நாளை செப்டம்பர் 23, செவ்வாய்க்கழமை மகாளய அமாவாசை. அன்றைய தினத்தில் தானதர்மங்கள் செய்வது சாலச் சிறந்தது. பல வகையிலும் உங்களுக்கு நன்மை தரக்கூடியது. பித்ருக்களின் மனதை குளிரச் செய்யக்கூடியது. நம் வாசர்களும் அவரவர் பகுதிகளில் நாளை அவர்களால் இயன்ற தர்ம காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உங்கள் பித்ருக்களில் ஆசியை பெறுவீர்களாக. எங்கோ தூர தேசத்தில் இருக்கும் நம் வாசகர்கள் மற்றும் வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் வசிப்பவர்கள், விருப்பம் இருந்தும் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை காரணமாக செய்ய இயலாதவர்கள் கலங்க வேண்டியதில்லை.
நாளை மகாளய அமாவாசையையொட்டி நம் தளம் சார்பாக நடைபெறவிருக்கும் கோ-சம்ரோக்ஷனமும் அன்னதானமும் நம் வாசகர்கள் அனைவருக்கும் பலன்கள் போய் சேரும் வகையில் சங்கல்பம் செய்யப்படும். பிரார்த்தனையும் செய்யப்படும். இதன் பயனாக உங்களுக்கு ஏதேனும் நன்மை விளைந்திருப்பதாக நீங்கள் உணர்ந்தால் மாதம் ஒருமுறையேனும் நேரம் ஒதுக்கி நீங்களே முன்னின்று உங்களால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்யுங்கள். (‘மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!’ என்ற தலைப்பில் நாம் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பதிவு உங்களுக்கு உபயோகமாய் இருக்கும். படித்து இயன்றவற்றை செய்து பயனடைவீர்களாக.) அதுவே நீங்கள் நமக்கு செய்யும் பிரதி உபகாரம்.
கோ-சம்ரோக்ஷனம் நிச்சயம் நடைபெறும். அன்னதானத்தை தான் எப்படி திட்டமிடுவது என்று புரியவில்லை. (அலுவலக வேலைக்கு இடையே செல்ல முடியாத நிலையில் இருப்பதால்.) எப்படியும் நிச்சயம் நடைபெறும்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். (குறள் 38)
======================================================
மகாளய அமாவாசை அன்று என்ன செய்யவேண்டும்?
புரட்டாசி மாதம் வருகிற அமாவாசையை மகாளய பட்ச அமாவாசை என்றும், பித்ருக்களுக்கு தர்ப்பண வழிபாடுகள் செய்ய வேண்டிய தினம் என்றும் கொண்டாடுகிறோம். ஆனால் இதை ஏன் பௌர்ணமியில் தொடங்கி (செப் 9 முதல் 24 வரை) 15 நாட்கள் கொண்டாடுகிறோம் தெரியுமா?
நம்மை பெற்றவர்கள் பூத உடலை விடுத்தும் சூட்சும உடலுடன் விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேண்டிய உணவை அவர்களே எடுத்துக் கொள்ள முடியாது. இதனால் எமதர்ம ராஜன் அவர்கள் மீது பரிதாபப்பட்டு 15 தினங்கள் விடுமுறை அளித்து ”மண்ணுலகிற்குச் சென்று உங்கள் பிள்ளைகள் தரும் உணவை உண்டு வாருங்கள்” என்பார். அதனால் தான் நாம் 15 நாட்களை ”மகாளயபட்சம் ” என கொண்டாடுகிறோம்.
தங்கள் பிள்ளைகளிடம் உணவுடன் எள்ளும், நீரும் பெற்று தணியாத பசியையும் தீர்த்துக் கொண்டு அவர்களை ஆசிர்வத்துவிட்டு வரட்டும் என்று எமன் அனுப்பி வைக்கும் 15 நாளில் ஒரு நாளாவது (அவரவர் பெற்றோர் திதி தினம்) அவர்களுக்குத் தர்ப்பணமும் பிண்டமும் வைக்க வேண்டும். இந்த பதினைந்து தினங்களும்கூட பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் மகாளைய அமாவாசை யிள்ளவது தர வேண்டும். திதியில் திவசம் செய்ய மறந்தவர்களும் மகாளயத்தில் அதைச் செய்யலாம்.
