வாஷிங்டன் : அடுத்தாண்டில் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக, மூன்று மாகாணங்களுக்கான மூன்று நாள் பஸ் யாத்திரையை நேற்று முன்தினம் துவக்கினார்.
வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் சூழலில், அதிபராக பதவியேற்ற பின் ஒபாமா, முதன் முறையாக இந்த பஸ் யாத்திரையை மேற்கொள்கிறார்.
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களான, மின்னசோட்டா, இல்லினாய்ஸ் மற்றும் அயவா ஆகியவற்றில் மூன்று நாட்கள் இந்த யாத்திரை நடக்கிறது. நேற்று முன்தினம் மின்னசோட்டாவில் தனது யாத்திரையைத் துவக்கிய ஒபாமா, அயவாவில் இன்று முடிக்கிறார். மின்னசோட்டாவில் மக்களிடையே பேசிய அவர், "எனது நடவடிக்கைகளுக்கு குடியரசு கட்சியினர் தொடர்ந்து முட்டுக்கட்டை இட்டு வந்தால், அவர்கள் கடுமையாகத் தோற்கடிக்கப்படுவர். விரைவில், காங்கிரஸ் சபையில் வேலைவாய்ப்புக்கான புதிய திட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளேன். அதை எதிர்க்கட்சியினர் எதிர்த்தால், அவர்களை எதிர்த்து நான் கடுமையான பிரசாரம் மேற்கொள்ள வேண்டி வரும்' என்றார். நேற்று அயாவா மாகாணத்தில் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.

0 comments :
Post a Comment