்சநீதிமன்ற ஆணைப்படி கமிட்டி அமைக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

வள்ளி மீதான புகார் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரவு 7 மணிக்கு தொடங்கிய விசாரணை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வள்ளியின் தரப்பு வக்கீல் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து வக்கீல் மணிகண்டன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் போலீசுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட வில்லை. இந்த நிலையில் குழு இருப்பது போன்று அதிகாரிகள் வள்ளியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு நோட்டீஷ் அனுப்பப்பட்டது.

ஆனால் அதற்கு பதில் வரவில்லை. இதையடுத்து டி.ஜி.பி.போலோநாத் மற்றும் விசாரணை செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, சூப்பிரண்டின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வார், துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி, தொண்டு நிறுவன தலைவி கலைவாணி, இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் அரசியில் பிரமுகர் ஒருவர் உள்பட 8 பேர் மீது ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே வள்ளி தன்னை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக உள்துறை செயலாளருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் ஒரு புகார் மனு கொடுத்து அனுப்பினார். அந்த மனுவை சூப்பிரண்டு திருப்பி அனுப்பி விட்டதாகவும், இன்ஸ்பெக்டர் மூலம் அந்த மனுவை அனுப்பும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறுப்படுகிறது.

பெண் போலீசிடம் நள்ளிரவு விசாரணை: டி.ஜி.பி, எஸ்.பி. மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

நெல்லைக்கு சுற்றுலா வருபவர்களும், தொழில் நிமித்தமாக வருபவர்களும் மறக்காமல் வாங்கி செல்லும் பண்டம் இருட்டுக்கடை அல்வா. வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களை கூட இருட்டுக்கடை அல்வா சுண்டி இழுத்து வருகிறது. அந்த அளவுக்கு பிரசித்தம் பெற்ற இந்த இருட்டுக்கடை நெல்லை டவுனில் நெல்லையப்பர் கோவில் எதிரே அமைந்துள்ளது.
இந்த கடையில் 45 வாட்ஸ் பல்பு மட்டுமே போடப்பட்டுள்ளதால் வெளிச்சம் குறைவாக இருக்கும். இதனால் இதற்கு இருட்டுக்கடை என்ற பெயர் ஏற்பட்டது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையே திறக்கப்படும் இந்த இருட்டுக்கடையில் அல்வா வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். கடை திறக்கும் முன்னரே வாடிக்கையாளர்கள் கூடி விடுவார்கள்.

இந்த அளவுக்கு காந்தம் போல் அனைவரையும் கவர்ந்திழுத்த இருட்டுக்கடை அல்வாவை நெல்லையில் அறிமுகப்படுத்தியவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர். சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல குடும்பத்தினர் பிழைப்பு தேடி நெல்லைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சொக்கப்பட்டி அரண் மனையில் பணிக்கு சேர்ந்தனர். அவர்களில் ஒருவர்தான் 1882-ம் ஆண்டு வந்த ஜகன்சிங். ராஜஸ்தான் இனிப்பு வகைகள் செய்வதில் ஜகன்சிங் வல்லவர். அவர் சில ராஜஸ்தான் வகை இனிப்புகள் தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

ராஜஸ்தான் இனிப்பு வகையில் ஒன்றான அல்வாவையும் தயாரித்து தள்ளுவண்டியில் தெருத்தெருவாக சென்று விற்று வந்தார். வழக்கமான இனிப்பையே சுவைத்து வந்த அப்பகுதி மக்களுக்கு ஜகன்சிங்கின் புது வகை இனிப்பான அல்வா மிகவும் பிடித்து விட்டது. இதனால் அல்வாவுக்கு தனி மவுசு ஏற்பட்டது. இதனால் அல்வா வியாபாரம் சூடுபிடிக்கத்தொடங்கியது.

ஜகன்சிங் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அதில் ஈடுபடுத்தி வியாபாரத்தை விருத்தி செய்தார். அவர்களின் வழி தோன்றல்கள் தான் நெல்லை பகுதியில் சுவீட் கடைகளை நடத்தி அல்வா வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் இருட்டுக்கடை தனி முத்திரை பதித்தது. இதனால் அங்கு அல்வா விற்பனை நாளுக்கு நாள் அமோகமானது.அல்வா என்றாலே இருட்டுக்கடைதான் என்ற நிலை மக்கள் மனதில் ஏற்பட்டது.

இதனால் நெல்லையின் பல இடங்களில் இருட்டுக் கடை என்ற பெயரில் புதிய கடைகள் முளைத்தன. பஸ்,ரெயில் நிலையங்களிலும் பலர் இருட்டுகடை அல்வா என்ற பெயரில் பிளாஸ்டிக் பைகளில் தரம் குறைந்த அல்வா விற்று வருகின்றனர். இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகுகின்றனர்.

இந்தநிலையில் நெல்லை டவுனில் இருட்டுக்கடை(ஒரிஜினல் கடை) நடத்தி வரும் சுலோசனா பாய் , நெல்லை முதலாவது விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகே 1900-ஆண்டில் இருந்து என்னுடைய மாமனார் கிருஷ்ணசிங் லாலா கடை நடத்தி வருகிறார். அதில் அல்வா மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த கடையில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை அல்வா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடையில் 45 வாட்ஸ் மின்சார பல்ப் மட்டுமே எரிய விடப்படும். வெளிச்சம் குறைவாக இருப்பதால் இந்த கடையை இருட்டுக்கடை அல்வா கடை என்று மக்களால் அழைக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.

இந்தநிலையில் நெல்லை சந்திப்பில் `திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா 'என்ற பெயரில் அந்த பகுதியை சேர்ந்த செய்யது முகைதீன் என்பவர் கடந்த 22-6-2007 முதல் கடையை தொடங்கி நடத்தி வருகிறார். இருட்டுக்கடை என்ற பெயரில் அவர் கடை நடத்துவதால் என் வியாபாரம் பாதிக்கிறது. எனவே இருட்டுக்கடை பெயருக்கு முன்போ, பின்போ வேறுவார்த்தைகளை சேர்த்து அல்வா கடை நடத்தக்கூடாது என்று உறுத்துக்கட்டளை பிறப்பிக்க வேண்டும். பை, பேக்குகளில் இந்த பெயரை அவர் பயன்படுத்தக்கூடாது. 2007-க்கு பிறகு விற்பனைக் கணக்குகளையும் லாபத்தையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக அவர் 27 சான்றுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொன்பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரரின் கடையை பிரதிபலிக்கும் படியாக திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்று அச்சடித்தோ, விளம்பரம் செய்யவோ கூடாது. இருட்டுக்கடை என்ற வார்த்தையுடன் முன்போ, பின்போ வேறு வார்த்தைகள் சேர்த்து அந்த முகவரியில் அல்வா வியாபாரம் செய்யக்கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்வாவுக்கு புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா என்ற பெயரில் வேறு யாரும் கடை நடத்த தடை; நெல்லை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

நடிகை தமன்னா நடித்த சோப்பு விளம்பர படத்தை ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் வெளியிட்டு வந்ததால் அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக நடிகை தமன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப்பு விளம்பரத்தில் ஒரு ஆண்டு ஒப்பந்தம் போட்டு நடித்துக் கொடுத்தேன்.

இப்போது விப்ரோ என்ற சோப்பு நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளேன். பவர் சோப்பு விளம்பர படத்தை ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் வெளியிட்டு வருவதால், நான் புதிய விளம்பரத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த விளம்பரத்தில் நான் நடித்ததை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்து மேற்கண்ட விளம்பர படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேலும் பவர் சோப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

நடிகை தமன்னா கோர்ட்டில் வழக்கு

டெல்லி: 2ஜி ஊழல் விவகாரத்தி்ல் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியாலிட்டி நிறுவன இயக்குனர் பல்வா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரியாரா ஆகியோரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் 80,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிஐ கடந்த 2ம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கையை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யவிருக்கிறது. இதற்கிடையே சிறையில் இருக்கும் ஆ.ராசா ஜாமீனில் விடுவிக்கக்கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதேபோன்று பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகியோரும் ஜாமீன் கேட்டு தனித்தனியாக மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை விரைவில் நடைபெறவிருக்கிறது.

2ஜி வழக்கில் ஜாமீன் கேட்டு கார்பரேட் பிரமுகர்கள் மனு

2ஜி வழக்கி்ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கார்பரேட் நிறுவன பிரமுகர்கள் ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் மனு குறி்த்து பதில் அளிக்குமாறு சிபிஐயை நீதிமன்றம் கேட்டு்க் கொண்டுள்ளது.

ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா மற்றும் ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் உயர் அதிகாரிகளான கௌதம் டோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் இன்று முதன்முறையாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இந்நிலையில் சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித் அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்க லலித் கால அவகாசம் கேட்டார். இதையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி் சைனி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், அன்று சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

2ஜி ஊழல்: ஜாமீன் கேட்டு ராசா மனு-விரைவில் விசாரணை

அமெரிக்காவில் விசிதா நகரைச் சேர்ந்தவர் வெஸ்லி பிரவுன். 103 வயதான இவர் அங்குள்ள மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாக பணி புரிகிறார். இந்த தள்ளாத வயதிலும் அவர் சிறப்பாக பணியாற்றுகிறார். அவரால் நடக்க முடியவில்லை.எனவே சக்கர நாற்காலியில் வருகிறார்.

கடந்த 49 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறார்.அமெரிக்க அதிபராக இருந்த கென்னடி தனது பதவி காலத்தில் 4 பேரை “பெடரல்” நீதிபதியாக நியமனம் செய்தார். அவர்களில் இவரும் ஒருவர். தற்போது பணி புரியும் நீதிபதிகளில் மிகவும் மூத்தவர் இவர் தான்.

தற்போதுள்ள 1294 பெடரல் நீதிபதிகளில் இவர் 516-வது நபர். ஏற்கனவே ஓய்வு பெற்ற இவர் தற்போது பாதி சம்பளத்தில் பணி புரிகிறார். அமெரிக்க நீதிபதிகளில் இவர்தான் அதிக நாள் பணிபுரிந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அமெரிக்க கோர்ட்டில் 103 வயதில் பணிபுரியும் நீதிபதி

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா அவரது உதவியாளர் சந்தோலியா, தொலை தொடர்பு முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் உஸ்மான் பல்வா ஆகிய 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சிபிஐ அழைத்து விசாரித்தது. 2 தொலை தொடர்பு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் மார்ச் 31-ந் தேதிக்குள் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும் என்று சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் விசாரணை இன்னும் முடிவடையாததால் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்தது. அந்த குற்றப்பத்திரிகையை தயார் செய்யும் பணியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

தற்போது முதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு பணி முடிந்துவிட்டது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு இந்த குற்றப் பத்திரிகையை ஓரிரு நாட்களில் தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது. முதல் குற்றப்பத்திரிகையில் யார், யார் பெயர் இடம் பெற்றிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கைதான 4 பேரின் பெயர் இடம்பெறும் என்பது உறுதி ஆகி உள்ளது. அவர்களுக்கு உதவியதாக மேலும் சிலரது பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தபிறகு தொடர்ந்து விசாரணை நடைபெறும். செவ்வாய்க்கிழமை இந்த விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வர்களின் பெயர்களுடன், அவர்களுக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கும் உள்ள தொடர்பை உறுதிபடுத்தும் ஆவணங்களும் இடம் பெற்றிருக்கும். ஆனால் எத்தனை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்பது குற்றப்பத்திரிகையில் இடம் பெறாது.

ஸ்பெக்ட்ரம் நிதி இழப்பு குறித்து டிராய் அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. அந்த அமைப்பின் முடிவுக்குப்பிறகே இழப்பு குறித்து இறுதி முடிவு எடுத்து குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பு பணி முடிந்தது; ஆதாரங்களுடன் கோர்ட்டில் தாக்கலாகிறது

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, நடிகை அனுஷ்கா வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அனுஷ்கா சிங்கம், வேட்டைக்காரன் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிவபிர சாத்ரெட்டி, வெங்கட் ஆகியோர் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.

விசாகப்பட்டினத்தில் இவர்கள் சொந்தமாக வீடுகள் வாங்கி இருப்பதாகவும் அதற்கு வருமான கணக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை ஏற்பட்டது. இதில் ஏராளமான சொத்து பத்திரங்கள், தஸ்தா வேஜூக்கள், ரொக்கப் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டன. அவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.

அப்போது சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டது பற்றி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ரூ.40 கோடிக்கு புதிதாக சொத்துக்கள் வாங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி அனுஷ்காவுக்கும் நாகார்ஜுனாவுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும் இது போல் அனுப்பப்பட்டு உள்ளது.

தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார் அனுஷ்கா. ஒரு படத்துக்கு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சோதனையில் ரூ.40 கோடி சொத்து கண்டுபிடிப்பு; அனுஷ்கா, நாகார்ஜுனாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தாய்ப்பால் மூலம் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு லேடிககா என பெயரிடப்பட்டுள்ளது.மக்களிடம் அமோக வரவேற்பை பெற்ற இந்த ஐஸ்கிரீமை பிரபல நிபுணர் மாட் ஓ கார்னர் தயாரித்துள்ளார்.