பித்ரு தர்ப்பணம் செய்தால் நமது முன்னோர்கள் சிறுவயதில் இறந்தவர்கள், பிறந்த உடன் இறந்த குழந்தைகள், துர்மரணம் ஆனவர்களுக்கு நல்ல கதி கிடைக்கும். இந்த நாட்களையும் மறந்தவர்கள் தீபாவளி அமாவாசைக்கு முந்திய 15 தினங்களில் தர்ப்பணம் செய்யலாம்.
இந்த நாட்களில் இறந்தவர்களுக்கு எள்ளும் நீரும் கொடுக்கவில்லை என்றால், “உனக்குச் சிரார்த்தம் செய்ய புத்திரன் இல்லாமல் போகட்டும். உனக்கு மண்ணுலகில் வாழும் போது இறுதிக் காலத்தில் உணவு கிடைக்காமல் போகட்டும்” என்று சாபம் கொடுத்து விட்டுச் செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால் முடிந்தவரை இதை யாரும் தவற விடுவதில்லை.
இந்த நாளில் வீட்டில் செய்யும் பித்து பூஜையை விட கடல், நீர்நிலைகள், ஆலய புஷ்கரணியில் செய்யப்படும் பித்ரு பூஜையே சிறந்தது.
வீட்டில் எப்படிச் செய்வது?
வெளியில் செண்டு பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இறந்து போன முன்னோர்களின் படத்தை வைத்து எள் தர்ப்பணம் செய்து அன்னம் உருட்டி மூன்று பிண்டங்கள் வைத்து அதை பித்ருக்களாக வரித்துத தேங்காய் , பலம் உடைத்து ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு காக்கைக்கு உணவு வைக்க வேண்டும். அது சாப்பிட்டதும் நம் பாதங்களை அலம்பிவிட்டு வீட்டுக்குள் வந்து மீண்டும் முன்னோர்களை வணங்கி விட்டு தலை வாழை இலையில் படையல் செய்து சாப்பிடலாம் .
தர்ப்பணம் செய்ய சிறந்த இடங்கள்:
நீர் நிலைகள், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம், பவானி கூடுதுறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம்
கடற்கரைத் தலங்கள்
ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல்கள் சங்கமிக்கும் கன்யாகுமரி, பூம்புகார், வேதாரணியம், கோடியக்கரை
ஆலயங்கள்
திருப்பூந்துருத்தி, திலதர்ப்பணபுரி, திருவாலங்காடு, திருவள்ளூர், திருமயம், அரண்மனைப்பட்டி, திரு நல்லாறு, திரு ராமேஸ்வரம்
மணிகர்ணிகா திருக்குளங்கள்
“வாரணாசிக்கு காசியாத்திரை செல்பவர்கள் மணிகர்ணிகா காட்டில் பிண்ட பூஜை செய்தால் 16 தலைமுறைகள் திருப்தி அடைவார்கள் என்பது ஐதீகம். அதிலும் மகாளய அமாவாசையில் மனிகர்ணிகாவில் தர்ப்பணம் விடுபவர்களுக்கு பித்ருக்கள் நேரடியாக தோன்றி ஆசி கூறுவதாக ஐதீகம்.
காசியைத் தவிர தமிழ் நாட்டில் மதுரை திருப்புவனம், திருச்சி திருவெள்ளறை, சென்னையில் திருநீர்மலை, திருவாரூர் அருகே வேதாரண்யத்திலும் மணிகர்ணிகா திருக்குளங்கள் உள்ளன .
(நன்றி : கே.குமாரசிவாச்சாரியார் | குமுதம் சிநேகிதி)

0 comments :
Post a Comment