background img

புதிய வரவு

கைது நியாயமானது:சிதம்பரம்

அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டது நியாயமான நடவடிக்கை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்த அண்ணா ஹசாரே காலையிலேயே தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் பல ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

அப்போது, காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. அண்ணா ஹசாரே கைது நியாயமானது என்று ப.சிதம்பரம் கூறினார். அவர் மேலும் கூறியது: நடந்த சம்பவங்களைக் குறித்து விளக்குவது எங்களுக்கு எந்தவித மகிழ்ச்சியையும் தரவில்லை. இந்தக் கடமையைச் செய்வது வேதனையைத்தான் தருகிறது. தடை உத்தரவை மீறுவதால் அவர் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்வார் என்று உறுதியான பின்புதான் தில்லி போலீஸார் அவரைக் கைது செய்தனர் என்றார் அவர்.

ஹசாரேயுடன் பேச்சு -முயற்சி தோல்வி: திங்கள்கிழமை ஹசாரேயுடன் பேச்சு நடத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை என்று சிதம்பரம் கூறினார்.

செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சிகளை விளக்கும்போது அவர் தெரிவித்தது: செவ்வாய்க்கிழமை காலை ஹசாரேயை ஒரு காவல் துறை அதிகாரி சந்தித்தார். ஹசாரே தனதுஆதரவாளர்களுடன் சேர்ந்து தடையுத்தரவை மீறப் போவதாகக் கூறப்படுவதைக் குறிப்பிட்டு, அவர்களின் நோக்கம் என்ன என்று அந்த அதிகாரி கேட்டார்.

தடையுத்தரவை மீறி ஜெயபிரகாஷ் நாராயண் பூங்காவுக்குச் செல்லப்போவதாக அவர் கூறினார். அவர்கள் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்யப்போகிறார்கள் என்று உறுதியானதும் ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவெடுத்தனர். குற்றவியல் சட்டம் 107, 151 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சிதம்பரம் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட கபில் சிபல் பேசும்போது, எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் அரசியல் சட்டத்தின் கீழுள்ள பொறுப்பு என்பதும் முக்கியமானது என்றார்.

நாங்களும் ஹசாரே அணிதான்: ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் எங்களுக்கும் ஹசாரே போல அக்கறையிருக்கிறது. ஆனால் அவருடைய முறைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஊழலைப் பொறுத்த அளவில் நாங்களும் ஹசாரே அணிதான் என்றார் கபில் சிபல்.

சந்திப்பில் பங்குபெற்ற அமைச்சர் அம்பிகா சோனி பேசும்போது, தனது எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக நடக்கும் என்று ஹசாரே சொல்வதை அரசு நம்புகிறது என்றார்.

ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஹசாரே மீது வசை மாரி பொழிந்ததற்கு மாறாக செவ்வாய் தனிப்பட்ட தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. ராகுல் காந்தி பிரதமரைச் சந்தித்ததன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. மேலும் பிரணாப் முகர்ஜியும் சிதம்பரமும் நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேசிய பின்பு மத்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் இந்த மாற்றம் வந்ததாகக் கூறப்படுகிறது.
Reasonable steps to arrest brother, Union Home Minister A. hacare. Chidambaram said.

Announced an indefinite hunger strike from Tuesday morning hacare brother was arrested by Delhi police. Many supporters were arrested with him.

Catch the Home Minister. Chidambaram, Human Resource Development Minister Kapil Sibal, Information and Broadcasting Minister Ambika Soni met with the press explaining.

The police can not accept the violation of the regulations. Catch Brother hacare that justified the arrest. Chidambaram said. He explains about the incidents did not give us any happiness. Vetanaiyaittan will do this duty. Punishable crime, he violated the injunction by the Delhi police arrested him after he said the firm would do.

Talk with hacare - Failed attempt: Monday hacare been trying to negotiate with. But he said, adding that kaikut try.

Light incident on Tuesday when he said: hacareyai Tuesday morning and met with a police officer. Together with the specific claim would violate tanatuataravalarkal hacare tataiyuttaravai, the officer asked what was their purpose.

Jaya Prakash Narayan, said he had violated tataiyuttaravai cellappovat to the park. Toward a potential threat to peace, confirming that they are punishable crime, police decided to take action against hacare. Criminal Law 107, sections 151 and he said, adding that action was taken.

Kapil Sibal, while talking to reporters who attended the meeting, said the protest right provided in the Constitution. But that is a primary responsibility under the Constitution.

We probably hacare: Corruption has lost interest in the matter as we hacare. But we approve of his methods. In the case of corruption, we would probably stems hacare.

Minister Ambika Soni to participating in the meeting, saying the government believes his anti-hacare said that the struggle will be peaceful.

Congress Party leaders on Sunday hacare not doing anything abusive personal attack Tuesday against polintatarku Mari. Congress party leader Rahul Gandhi in the background cantittatan been suggested that this change occurred. Pranab Mukherjee to meet Chidambaram said in Parliament and the Government's position is said to have this change in his expression.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts