background img

புதிய வரவு

பிரணாப், சங்மா வேட்பு மனு தாக்கல்

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் சங்மா ஆகியோர் தமது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
இத்தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியையும், பிரதான எதிர்கட்சியான பா ஜ க மற்றும் அ இ அ தி மு க, பிஜு ஜனதா தளம் உட்பட பல எதிர்கட்சிகள் சங்மாவையும் தமது வேட்பாளராக நிறுத்தியுள்ளன.
பிரணாப் முகர்ஜி தமது வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
எதிரணியின் வேட்பாளாரான சங்மாவுடன் பா ஜ க மூத்த தலைவர் அத்வானி, அகாலி தளத்தலைவரும் பஞ்சாப் முதலவருமான பிரகாஷ் சிங் பாதல், ஒதிஷா முதல்வர் பிஜு பட்நாயக் ஆகியாருடன் மேலும் பலரும் சென்றனர்.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தற்போது வாக்கு பலத்தின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே கூடுதலாக உள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தமது கட்சியின் நிலை என்ன என்பதை இதுவரை வெளியிடவில்லை.
எனினும் அக்கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்கக் கூடும் என சங்மா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts