background img

புதிய வரவு

ஹசாரேவின் ஜன்லோக்பால் மசோதா பரிசீலனை – இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்

If the bill relating to janlokp All parties meeting in New Delhi today (August 24) takes place.
If you have undertaken to bring the fast emphasis lokp Anna hacare strong central government led to the crisis.

ஜன்லோக்பால் மசோதா ‌தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெறுகிறது.

வலுவான லோக்பால் கொண்டுவர வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, அன்னா ஹசாரே ஆதரவாளர்களின் ஆதரளவாளர்கள் தயாரித்துள்ள ஜன்லொக்பால் மசோதாவை பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதன் ஒரு கட்டமாக இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன.

இதில் பிரதமர், நீதிபதிகள் ஆகியோரை ஜன்லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு ஆட்சேப‌னை இல்லை எனபது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ள லோக்பால் மசோதா கைவிடப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறதது.

ஹசாரேயின் ஜன்லோக்பால் மசோதா அனைத்துக்கட்சிகளின் சம்மதத்துடன் கொண்டுவரப்படலாம் எனவும் தெரிகிறது. ஜன்லோக்பால் மசோதா நிறைவேற எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு தருமாறு மத்திய அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக , தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை மேலும் நீட்டிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts