background img

புதிய வரவு

கீழப்பாவூர்

‘மூர்த்தி, தீர்த்தம், தலம் முறையாய்த் தொடங்கினார்க்கு, வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே’ என்பது தாயுமானவர் பாடிய பராபரக்கண்ணி பாடல். ஒவ்வொரு ஆலயமும் மூர்த்தி, தலம், தீர்த்தம், ஸ்தோத்திரம், விருட்சம், தியானம், தவம், விரதம், வேள்வி என்னும் ஒன்பது அம்சங்களில் ஏதாவதொன்றில் சிறப்பு பெற்றிருக்கும். அவற்றுள் ஒன்று கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம். நரசிம்மர் தானே விரும்பி இத்தலத்தில் ரிஷிகளுக்கு காட்சி தந்து, நிரந்தரமாகக் குடி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

குளங்கள், கால்வாய், வயல்கள், தென்னந்தோப்புகள் சூழ்ந்த கவின்மிகு பகுதியில் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். இங்கு நரஹரியுடன் வெங்கடாஜலபதியும் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு. கிழக்கு பார்த்த தனிச் சந்நதியில் பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்திலும், அதனையொட்டி பின்பகுதியில் மேற்கு நோக்கிய தனிச் சந்நதியில் த்ரிபங்க நிலையில் நரசிம்மர் இரண்யனை வதம் செய்யும் திருக்கோலத்திலும் அருள்பாலிப்பதைக் காண நெஞ்சு நெகிழ்ச்சியால் விம்முகிறது.

பகவான் நரசிம்மர் அகோபிலத்தில் நிலைத்திருந்தது மிகக் குறுகிய காலம்தான். ஆகவே, நரசிம்மர் தரிசனம் வேண்டி ஆங்காங்கே நதிக்கரைகளிலும், குன்றுகளிலும் தவமிருந்து நரசிம்ம தரிசனம் பெற்றோர் ஏராளம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காஸ்யபர், வருணன், சுகோஷன். இந்த மூவரும், கிருதயுகத்தில் பிரகலாதனுக்கு காட்சி தந்த அதே நரசிம்ம அவதாரத்தைக் கண்டு மகிழ விரும்பினர். அதற்காக திருமாலை நினைத்து கடுந்தவம் புரிந்தனர். அவர்களுடைய ஆயிரக்கணக்கான ஆண்டு கடுமையான தவம் திருமாலின் மனதை இளக்கியது. ‘‘மகா தபஸ்விகளே!

பொதிகை மலையில் 118 தீர்த்தங்களை தாமிரபரணி நீரால் அகத்திய மாமுனிவர் ஏற்படுத்தியுள்ளார். இறவா வரம் பெற்ற ரிஷிகள் நீராடுவதற்காக மலை மீது 86 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான மணிமுத்தா தீர்த்தத்தில் (தற்போதைய பாபநாசம் பாணதீர்த்தம்) புனித நீராடுங்கள். அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே சித்ரா நதி செல்கின்றது. அதுவே தவம் புரிய சிறந்த பகுதி. அங்கிருந்து தவம் புரியுங்கள். நரசிம்மனைக் காண்பீர்கள்!’’ என்று அசரீரியாக அருள் புரிந்தார்.

அதன்படி, முன்பு பிரகலாதனுக்காக தான் மட்டும் தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்ம வடிவிலேயே இப்போது ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக மகா உக்ர மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் ரிஷிகளுக்கு காட்சியளித்தார் நரசிம்மர். தங்களின் விருப்பத்தை நிறைவேற்றிய திருமாலுக்கு நன்றி சொன்னவாறு மனம், மொழி, மெய்யினால் அந்த ரிஷிகள் நரசிம்மமூர்த்தியை ஆராதித்தனர். தேவியரையும் சேர்த்து தரிசித்த ரிஷிகள் நரசிம்மரிடம் அவர் இந்த திருவுருவிலேயே அருள்பாலித்து கலிபுருஷனின் மாயையிலிருந்து பக்தர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

நரசிம்மரின் விருப்பமும் அதுவாகவே இருக்கவே, ரிஷிகளின் கோரிக்கையை ஏற்று கீழப்பாவூர் திருத்தலத்தில் நரசிம்மர் நிரந்தரமாக எழுந்தருளினார். முந்தைய யுகங்களில் பகவானை நேரில் சந்தித்து பக்தர்கள் வணங்கியுள்ளனர். கலியுகத்தில் இது இயலாது என்பதால் தன்னுடைய அவதார வேளையான பிரதோஷ காலத்தில் சிங்க கர்ஜனை செய்து பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார், நரசிம்மர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி வாழ் மக்கள் சிங்க கர்ஜனையைக் கேட்டு வந்துள்ளதாக செவிவழிச் செய்திகள் உள்ளன.

