background img

புதிய வரவு

சங்க இலக்கியத்தில் வானியல்

மனிதனின் அறிவியல் பிரிவின் ஒரு கூறே வானியல். இன்றைக்கு வானியலின் வளர்ச்சி மனிதனை வேற்று கிரகவாசிகளாக மாற்றும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. ஸ்பிரிட், ஆப்பர்சினிட்டி ஆகிய விண்கலங்கள் செவ்வாய்க் கோளை ஆராய மனிதனால் ஏவப்பட்டவை. மேலும், இன்றைய அறிவியலாளர்கள் ஞாயிறை விட 320 மடங்கு பெரிய, 1 கோடி மடங்கு ஒளி வீசக்கூடிய, இதுவரை வானியல் அறிஞர்களே கண்டிராத மிகப்பெரிய விண்மீனை லண்டனில் உள்ள "ஷெபீல்ட்' வானியல் துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்விண்மீனுக்கு மான்ஸ்டர் ஸ்டார் (ராட்சத நட்சத்திரம்) என்று பெயரிட்டுள்ளனர். இக்கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாக தொல் மனிதர்களின் வானியல் கண்டுபிடிப்பே அடிப்படை ஆகும். உலகில் உள்ள தொன்மையான மனித இனங்களில் ஒன்றான தமிழினம் தமக்கென வானியல் கொள்கையை சங்க இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.



பழந்தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள். தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று பகர்கின்றன. சிலேட்டர் என்னும் வானியல் அறிஞர் தமிழருடைய வானநூற்கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.

சங்கத் தமிழர் ஐம்பெரும் பூதங்களின் தோற்றங்களை வெளிப்படுத்தும்போது பரந்து விரிந்த வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியுள்ள அறிவியல் உண்மையை இவ்வுலகுக்குப் பதிவு செய்துள்ளனர்.

விசும்பில் ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
(
பரிபாடல்:2)


இப்பாடலடிகள் முறையாகத் தோன்றும் ஊழிக் காலங்களை வெளிப்படுத்துகிறது. முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றிய நிகழ்வு இன்றைய அறிவியலாரும் உடன்படு கருத்தாகும்.

தமிழர் இவ்வுலகிலுள்ள உயிர்கள் நிலைத்து வாழ ஞாயிறே முதன்மைக் காரணம் என்பதை உணர்ந்திருந்தனர். தமிழரின் பொங்கல் திருநாள் ஞாயிறை முதன்மைப்படுத்துவது ஈண்டு நோக்கத்தக்கது. திருமுருகாற்றுப்படையின் தொடக்க வரிகள், உயிர்கள் மகிழ ஞாயிறு எழுவதாக நக்கீரர் பதிவு செய்கிறார்.

உலக முவப்பு வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
(
திருமுருகு:1-3)


இங்கு, உலக உயிர்கள் ஞாயிறின் கதிர்களால் உயிர் வாழ்கின்றன. இல்லையேல் இவ்வுலகம் பனிமண்டி உலக அழிவு ஏற்படும் என்ற உண்மை புலப்பட்டு நிற்கிறது. மேலும், நற்றிணை பாடலொன்று, ஞாயிறு இருளைப்போக்க அதன் உட்பகுதி நெருப்பினால் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் அதைச் சுற்றிலும் ஒளிப்படலம் உள்ளது என்றும் கூறுகிறது. அப்பாடலடிகள் வருமாறு.

வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு
(
நற்:163)


இதன் மூலம், பழந்தமிழர்கள் ஞாயிறை நெருப்புக் கோளம் என்கின்றனர். இன்றைய அறிவியல் அறிஞர்களும் ஞாயிறு வடிவமற்று எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்புக் கோளம் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். இன்றைய வானியலறிஞர்கள் ஞாயிறை ஒன்பது கோள்கள் சுற்றுவதாகக் கண்டறிந்துள்ளனர். இந்நிகழ்வின் எச்சத்தை சிறுபாணாற்றுப்படையில் காணமுடிகிறது.

வாணிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
(
சிறுபாண்: 242-43)


என்னும் வரிகள், ஞாயிறைச் சுற்றிலும் கோள்கள் சூழ்ந்துள்ள உண்மைப் பதிவைப் புலப்படுத்துகின்றன. இதன் மூலம் பல கோள்கள் ஞாயிறைச் சுற்றிவந்தன என்று தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பூமியை ஞாயிறின் கோளாக இவர்கள் கண்டறியவில்லை. மாறாக காட்சிப் பார்வையின் அடிப்படையில் பூமியை ஞாயிறும் சந்திரனும் சுற்றுவதாக நம்பினர். இதை,

குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப்
பாயிருள் அகற்றும் பயங்கெழு பண்பின்
(
பதிற்று: 22:33-34)


இங்கு, ஞாயிறு கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைவதையும், பூமி நிலையாக ஓரிடத்திலேயே இருப்பதாகவும் காட்சிப் பார்வையின் அடிப்படையில் அறிவியல் உண்மையை அறியாது இருந்த செய்தியும் வெளிப்பட்டு நிற்கிறது.

மேலும், திருப்பாவை 13, புறம்:26:1-2; புறம் 117:1-2; பதிற்றுப்பத்து 13:25-26; ஆகிய பாடல்கள் மூலமும் அறியமுடிகிறது.

தமிழரின் வானியல் அறிவு இன்றைய அறிவுசார் உலகுக்கு ஒரு முன்னோடி என்பதில் ஐயமில்லை.


தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ட்விட்டருக்கு தடை விதிக்க பரிசீலனை

கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் ட்விட்டர் இணையளதளத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

வடகிழக்கு மாநில மக்கள் இடையே கடந்த மாதம் வதந்தியை கிளப்பும் வகையில் தகவல்களை வெளியிட்டதாக கூறி இந்த நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் கடந்த மாதம் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

செல்போன் மற்றும் இணையதளங்களே இந்த வதந்தி வேகமாக பரவக் காரணம் என்பதை அறிந்த மத்திய அரசு செல்போனில் எஸ்.எஸ்.எம். அனுப்ப கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இப்போது நிலைமை சீரடைந்தபின் அந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மக்களிடையே விரோதத்தை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிட்டதாக 310 இணைய தளங்கள் கண்டறியப்பட்டு அவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டன.

கர்நாடகா, தமிழ்நாடு, அஸ்ஸாம், மகாராஷ்டிரா,உத்தரப்பிரதேசம் உள்பட 8 மாநிலங்களில் இந்த வதந்தி கிளப்பப்பட்டதாக மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.

இதனையடுத்து இந்த மாநிலங்களில் ட்விட்டர் இணையதளத்தை எப்படி முடக்குவது பற்றி தொழில்நுட்ப வல்லுனர்களிடம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆலோசனை கேட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி இத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதே நேரத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பிரதமரின் முதன்மைச் செயலாளர் புலோக் சாட்டர்ஜி ஆகியோர் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

முன்னதாக டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், இணையம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டி, அதனைத் தடுக்க மத்திய அரசு சைபர் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்திருந்தார்.


-விகடன் இணையதளம் 

சீன நாட்டில் தமிழ் கல்வெட்டு

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.
சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.
சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.
சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

உலகைக் குலுக்கிய புகைப்படங்கள் !!

நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்...!


உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !

சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே..  அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின்  தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர்  உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.


போரை நிறுத்திய சிறுமியின் கதறல் !



  

ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில்அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வரஅப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.

வறுமை உடலை கொத்த நின்ற கழுகு


1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகைஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமேஎன்ற சர்ச்சை எழபின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கற்பிழந்த இந்திய ஆர்மி !



மணிப்பூர் பெண்களை இந்திய ராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த போராட்டம் இந்திய ராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்க செய்தது.
 

பிரபாகரன் இல்லை !



 "பிரபாகரன் இல்லை..  இல்லை.. ஆனால் பிரபாகரன் தான்" என்று இலங்கை அரசு  காட்டிய பிரபாகரனின் மரணப் புகைப்படம்  வெளிவந்த நிமிடம் பல கேள்விகளையும்சர்ச்சைகளையும் எழுப்பியது. சர்வதேச ஊடகங்கள் அப்புகைப்படத்தின் மீதான ஆய்வை நடத்தின. இதுவரை அதை பற்றிய தெளிவான தகவல் இல்லை.

 

ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !



செப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன.  அன்று ஆடிப்போன அமெரிக்காபின்லேடனை கொன்றதோடுஇன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.

 
நெஞ்சில் புதைந்த அணுக்குண்டு





இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்ததுஊனமாக பிறக்க வைத்ததுதோலை கருக்கியதுகதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.





 நன்றி:விகடன்.காம்



விண்ணைத்தாண்டி வருவாயாவை விட அதிக விலைக்குப் போன நீதானே என் பொன்வசந்தம்!

இசைஞானி இளையராஜா இசையில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியது.

Sony Music Acquires Neethane Enn Ponvasantham சமீபத்தில் எந்தப் பட இசைக்கும் தராத மிகப் பெரிய விலையை நீதானே என் பொன்வசந்தத்துக்கு கொடுத்துள்ளது சோனி.

கவுதம் மேனன் இயக்கத்தில், ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஜீவா - சமந்தா நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது.

இளையராஜா இசை என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இந்தப் படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு. படத்துக்காக வெளியான இசை முன்னோட்டம் அந்த எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

ரூ 2.5 கோடிவரை இந்தப் படத்தின் இசை உரிமைக்கு விலை தர சோனி நிறுவனம் முன்வந்ததாகக் கூறப்பட்டது. இது ரஹ்மான் இசையில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயாவை விட மிக அதிகம்.

இந்த நிலையில், சோனிக்கு நீதானே என் பொன்வசந்தம் இசை உரிமை விற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 1-ம் தேதி இசை வெளியீடு பிரமாண்டமாக நடக்கவிருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

ஷங்கரின் புதிய மெகா பட்ஜெட் படம் 'ஐ' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Shankar Titles His New Movie I
தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக 'ஐ' எனப் பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இந்தப் படத்தில் ஷங்கருடன் இணைபவர் விக்ரம். நாட்டின் தலையாய பிரச்சினையான தேர்தல் முறைகேடுகள் பின்னணியில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.
படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழில் 'ஐ' என்றால் ஐவர் என்று ஒரு பொருள் உண்டு. ஆங்கிலத்தில் 'நான்' என்று சொல்லலாம்.
படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக அவர் மணிரத்னம் படத்தை துறந்ததோடு, மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம்.
விரைவில் படத்தின் பிற விவரங்களை ஷங்கர் வெளியிடவிருக்கிறார்.

தினம் 5 மணி நேரம் உடற்பயிற்சி- அடுத்த ரிஸ்க்குக்கு ஆயத்தமாகும் அஜீத்!

தனது அடுத்த படத்தில் மிக ஸ்லிம்மாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக தினமும் மணி நேரம் கடும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் அஜீத்.
விஷ்ணுவர்த்தன் இயக்க நயன்தாராம ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் இந்தியில் வெளியான ரேஸ் படத்தின் ரீமேக் என்கிறார்கள்.

Ajith Spends 5 Hours Gym படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு கடந்த 18-ந்தேதி பெங்களூரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆர்யாவும் நடிக்கிறார். நாயகிகளாக நயன்தாரா, டாப்ஸி நடிக்கின்றனர்.

இந்த படத்தில் அஜீத்தை மங்காத்தாபோல் இல்லாமல் மிகவும் இளமையாக காட்டப் போகிறாராம் விஷ்ணுவர்த்தன். இதற்காக தலைமுடி காஸ்ட்யூம் என எல்லாவற்றையும் மாற்றுகிறார்கள்.

அத்துடன் உடல் எடையை குறைக்கும்படியும் கேட்டுக் கொண்டாராம். இதனை ஏற்று அஜீத் கடந்த 7 நாட்களாக ஜிம்முக்கு செல்கிறார். தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து விஷ்ணுவர்த்தன் கூறும்போது, தீவிர உடற்பயிற்சி செய்கிறார் அஜீத். அவரது உருவம் இப்போது நம்ப முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது," என்றார்.

விஜய்யின் துப்பாக்கி படத் தலைப்புக்கு நீதிமன்றம் தடை!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் தலைப்பை பயன்படுத்த கோர்ட் தடை விதித்துள்ளது.

Chennai Court Bans Thuppakki Title நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளார் ரவிதேவன். இவரது தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ‘கள்ளத்துப்பாக்கி' என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பு வைக்கப்பட்டது.

துப்பாக்கி படத்தின் டைட்டில் டிசைனும் கள்ளத்துப்பாக்கி படத்தின் டைட்டில் பாணியில் இருந்தது.

இதையடுத்து கள்ளத்துப்பாக்கி குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக இருப்பதால், தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்துக்குப் போனார்கள் கள்ளத்துப்பாக்கி குழுவினர்.

கள்ளத்துப்பாக்கி குழுவினரின் மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்!

ஜூலை 5 முதல் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: 3,900 பேருக்கு அழைப்பு

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் 5ம் தேதி துவங்குகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 27,877 மாணவ-மாணவியர் விண்ணப்பதிருந்தனர். அவர்கள் அனைவரின் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதையடுத்து ரேங்க் பட்டியல் கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 3,900 பேருக்கு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் 5ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் அடங்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது.
மேலும் அன்றைய தினம் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான சான்றிதழ்களை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் வழங்குகிறார். ரேங்க பட்டியல் அடிப்படையில் வரும் 16ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வுக் கடிதம் கிடைக்காதவர்கள் அதை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் மொத்தம் 1,696 இடங்கள் உள்ளன. மேலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 838 உள்ளன. இவை அனைத்திற்கும் சேர்த்து தான் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 198.50கவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 197.50கவும், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மதிப்பெண் 196.25கவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 196.25கவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பினருக்கு 192.50கவும், பழங்குடி வகுப்பினருக்கு 189.25கவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடரும் இலங்கை கடற்படை தாக்குதல்- பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

 Attacks On Tamil Nadu Fishermen Sri Lanka தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று முன் தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளது என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கச்சத்தீவில் ஆண்டாண்டுகாலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் நிலையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் அச்சமடைந்திருப்பதாகவும் ஜெயலலிதா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கும் நிலையில்தான் நள்ளிரவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

யாமர் சமூக வலைத்தளத்தை ரூ. 6,000 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட்!

 Microsoft Buy Yammer 1 2 Billion
சமூக வலைத்தளமான யாமர் (Yammer) நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 6,000 கோடிக்கு (1.2 பில்லியன் டாலர்) வாங்கவுள்ளது. இதன்மூலம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள சேவையை மைக்ரோசாப்ட் வழங்க முடியும்.
வெளியுலகில் மட்டுமின்றி நிறுவனங்களுக்குள்ளான சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமானது யாமர். ஒரு நிறுவனம் தனது பணியாளர்களை மட்டும் கொண்ட சமூக வலைத்தளத்தை உருவாக்கிக் கொள்ள யாமர் உதவுகிறது.
4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட யாமர் வலைத்தளத்தை 50 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையகமாகக் கொண்ட யாமர் நிறுவனத்தில் 400 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கினாலும் அதன் தலைமை செயல் அதிகாரியாக கர்ட் டெல்பென் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்பு பேபால் நிறுவன அதிகாரியாக இருந்தவர் ஆவார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது ஷேர் பாயிண்ட் என்ற அப்ளிகேஷனை வழங்கி வருகிறது. இது நிறுவனங்களுக்குள் சமூக வலைத்தளத்தை உருவாக்க உதவும் அப்ளிகேஷனாகும். ஆனால், இதில் யாமர் அளவுக்கு வசதிகள் இல்லை.
இப்போது யாமரை வாங்கியுள்ளதன் மூலம் சமூக வலைத்தள உலகில் மைக்ரோசாப்ட் வலுவாக காலூன்ற முயல்கிறது.
மேலும் பேஸ்புக் போல யாமர் விளம்பரங்களை நம்பியில்லை. கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் இணையத்தளமாகும் (மிக அடிப்படையான சேவைகள் இலவசமாக தரப்பட்டாலும்).
ஒவ்வொரு யாமர் பயனீட்டாளருக்கும் 240 டாலர் என்று கணக்கிட்டு 50 லட்சம் பேருக்கு ரூ. 6,000 கோடியைத் தந்து இதை வாங்கவுள்ளது மைக்ரோசாப்ட்.
கடந்த ஆண்டு ஆன்லைன் சேட் நிறுவனமான ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் ரூ. 42,000 கோடிக்கு மைக்ரோசாப்ட் வாங்கியது. தனது அடுத்த ஆபிஸ் வெர்சனில் ஸ்கைப்பை சேர்க்கவுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் இமெயில், எக்ஸெல் ஸ்பிரட் ஷீட்கள், பவர் பாயிண்ட் உள்ளிட்ட எம்எஸ் ஆபிஸ் சேவைகள் மூலம் அந்த நிறுவனத்துக்கு 60 சதவீத லாபம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதன் முக்கியமான விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் 40 சதவீதமே.

பிரணாப், சங்மா வேட்பு மனு தாக்கல்

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் சங்மா ஆகியோர் தமது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
இத்தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியையும், பிரதான எதிர்கட்சியான பா ஜ க மற்றும் அ இ அ தி மு க, பிஜு ஜனதா தளம் உட்பட பல எதிர்கட்சிகள் சங்மாவையும் தமது வேட்பாளராக நிறுத்தியுள்ளன.
பிரணாப் முகர்ஜி தமது வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
எதிரணியின் வேட்பாளாரான சங்மாவுடன் பா ஜ க மூத்த தலைவர் அத்வானி, அகாலி தளத்தலைவரும் பஞ்சாப் முதலவருமான பிரகாஷ் சிங் பாதல், ஒதிஷா முதல்வர் பிஜு பட்நாயக் ஆகியாருடன் மேலும் பலரும் சென்றனர்.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தற்போது வாக்கு பலத்தின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே கூடுதலாக உள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தமது கட்சியின் நிலை என்ன என்பதை இதுவரை வெளியிடவில்லை.
எனினும் அக்கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்கக் கூடும் என சங்மா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

500 தியேட்டர்களில் பில்லா 2 – 10-ம் தேதி முதல் முன்பதிவு ஆரம்பம்!


அஜீத் நடித்துள்ள பில்லா 2 படம் வரும் ஜூலை 13-ம் தேதி வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த மே மாதத்திலிருந்தே இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன் படம் சென்சார் செய்யப்பட்டபோது, ஏ சான்று கொடுத்துவிட்டனர். ஏராளமான காட்சிகளை வெட்டியும் விட்டனர்.
இதனால் பட வெளியீடு திட்டமிட்டபடி ஜூன் 21-ம் தேதி நடக்கவில்லை. மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப்போய்விட்டது.
இந்த நிலையில், படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“ஆவலுடன் எதிர்ப்பார்த்த தல ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க வருகிறது பில்லா 2. அனைத்து வேலைகளும் முடிந்து பக்கா ஆக்ஷன் த்ரில்லராக வரும் ஜூலை 13-ம் தேதி பில்லா 2ஐ வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான அரங்குகளில் பில்லா 2திரையிடப்படும். உலகம் முழுவதும் வெளியாகவுள்ள திரையரங்குகள் விவரம் விரைவில் வெளியிடப்படும்,” என்று கூறியுள்ளார்.

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வருவது நிச்சயம். கமல் பேட்டி

இந்தியாவில் வெளியான படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் ‘விஸ்வரூபம்’. கமல் நடித்து, இயக்கி, தயாரித்து இருக்கிறார்.
கமலுடன் ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இப்படத்தின் FIRST LOOK-ஐ கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டார் கமல்.
இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் எல்லாம் நடிக்கவில்லையாம். விஸ்வநாத் (எ) விஸ் என்ற பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். விஸ்வநாத் பாத்திரத்தில் கதக் நடன கலைஞராகவும், விஸ் பாத்திரத்தில் FBI ஏஜெண்டாகவும் நடித்து இருக்கிறார்.
‘விஸ்வரூபம்’ படத்திற்காக இதுவரை எடுத்த காட்சிகள் மிகவும் அதிகமாக இருப்பதால் அதில் சில காட்சிகளை பயன்படுத்தி ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பயன்படுத்த இருக்கிறார் கமல் என்று செய்திகள் வெளியாகின.
இச்செய்தி குறித்து கமல் தெரிவித்து இருப்பது ” விஸ்வரூபம் படத்தினைத் துவங்கும் போதே, இப்படம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்று பரிபூரணமாக நம்பி தான் துவக்கினோம். இரண்டாம் பாகமும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு 40 % முடிவடைந்துவிட்டது.
இந்திய திரையுலகில் இதுவரை விஸ்வரூபம் மாதிரியான கதைகள் வந்தது இல்லை. தேசிய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இப்படத்தில் கையாண்டுள்ளோம் ” என்று தெரிவித்து இருக்கிறார்

ஒலிம்பிக்கில் முதன்முறையாக அரேபியப் பெண்கள்

ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பங்கேற்காமல் இருந்த சவுதி அரேபியா, கத்தார் மற்றும் புருனே நாட்டுப் பெண்கள் முதன்முறையாக உள்ளனர்.
2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பல நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இம்முறை அரேபிய நாடுகளில் உள்ள பெண்களும் பங்கறே்க உள்ளனர்.
சவுதி அரேபியாவில் பெண்கள் வண்டி ஓட்டுவதும், தேர்தலில் வாக்களிப்பதும், பொதுப்பதவிகளை வகிப்பதும் கிடையாது. இவர்கள் பள்ளிக்கூடம் செல்வதில் தொடங்கி திருமணம், வங்கிக் கணக்கு தொடங்குதல் என்று அனைத்திலுமே ஆண்களின் அனுமதியின்றி எதுவும் செய்யக்கூடாது.
ஒலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரையில் ஆண், பெண் பார்வையாளர்கள் கலந்திருந்து பார்ப்பதால் அரேபிய பெண்களுக்கு விளையாட அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது நிலைமைகள் மாறி வருகின்றன.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தால்மா ருஷ்டி மல்ஹாஸ் என்ற முதல் சவுதிப்பெண் தன் கனவு நனவாகியிருப்பதாகக் கூறியுள்ளார்.
தற்போது துப்பாக்கி சுடுதல், நீச்சல் மற்றும் ஓட்டப்போட்டிகளில் கலந்து கொள்ள மூன்று பெண்களை கத்தார் அனுப்புகிறது. தடையோட்டத்தில் மட்டும் பங்கு பெற ஒரு பெண்ணை புருனே அனுப்புகிறது. ஆனால், சவுதி அரேபியா அனுப்பும் வீராங்கனைகளின் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை.

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு!!!!!


திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்.......ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர்.ஆச்சரியமாக இருக்கிறதா?.. ஆம் அதுதான் உண்மை ...




இந்த இடுகாடு கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது



பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார். இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.



1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.



இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்...

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா?..அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.



பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர். பயிர்த்தொழில்,சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.


மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து,ஆப்பிரிக்கா,  சுமேரியா,  கிரீஸ்,  மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது. 1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.


மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

 
அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும்,ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார். எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.




ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி,கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல்,பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது. ஆதிச்சநல்லூரில்அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.




ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.



ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால்..

எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்

எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.




இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.


இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.












நன்றி :Facebook







முக நூல்

Popular Posts