இந்த ஐஸ்கிரீமுக்கு தன்பெயரை வைத்துள்ளதற்கு கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி லேடிககா கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். மேலும் தாய்ப்பால் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்யும் கான்னருக்கு தனது வக்கீல் மூலம் நோட்டீசு அனுப்பியுள்ளார்.

அதில், பிரபல பாப்பாடகி லேடிககாவின் பெயரில் உணவு பொருள் விற்பனை செய்யப்படுகிறது.தாய்ப்பாலில் வைரஸ்கள் மற்றும் மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் கிருமிகளும் இருக்கலாம். இதனால் மனிதநலத்துக்கு தீங்கானவையாக மாறலாம். இதன்மூலம் இவரது (லேடிககா) பெயருக்கு புகழுக்கும் களங்கம் ஏற்படும்.

எனவே, இந்த ஐஸ்கிரீமுக்கு சூட்டுப்பட்டுள்ள அவரது பெயரை மாற்றுங்கள் என தெரிவித்துள்ளார். ஆனால், இதை ஐஸ்கிரீம் தயாரிப்பாளர் கார்னர் மறுத்துள்ளார்.உலகின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரான லேடிககா ஒரு சாதாரண ஐஸ்கிரீம் கடைக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார்.ஆனால் அவர் இதை மறுத்து விட்டார்.

குழந்தை பேச ஆரம்பித்தவுடன் சொல்லும் வார்த்தை “க..க..” எனதான் வரும். அதைதான் எங்கள் ஐஸ்கிரீமுக்கு வைத்துள்ளோமே தவிர அவரது பெயரை அல்ல. எனவே ஐஸ்கிரீம் பெயரை மாற்ற முடியாது. அவரது வழக்கை சந்தித்து வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

வக்கீல் நோட்டீசு அனுப்பினார்: தாய்ப்பால் ஐஸ்கிரீமுக்கு என் பெயரை வைப்பதா? பாப்பாடகி லேடிககா கண்டனம்

ஆமதாபாத்: குஜராத்தில் ரயில் எரிப்பு வழக்கில் கரசேவகர்கள் 59 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து குஜராத் சிறப்பு கோர்ட் அதரடியான தீர்ப்பை வெளியிட்டது.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதியன்று உ.பி. மாநிலம் அயோத்தியா சென்று சபர்மிதி எக்ஸ்பிரஸ் மூலம் ஏராளமான சாதுக்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் வன்முறை கும்பல் ஒன்று ரயிலுக்கு தீ வைத்து எரித்தது. இதில் 59 கரசவேகர்கள் கொல்லப்பட்டடனர். இதனை தொடர்ந்து மாநிலத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் ஐ.எஸ்.ஐ., அமைப்பு தலைமறைவில் இந்த சதி திட்டம் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு அதன் தலைவர் மாஜி சி.பி.ஐ. இயக்குனர் ராகவன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை ஆமதாபாத் சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்கில் மொத்தம் 134 பேர் சேர்க்கப்பட்டனர். 80 பேர் சிறையில் உள்ளனர். 15 பேர் ஜாமீனில் உள்ளனர். 13 பேர் ஆதாரமின்மையால் விடுவவிக்கப்பபட்டனர். 16 பேர் தலைமறைவாக உள்ளனர்.

நம்பத்தகுந்த ஆதாரம்: இன்று 95 பேர் மீதான குற்றம் தொடர்பாக 31 பேர் குற்றவாளிகள் என சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ரயிலை எரித்து 59 பேரை கொன்ற சதித்திட்டம் உண்மைதான் என கோர்ட் ஏற்றுக்கொண்டது. இதற்கான ஆதாரங்களை நம்பத்தகுந்ததாக இருந்ததாக கோர்ட் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது . குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று ( செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்படி 11 பேருக்கு தூக்குத்தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு

பாட்னா:கால்நடை தீவன ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ், பீகார் முதல்வராக இருந்த போது, கால்நடை துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும்படி லாலுபிரசாத் உள்ளிட்ட பலர் சி.பி.ஐ., கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்களை பரிசீலித்த சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி பி.கே. ஜெயின், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து லாலு பிரசாத், முன்னாள் எம்.பி.,க்கள் ராணா, வித்யாசாகர் உள்ளிட்ட பலர் பாட்னாவில் உள்ள கோர்ட்டில் நேற்று ஆஜராயினர்.

லாலு கோர்ட்டில் ஆஜர்

முக நூல்

Popular Posts