இன்றும் இத்தலத்தில் ரிஷிகள் சூட்சுமமாக நரசிம்மமூர்த்தியை தரிசிப்பதாக ஐதீகம். இப்பகுதி மிகுந்த அமைதியுடன், தூய்மையாகத் திகழ்கிறது. இங்கே மகாலட்சுமி வாசம் செய்வதால் இங்கு பயிர்கள் செழித்து வளர்கின்றன. ஊரும் செல்வச் செழிப்புடன் திகழ்கிறது. இத்தல நரசிம்மரை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிபட்டு திருவருள் பெற்றுள்ளனர். 1200 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இத்தலத்தில் மன்னர்களின் திருப்பணிகளை விவரிக்கும் 42 கல்வெட்டுகள் உள்ளன.

மாறவர்மன் திரிபுவன சக்ரவர்த்தி விக்ரம பாண்டியன் தான் ஆட்சிக்கு வந்த ஏழாவது ஆண்டில் இத்திருக்கோயிலுக்கு நித்ய பூஜைகளுக்கு நிலங்கள் வழங்கியுள்ளான். சடையவர்மன் ஸ்ரீவல்லபன் கி.பி.1101 முதல் கி.பி.1124 வரை இப்பகுதியை ஆட்சி செய்துள்ளான். சடையவர்மன் குலசேகர பாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோரின் பெயர்களும் கல்வெட்டில் உள்ளன.

சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் க்ஷத்ரிய சிகாமணி நல்லூர் என்றும் சோழமன்னரின் மனைவியான அறிஞ்சிகைப் பிராட்டியின் பெயரால் அறிஞ்சிகைப்பிராட்டி சதுர்வேதிமங்கலம் என்றும் குறுமணநாடு, முனைமோகர் பாகர், சதுர்வேதிமங்கலம் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்பட்டுள்ளது. பாகூர் என்பதே பாவூர் என மருவி இப்போது கீழப்பாவூர் என்றாகிவிட்டது. மேலும் நரசிம்மர் சந்நதி முன்பாக, அவரது உக்கிரத்தைத் தணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நரசிம்ம தீர்த்தம் அமைந்திருப்பதும் வேறெங்கும் காணமுடியாத சிறப்பம்சமாகும்.

வைகானஸ சாஸ்திரப்படி இத்தீர்த்தம் கங்கைக்குச் சமமாக போற்றப்படுகிறது. இதில் நீராடினால் காசியில் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். சரீரநோய், மனப்பதற்றம், கவலை, கோபம் போன்றவை நீங்கும். ஒவ்வொரு திருவோண நட்சத்திர நாளிலும் ஆலயத்தோடு சேர்த்து இந்த தீர்த்தத்தையும் பக்தர்கள் வலம் வருகிறார்கள். தட்சிண அகோபிலம் என்றும் பாண்டிநாட்டு அகோபிலம் என்றும் பக்தர்களால் இக்கோயில் அழைக்கப்படுகிறது.  இங்கே கல்யாணத்தடை, கடன் தொல்லை, கோர்ட் வழக்கு, நீண்டநாள் நோய் ஆகியவற்றிற்கு பரிகாரம் செய்து கொள்ளலாம்.

இது சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான தலமாகவும் விளங்குகிறது. காடு அல்லது மலைப்பகுதியற்ற சமதளமான இத்தலத்தில் பகவான் இறங்கி வந்து கோயில் கொண்டுள்ளார். எவ்வித சிரமம், பயம், தயக்கமும் இன்றி வருடத்தின் 365 நாட்களிலும் சிறியவர் முதல் வயதானவர் வரை நேரில் வந்து சுலபமாக நரசிம்மரை மிக அருகில் நின்று தரிசிக்கலாம். இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்த நரசிம்மரை சூரியனும் சந்திரனும் வெண்சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, சங்கு சக்ர தாரியாய் தலைக்குமேல் வெண்கொற்றக்குடையின் கீழ் கருங்கல் புடைப்புச் சிற்பமாக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார்.

பிரகலாதன், அவன் தாய், இரண்யகசிபுவின் தந்தையும் பிரகலாதனின் தாத்தாவுமான காஸ்யப மகரிஷி என குடும்ப சகிதமாய் நரசிம்மரை தஞ்சமடைந்து நிற்கும் காட்சியை இங்கு தரிசிக்கலாம். கைமேல் பலன் தரும், குழந்தை மனம் கொண்ட, கருணையே வடிவமான நரசிம்மரை இப்படியொரு அற்புதமானதும் அபூர்வமானதுமான தோற்றத்தில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலை 3.30 மணிக்கு 16 வகை மூலிகை களால் நரசிம்மரின் மூலமந்திரம் உச்சரிக்கப்பட்டு ஹோமம் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணு சூக்தம், ஸ்ரீசூக்த ஹோமங்களும் நடைபெறுகின்றன. அடுத்து, நரசிம்மர் விசேஷ அபிஷேக ஆராதனைகளை மேற்கொள்கிறார். சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டால் கடன்கள் தீரும், செல்வச் செழிப்பு ஏற்படும், வியாபார அபிவிருத்தி உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்னைகள் நீங்கி நன்மை உண்டாகும் எனவும், பில்லி, சூன்யம், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

இத்தல நரசிம்மருக்கு நீராஞ்சனம் எனும் நெய்தீபம் ஏற்றி 16 முறை பிரதட்சிணம் வந்து வழிபட்டால் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுகின்றன. நரசிம்மர் ப்ரீதியாக பானகம் நிவேதனம் செய்து வழிபடலாம். நரசிம்ம வழிபாட்டிற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும். திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் திருநெல்வேலியில் இருந்து மேற்கே 40 கி.மீ. தொலைவிலும், தென்காசியிலிருந்து கிழக்கே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாவூர் சத்திரம் எனும் ஊர். அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் சுரண்டை செல்லும் வழியில் கீழப்பாவூர் அமைந்துள்ளது. ஆலயத் தொடர்புக்கு தொலைபேசி எண்: 9442330643.

 - கி.ஸ்ரீமுருகன்

கேட்ட வரங்களைத் தட்டாமல் அருளும் நரசிம்மர்

வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில்

வில்லிவாக்கத்தில் பாலியம்மன் கோயில் அக்னிஷேத்திரமாக விளங்குகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏரிக்கரையில் அருகில் பெண் ஒருவர் வேம்பு  மரத்தடியில் நின்றுகொண்டு அந்த வழியாக போவோரைப்   பார்த்து ‘’என் உடல் எரிச்சலடைகிறது. ஏரியில் உள்ள நீரை எடுத்து அபிஷேகம் செய்யுங்கள்’’  என்று கூறினாள். அங்கிருந்த பெண்கள் ஏரியில் இருந்து தண்ணீரை குடத்தில் கொண்டுவந்து அபிஷேகம் செய்தனர். அப்போது மனம் மகிழ்ந்து  தெய்வகலையுடன் காட்சியளித்த அந்த பெண் சாந்தியடைந்தாள். இதை கண்டு கூடியிருந்த பெண்களின் மனம் நிம்மதியடைந்தது.

உடனே அந்த பெண் நான் இங்குள்ள மக்களுக்கு அருள் பாலிக்க வந்துள்ளேன், என்னை பாலியம்மன் என்று அழையுங்கள், நான் இளைப்பாறுவதற்கு இங்கேயே  கோயில் கட்டுங்கள், என்று கூறினாள். அப்போது ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி சிறியதாக கோயில் கட்டினர். மேலும், சுமார் 600 வருடங்களுக்கு முன்பு  நாடோடி இனத்தவர்கள் தன்னுடன் எடுத்துவரும் அம்மன் விக்கிரகத்தை சுமந்து வந்தபோது பாரம் தாங்காமல் தற்போது கோயில் உள்ள இடத்தில்  இறக்கிவைத்தனர்.

அதன் பிறகு அதை அகற்ற முடியாத்தால் பக்தர்கள் இன்று சேர்ந்து தெய்வமாக வணங்கி பாலியம்மனுக்கு கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. 1710ஆம்  ஆண்டு அம்மனுக்கு சிறிய அளவில் கருவறை கட்டப்பட்டு, 1938ஆம் ஆண்டு கருவறைக்கு முன்பு உள்ள முகப்பு மண்டபம் கட்டப்பட்டது. பாலீஸ்வரி,  பாலாம்பிகை, பாலியம்மன், என்ற பெயர்களில் அழைக்கப்படும் அன்னைக்கு பாலியம்மன் என்னும் பெயர் இங்கு மட்டுமே உள்ளது. கோயில் அமைப்பு:  கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் வலது பக்கம் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகப்பெரிய அரச மரம் உள்ளது.

மகாமண்டபம், அர்த்தமண்டபம் கடந்தால் மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகத்துடன் தேவி பாலியம்மன் காட்சியளிக்கிறாள். அம்மனின் முபுறம் கீழே தனியாக  கழுத்தம்மன் என்று அழைக்கப்படும் அம்மன் முகம் உள்ளது. தெற்கு திசையில் மகாலட்சுமியும், மேற்கில் மகேஸ்வரியும், வடக்கில் சரஸ்வதி, விஷ்ணு  துர்கையும், ஐயப்பனுக்கும், முருகன் , விநாயகர் என தனித்தனியாக கோயிலும், எதிரே நவக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் சிறப்பு:

அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் திருமண தடை நீங்கி, சந்தான செல்வத்துடன் சகல செல்வங்களும் பெற்று நோய்நொடியின்றி வாழ பலரும் இங்குவந்து  அபிஷேகம் செய்கின்றனர். மேலும், நாக தோஷம், சர்ப தோஷம், போன்றவற்றுக்கு இங்கு வந்து பூஜை செய்தால் தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின்  நம்பிக்கையாக உள்ளது. தை, ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

விழாக்காலாம்:

கோயிலின் முக்கிய விழாவாக தீமிதி திருவிழா நடக்கிறது. சித்ரா பௌர்ணமி அன்று 1008 பால்குட ஊர்வலத்தில், அம்மன் வீதிஉலா நடக்கும். விநாயகர்  சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீப உற்சவம், தை பொங்கல் திருவிழா, சிவராத்திரி உற்சவம் நடைபெறும்.

எப்படி போகலாம்:

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தின் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

பூஜை நேரங்கள்:

கோயிலில் இரண்டு கால பூஜைகள் நடக்கிறது. தினசரி காலை 6 மணிமுதல் பகல் 11 மனிவரைக்கும், மாலை 5 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும்.  செவ்வாய் கிழமையில் மாலை 3 முதல் 9 வரையும், வெள்ளிக்கிழமையில் மாலை 5 முதல் 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

நாகதோஷம் நீக்கும் வில்வாரண்யம்

சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை, குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம்.

இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். பசுவுக்கு அகத்திகீரை, பழம் கொடுக்க வேண்டும் என்கிறது. ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புனிதமான அமாவாசை ஆகும். புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதயருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது.

நம் முன்னோர்களை நினைத்து வயதானவர்களுக்கும், ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு துணிமணி தானம் தந்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர். மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும். மகாளய பட்ச அமாவாசை அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரைகளில் அல்லது வீட்டின் வடகிழக்கு கிணற்றின் அருகில் மூதாதயர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நமது சந்ததியர்களின் வளர்ச்சியும் இருக்கும்.

நமது முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம் மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது. ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள். முடிந்த அளவு இந்த அமாவாசையில் நீங்கள் உங்கள் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய்களில் இருந்து விடுவிக்கும்.

தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.

1. நம் பித்ருக்கள் (மண்),

2. புரூரவர் (நீர்),

3. விசுவதேவர் (நெருப்பு),

4. அஸீருத்வர் (காற்று),

5. ஆதித்யர் (ஆகாயம்)

என பஞ்ச பூத அம்ஸமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்று.

காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்கள் திதி தர ஏற்ற இடங்கள். நம் தமிழகத்தில் ராமேஸ்வரம், பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பின்டம் பிடித்து தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.

மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான். இவர்கள் 'காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''.

இப் பூஜையால் தீராத கடன் ஒழியும், தீர்க்க முடியாத வியாதிகள் குறையும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும், உத்தி யோகம் கிடைக்கும், உத்யோக உயர்வுகள் உண்டாகும், திருமணத் தடை அகலும், இல்லறம் இனிக்கும், குழந்தைகள் கல்வியில் உயர்வு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, குழந்தை பாக்யம், வியாபார அபிவிருத்தி, குடும்ப சாபம் அகலும், செவ்வினைகள் அன்டாது, கால்நடை பெருக்கம், விவசாய அபிவிருத்தி ஏற்படும், நிம்மதி நிலைக்கும்.

முன்னோர்களின் ஆசி கிடைக்க மகாளய அமாவாசை விரதம்

நாளை செப்டம்பர் 23, செவ்வாய்க்கழமை மகாளய அமாவாசை. அன்றைய தினத்தில் தானதர்மங்கள் செய்வது சாலச் சிறந்தது. பல வகையிலும் உங்களுக்கு நன்மை தரக்கூடியது. பித்ருக்களின் மனதை குளிரச் செய்யக்கூடியது. நம் வாசர்களும் அவரவர் பகுதிகளில் நாளை அவர்களால் இயன்ற தர்ம காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உங்கள் பித்ருக்களில் ஆசியை பெறுவீர்களாக. எங்கோ தூர தேசத்தில் இருக்கும் நம் வாசகர்கள் மற்றும் வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் வசிப்பவர்கள், விருப்பம் இருந்தும் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை காரணமாக செய்ய இயலாதவர்கள் கலங்க வேண்டியதில்லை.

நாளை மகாளய அமாவாசையையொட்டி நம் தளம் சார்பாக நடைபெறவிருக்கும் கோ-சம்ரோக்ஷனமும் அன்னதானமும் நம் வாசகர்கள் அனைவருக்கும் பலன்கள் போய் சேரும் வகையில் சங்கல்பம் செய்யப்படும். பிரார்த்தனையும் செய்யப்படும். இதன் பயனாக உங்களுக்கு ஏதேனும் நன்மை விளைந்திருப்பதாக நீங்கள் உணர்ந்தால் மாதம் ஒருமுறையேனும் நேரம் ஒதுக்கி நீங்களே முன்னின்று உங்களால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்யுங்கள். (‘மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!’ என்ற தலைப்பில் நாம் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பதிவு உங்களுக்கு உபயோகமாய் இருக்கும். படித்து இயன்றவற்றை செய்து பயனடைவீர்களாக.) அதுவே நீங்கள் நமக்கு செய்யும் பிரதி உபகாரம்.

கோ-சம்ரோக்ஷனம் நிச்சயம் நடைபெறும். அன்னதானத்தை தான் எப்படி திட்டமிடுவது என்று புரியவில்லை. (அலுவலக வேலைக்கு இடையே செல்ல முடியாத நிலையில் இருப்பதால்.) எப்படியும் நிச்சயம் நடைபெறும்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். (குறள் 38)

======================================================

மகாளய அமாவாசை அன்று என்ன செய்யவேண்டும்?

புரட்டாசி மாதம் வருகிற அமாவாசையை  மகாளய பட்ச அமாவாசை என்றும்,  பித்ருக்களுக்கு தர்ப்பண வழிபாடுகள் செய்ய வேண்டிய தினம் என்றும் கொண்டாடுகிறோம்.  ஆனால் இதை ஏன் பௌர்ணமியில் தொடங்கி (செப் 9 முதல் 24 வரை) 15 நாட்கள் கொண்டாடுகிறோம் தெரியுமா?

நம்மை பெற்றவர்கள் பூத உடலை விடுத்தும் சூட்சும உடலுடன்  விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு வேண்டிய உணவை அவர்களே எடுத்துக் கொள்ள முடியாது.  இதனால் எமதர்ம ராஜன் அவர்கள் மீது பரிதாபப்பட்டு 15 தினங்கள் விடுமுறை அளித்து ”மண்ணுலகிற்குச் சென்று உங்கள் பிள்ளைகள் தரும் உணவை உண்டு வாருங்கள்” என்பார்.  அதனால் தான் நாம் 15 நாட்களை ”மகாளயபட்சம் ” என கொண்டாடுகிறோம்.

தங்கள் பிள்ளைகளிடம் உணவுடன் எள்ளும், நீரும் பெற்று தணியாத பசியையும் தீர்த்துக் கொண்டு அவர்களை ஆசிர்வத்துவிட்டு வரட்டும் என்று எமன் அனுப்பி வைக்கும் 15 நாளில் ஒரு நாளாவது (அவரவர் பெற்றோர் திதி தினம்) அவர்களுக்குத் தர்ப்பணமும் பிண்டமும் வைக்க வேண்டும். இந்த பதினைந்து தினங்களும்கூட பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் மகாளைய அமாவாசை யிள்ளவது தர வேண்டும்.  திதியில் திவசம் செய்ய மறந்தவர்களும் மகாளயத்தில் அதைச் செய்யலாம்.

பித்ரு தர்ப்பணம் செய்தால் நமது முன்னோர்கள் சிறுவயதில் இறந்தவர்கள், பிறந்த உடன் இறந்த குழந்தைகள், துர்மரணம் ஆனவர்களுக்கு நல்ல கதி கிடைக்கும்.  இந்த நாட்களையும் மறந்தவர்கள் தீபாவளி அமாவாசைக்கு முந்திய 15 தினங்களில் தர்ப்பணம் செய்யலாம்.

இந்த நாட்களில் இறந்தவர்களுக்கு எள்ளும் நீரும் கொடுக்கவில்லை என்றால், “உனக்குச் சிரார்த்தம் செய்ய புத்திரன் இல்லாமல் போகட்டும். உனக்கு மண்ணுலகில் வாழும் போது இறுதிக் காலத்தில் உணவு கிடைக்காமல் போகட்டும்” என்று சாபம் கொடுத்து விட்டுச் செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால் முடிந்தவரை இதை யாரும் தவற விடுவதில்லை.

இந்த நாளில் வீட்டில் செய்யும் பித்து பூஜையை விட கடல், நீர்நிலைகள், ஆலய புஷ்கரணியில் செய்யப்படும் பித்ரு பூஜையே சிறந்தது.

வீட்டில் எப்படிச் செய்வது?

வெளியில் செண்டு பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இறந்து போன முன்னோர்களின் படத்தை வைத்து எள் தர்ப்பணம் செய்து அன்னம் உருட்டி மூன்று பிண்டங்கள் வைத்து அதை பித்ருக்களாக  வரித்துத தேங்காய் , பலம் உடைத்து ஆரத்தி எடுக்க வேண்டும்.  பிறகு காக்கைக்கு உணவு வைக்க வேண்டும்.  அது சாப்பிட்டதும் நம் பாதங்களை அலம்பிவிட்டு வீட்டுக்குள் வந்து மீண்டும் முன்னோர்களை வணங்கி விட்டு தலை வாழை இலையில் படையல் செய்து சாப்பிடலாம் .

தர்ப்பணம் செய்ய சிறந்த இடங்கள்:

நீர் நிலைகள், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம், பவானி கூடுதுறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம்

கடற்கரைத் தலங்கள்

ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல்கள் சங்கமிக்கும் கன்யாகுமரி, பூம்புகார், வேதாரணியம், கோடியக்கரை

ஆலயங்கள்

திருப்பூந்துருத்தி, திலதர்ப்பணபுரி, திருவாலங்காடு, திருவள்ளூர்,  திருமயம், அரண்மனைப்பட்டி,  திரு நல்லாறு, திரு ராமேஸ்வரம்

மணிகர்ணிகா திருக்குளங்கள்

“வாரணாசிக்கு  காசியாத்திரை செல்பவர்கள் மணிகர்ணிகா காட்டில் பிண்ட பூஜை செய்தால் 16 தலைமுறைகள் திருப்தி அடைவார்கள் என்பது ஐதீகம்.  அதிலும் மகாளய அமாவாசையில் மனிகர்ணிகாவில் தர்ப்பணம் விடுபவர்களுக்கு பித்ருக்கள் நேரடியாக தோன்றி ஆசி கூறுவதாக ஐதீகம்.

காசியைத் தவிர தமிழ் நாட்டில் மதுரை  திருப்புவனம், திருச்சி திருவெள்ளறை, சென்னையில் திருநீர்மலை, திருவாரூர் அருகே வேதாரண்யத்திலும் மணிகர்ணிகா திருக்குளங்கள் உள்ளன .

(நன்றி : கே.குமாரசிவாச்சாரியார் | குமுதம் சிநேகிதி)

அந்த குருகுலத்தில் தினமும் வேதபாராயணமமும் கீதை பாராயணமும் நடக்கும். குருநாதர் சொல்லச் சொல்ல, சீடர்கள் வேத மந்திரங்களை உச்சரிக்கவேண்டும். குரு வேத மந்திரங்களின் அர்த்தத்தை அவர்களுக்கு போதிப்பது கிடையாது. முதலில் அவர்கள் மந்திரங்களை மனப்பாடம் செய்துகொள்ளட்டும் பிழையின்றி உச்சரிக்க கற்றுக்கொள்ளட்டும் பிறகு அர்த்தம் சொல்லிக்கொடுப்பதை பார்த்துக் கொள்ளலாம் என்பது அவர் எண்ணம்.

ஒரே ஒரு சீடனுக்கு மட்டும் ஒரு சந்தேகம் எழுந்தது.

“குருவே என்னை தவறாக நினைக்கவேண்டாம்… பொருள் புரியாமல் அர்த்தம் தெரியாமல் மந்திரங்களை உச்சரிப்பதால் என்ன பலன்? மேலும் சுவடிகளை மூடிவைத்ததுமே அனைத்தும் மறந்துவிடுகிறது எனக்கு… நான் கற்பது வீணாக அல்லவா போய்விடுகிறது?”

“குழந்தாய்… கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தயக்கிமின்றி ஆசிரியரிடம் கேட்டு தீர்த்துக்கொள்ளவேண்டும். சந்தேகம் கேட்பவன் அந்த நொடி வேண்டுமானால் முட்டாளாக அடுத்தவர்களுக்கு தெரியலாம். ஆனால் கேட்க்காதவர்கள் வாழ்க்கை முழுதும் முட்டாள்களாகத் தான் இருப்பார்கள். நீ சந்தேகம் கேட்டதற்கு மிக்க நன்றி. உன் மூலம் ஒரு அருமையான விஷயத்தை அனைவருக்கும் உணர்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் சொல்வதை சிரத்தையுடன் செய்வாயா?”

குரு கேட்க, “நிச்சயம் குருவே. தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன்” என்றான் சீடன்.

குரு உடனே ஆஸ்ரம சமையற்கூடத்துக்கு சென்று, அங்கு அடுப்பு கரி போட்டு வைக்கப்பட்டிருந்த மூங்கில் கூடை ஒன்றை கொண்டு வந்தார். கூடை முழுதும் கரி படிந்து அதன் நிறமே மாறியிருந்தது.

அந்த கூடையை சீடனிடம் கொடுத்தவர், “நீ நேரே ஆற்றுக்கு போய், இதில் தண்ணீர் கொண்டு வா” என்றார்.

சீடன் சற்றும் யோசிக்காமல், கூடையுடன் ஆற்றுக்கு விரைந்தான். மூங்கில் கூடையில் நீர் நிற்குமா என்ன? இவன் ஆஸ்ரமம் திரும்புவதற்குள் மொத்த நீரும் ஒழுகிவிட்டது.

bamboo basket test

குரு ஏன் இப்படி ஒரு வெட்டி வேலையை நம்மிடம் ஒப்படைத்தார் என்று எண்ணியபடியே வெறுங்கூடையுடன் சென்றான்.

குரு சிரித்தபடி, “உன் வேகம் பத்தாது. நீர் வடிவதற்குள் இங்கு இருப்பது போல வா” என்று மறுபடியும் ஆற்றுக்கு சென்று நீரை கொண்டு வர பணித்தார்.

இந்த முறை சீடன் வேகமாக ஓடி வந்தான். ஆனாலும், வந்து சேர்வதற்குள் கூடை காலியாகிவிட்டது.

கூடையில் தண்ணீர் கொண்டு வருவது ஒருபோதும் சாத்தியம் இல்லை என்று புரிந்துகொண்ட சீடன், வாளி ஒன்றைக் கையில் எடுத்தான். ஆனால் குருவோ, “எனக்கு வாளியில் நீர் வேண்டாம். கூடையில்தான் வேண்டும். நீ இன்னும் தீவிரமாக முயற்சி செய்… இன்னும் வேகமாக வா” என்று அவனை மறுபடியும் ஆற்றுக்கு அனுப்பினார்.

அந்த முறையும் அவனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை.

“என்னை மன்னியுங்கள்… இது அர்த்தமற்ற செயல் போலத் தெரிகிறது. என்னால் மட்டுமல்ல எவராலும் இது முடியாது என்று கருதுகிறேன்” என்றான், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி.

அவனைப் பார்த்து புன்னகைத்த குரு, “நீ இதைப் அர்த்தமற்றது என்கிறாய். ஆனால், கூடையைப் பார், தெரியும்” என்றார்.

சீடன் கூடையைப் பார்த்தான். முதல் தடவையாக அது முற்றிலும் வேறாக மாறியிருப்பதைக் கண்டான். பழைய, கரி படிந்த கூடை, இப்போது உள்ளும் புறமும் சுத்தமாகிப் புத்தம் புதியது போல் காட்சியளித்தது!

குரு புன்னகை பூத்தபடி சொன்னார் : “மகனே… வேத மந்திரங்களும் கீதையும் படிக்கும்போது இதுதான் நமக்கும் நேர்கிறது. ஒருவருக்கு மந்திரங்களின் பொருள் புரியாமல் இருக்கலாம்; பொருள் புரியாமல் படிப்பது அர்த்தமற்றதாக தோன்றலாம். அவை நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால், இந்த கூடை, நீரை அள்ள எடுத்தக்கொண்ட முயற்சியில் சுத்தமானதை போல நாமும் உள்ளும் புறமும் அழுக்குகள் நீங்கி தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாக மாறிவிடுவோம்!” என்றார்.

“இப்போது புரிந்தது குருவே…!” என்று அவர் கால்களில் வீழ்ந்தான்.

மந்திரங்களை பொருள் தெரியாமல் உச்சரித்தாலும் அதில் பலனுண்டு என்பதற்கு இதைவிட சிறந்த விளக்கம் தரமுடியுமா என்ன?

(பொருள் புரியாமல் சுலோகம் சொன்னாலும் பலன் உண்டு என்று நமக்கு தெரியும். ஆனால், அது எப்படி சாத்தியம் என்கிற சந்தேகம் நமக்கு இருந்து வந்தது. மேற்படி கதை நமக்கு அதை மிக மிக தெளிவாக உணர்த்தியது. எனவே வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்!!)

பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா?

வசிஷ்டர் பிரம்மாவின் புத்திரர்களுள் ஒருவர். இவர் ஒரு பிரம்மரிஷி. ஸப்தரிஷிகளுள் ஒருவர். தன் அம்சம் மூலமாக ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் ஆற்றல் பெற்றவர். சாமான்ய மக்களும் சிவனருள் பெற்று பொருளாதரத்தில் உயர அவர் இயற்றியது தான் இந்த அற்புதமான ]தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்’ ஸ்லோகம்.

பெயருக்கு ஏற்றார்போல, தமது தரித்திரத்தை சுட்டுப் பொசுக்க கூடியது இந்த சுலோகம்.

சமஸ்கிருதத்தில் காணப்படும் இந்த ஸ்லோகத்தை நீங்கள் சுலபமாக உச்சரிக்க வேண்டும் என்பதால் கடைசியில் இதன் வீடியோவை தந்திருக்கிறோம். வீடியோவை ஒலிக்கவிட்டு படித்துவரவும். நாளடைவில் உச்சரிப்பு நன்கு பழகிவிடும்.

பொருள் தெரியாமல், ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் என்ன பயன்? இது அர்த்தமற்ற செயலாகாதா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். பொருள் தெரியாமல் ஸ்லோகத்தை உச்சரித்தாலும் பலன் நிச்சயம் உண்டு. ஒவ்வொரு அட்சரத்திற்கும் பலன் உண்டு. அடுத்த பதிவில் அதைப் பற்றி விரிவாக விளக்குகிறோம். அவசியம் அனைவரும் அதை படிக்கவேண்டும்.

தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

விஶ்வேஶ்வராய னரகார்ணவ தாரணாய
கர்ணாம்றுதாய ஶஶிஶேகர தாரணாய |
கர்பூரகான்தி தவளாய ஜடாதராய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 1 ||

கௌரீப்ரியாய ரஜனீஶ களாதராய
காலான்தகாய புஜகாதிப கம்கணாய |
கம்காதராய கஜராஜ விமர்தனாய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 2 ||

பக்தப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துஃக பவஸாகர தாரணாய |
ஜ்யோதிர்மயாய குணனாம ஸுன்றுத்யகாய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 3 ||

சர்மாம்பராய ஶவபஸ்ம விலேபனாய
பாலேக்ஷணாய மணிகும்டல மம்டிதாய |
மம்ஜீரபாதயுகளாய ஜடாதராய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 4 ||

பம்சானனாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்குஶாய புவனத்ரய மம்டிதாய
ஆனம்த பூமி வரதாய தமோபயாய |
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 5 ||

பானுப்ரியாய பவஸாகர தாரணாய
காலான்தகாய கமலாஸன பூஜிதாய |
னேத்ரத்ரயாய ஶுபலக்ஷண லக்ஷிதாய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 6 ||

ராமப்ரியாய ரகுனாத வரப்ரதாய
னாகப்ரியாய னரகார்ணவ தாரணாய |
புண்யாய புண்யபரிதாய ஸுரார்சிதாய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 7 ||

முக்தேஶ்வராய பலதாய கணேஶ்வராய
கீதாப்ரியாய வ்றுஷபேஶ்வர வாஹனாய |
மாதம்கசர்ம வஸனாய மஹேஶ்வராய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 8 ||

வஸிஷ்டேன க்றுதம் ஸ்தோத்ரம் ஸர்வரோக னிவாரணம் |
ஸர்வஸம்பத்கரம் ஶீக்ரம் புத்ரபௌத்ராதி வர்தனம் |
த்ரிஸம்த்யம் யஃ படேன்னித்யம் ன ஹி ஸ்வர்க மவாப்னுயாத் || 9 ||

|| இதி ஶ்ரீ வஸிஷ்ட விரசிதம் தாரித்ர்யதஹன ஶிவஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

வசிஷ்ட மகரிஷியால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால், தரித்திரமும் நோயும் விலகி, சந்தான ப்ராப்தி உள்ளிட்ட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல் ..

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

முக நூல்

Popular Posts