background img

புதிய வரவு

தமிழ் ஈழ விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் கருணாநிதி: காங். கூட்டணியிலிருந்து விலக திட்டம்


Karunanidhi

சென்னை: அழகிரி, ஸ்டாலின் இடையிலான மோதலை திசை திருப்பவே இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் கூற ஆரம்பித்துள்ளதாக “தி டெலிகிராப்” ஆங்கில நாளேடு கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக மீதான கறையைப் போக்கவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரவுமே இலங்கை விவகாரத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது.

ஆனால், அழகிரி- ஸ்டாலின் இடையிலான பிரச்சனையை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தி தான் இது என்று “தி டெலிகிராப்” தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்பான டெசோ அமைப்பின் கூட்டம் இன்று சென்னையில் கருணாநிதியின் தலைமையில் நடைபெற உள்ளது. இந் நிலையில் டெலிகிராப் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

திமுகவின் இந்த முயற்சி இந்தியத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் டெலிகிராப் கூறியுள்ளது.

கருணாநிதி வித்தை காட்டுகிறார்-பழ.நெடுமாறன்:

இந் நிலையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருப்பதாவது:

இலங்கையில் உள்ள தமிழர்கள் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவளித்து வருகிறார்கள். 1977 மற்றும் 1997-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களே சாட்சி.

வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை மீண்டும் தாயகத்தில் குடியமர்த்திவிட்டு சுதந்திரமான முறையில் ஐ.நா. பார்வையாளர்கள் கண்காணிப்பில் தமிழ் ஈழத்துக்காக மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களின் உண்மையான உணர்வுகள் வெளிப்படும்.

1983ல் கருணாநிதி, வீரமணி மற்றும் நானும் சேர்ந்துதான் டெசோ அமைப்பை உருவாக்கினோம். ஆனால் எங்கள் யாரிடமும் கேட்காமல் டெசோ இனி இயங்காது என்று கருணாநிதி அறிவித்தார். இப்போது யாரிடமும் கேட்காமல் டெசோ உருவாக்கப்படும் என்கிறார்.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுக்க தவறிய கருணாநிதி மீது உலக தமிழர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதை மாற்ற செம்மொழி மாநாடு முதல் டெசோ வரை அவருக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக கருணாநிதி விரும்புகிறார். அதனால் தமிழர் ஈழ கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் 5: கடைசி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் சொந்த மண்ணில் மீண்டும் மண்ணை கவ்வியது


Gowtham Gambhir


சென்னை: ஐபிஎல் 5 தொடரில் 140 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. கடைசி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதியில் சொந்த மண்ணில் மீண்டும் மண்ணை கவ்வியது.

ஐபிஎல் 5 தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ந்து கை கொடுத்த வந்த துவக்க வீரர் டு பிளசிஸ் இன்று 3 ரன்களில் அவுட்டானார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மைக்கேல் ஹஸ்ஸி 18 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். துவக்கத்திலேயே 2 விக்கெட்களை இழந்து தவித்த அணியின் ஸ்கோரை உயர்த்த சிறப்பாக ஆடி வந்த ரெய்னாவிற்கு, ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பிராவோ 12 ரன்களில் அவுட்டானார்.

சுரேஷ் ரெய்னா 34 ரன்களை எடுத்து ஐபிஎல் தொடர்களில் 2,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால் 44 ரன்களை எடுத்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆட முயன்ற போது, காலிஸ் பந்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த ஜடேஜா, கேப்டன் டோணி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றது. ஆனால் 9 ரன்கள் எடுத்த ஜடேஜா கேட்ச் கொடுத்து வெளியேறினார். விக்கெட்கள் தொடர்ந்து சரிந்த நிலையில் இறுதி வரை களத்தில் இருந்த கேப்டன் டோணி, 34 ரன்களை எடுத்தார். அவருக்கு மார்கல் ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்களை இழந்து 139 ரன்களை எடுத்தது. கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணியின் தரப்பில் காலிஸ் 2 விக்கெட்களை எடுத்தார்.

140 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துவக்கத்திலேயே மெக்கல்லம் 2 ரன்கள் எடுத்த துவக்க வீரர் மெக்கல்லம், அஸ்வின் வீசிய பந்தை அடித்த ஆட முயன்ற போது கேட்சாகி வெளியேறினார்.

அடுத்து வந்த ஜாக் காலிஸ், கேப்டன் கம்பிர் உடன் ஜோடி சேர்ந்து ஆடினார். ஆனால் 26 ரன்கள் எடுத்த காலிஸ் அடித்து ஆட முயன்று, டோணியிடம் கேட்சாகி வெளியேறினார். ஆனால் கேப்டன் கம்பிர் தொடர்ந்து பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்தார். அதன்பிறகு வந்த திவாரி 1 சிக்ஸ் அடித்து 13 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஆனால் வெற்றியை நெருங்கிய நிலையில் கேப்டன் கெளதம் கம்பிர் 63 ரன்களில் எல்.பி.டபில்யூ ஆனார். கடைசி கட்டத்தில் யூசுப் பதான் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்சாகி ஆட்டமிழந்தார். இறுதியில் 19.4 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிய வெற்றிப் பெற்றது.

மும்பை அணி டென்ஷன் வெற்றி


ஐ.பி.எல் லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல் தொடரின் 40வது லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. சங்ககரா விலகிக் கொள்ள டெக்கான் அணியின் அணித்தலைவர் 
பொறுப்பை கேமரான் ஒயிட் ஏற்றார். மும்பை அணியில் காயமடைந்த போலார்டு நீக்கப்பட்டு, ரிச்சர்ட் லீவி வாய்ப்பு பெற்றார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித்தலைவர் ஹர்பஜன் களத்தடுப்பை தெரிவு செய்தார். டெக்கான் அணிக்கு பார்த்திவ் படேல், ஷிகர் தவான் சேர்ந்து நல்ல தொடக்கம் தந்தனர். ஆர்.பி.சிங் பந்தில் பார்த்திவ் ஒரு சிக்சர் அடித்தார். மலிங்கா பந்தில் தவான் ஒரு பவுண்டரி விளாசினார். மீண்டும் பந்துவீச வந்த ஆர்.பி.சிங் இம்முறை பார்த்திவை(19) வெளியேற்றினார். இதற்கு பின் வந்தவர்கள் சரியாக விளையாடவில்லை. ஆடுகளமும் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க, மும்பை வீரர்கள் பட்டையை கிளப்பினர். ஹர்பஜன் சுழலில் ஜாகி(2) சிக்கினார். மலிங்கா பந்தில் கேமரான் ஒயிட் ஆட்டமிழந்தார். 
தொடர்ந்து அசத்திய ஹர்பஜன் வலையில் தவானும்(29) வீழ்ந்தார். பிராங்க்ளின் வீசிய போட்டியின் 13வது ஓவரில் கிறிஸ்டியன்(5), சிப்லி(1) நடையை கட்டினர். முடிவில் டெக்கான் அணி 18.4 ஓவரில் 100 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எளிதான எட்டக் கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணி திணறல் தொடக்கம் கண்டது. முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றினர். ஸ்டைன் வீசிய முதல் பந்தில் லீவி(0) போல்டானார். பிரதாப் சிங் வேகத்தில் சச்சின்(14) ஆட்டமிழந்தார். தொடர்ந்து மிரட்டிய ஸ்டைன் பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்கும்(2) ஆட்டமிழக்க, 8.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 45 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது. பின் ரோகித் சர்மா, பிராங்க்ளின் இணைந்து போராடினர். 
பொறுப்பாக விளையாடிய ரோகித் சர்மா 42 ஓட்டங்களுக்கு(4 பவுண்டரி, 1 சிக்சர்), டுமினி பந்தில் வெளியேறினார். சிறிது நேரத்தில் பிராங்க்ளினும்(13) ஆட்டமிழக்க, டென்ஷன் ஏற்பட்டது. ஆனால் அமித் மிஸ்ரா வீசிய போட்டியின் 18வது ஓவரில் அம்பதி ராயுடு இரண்டு பவுண்டரி அடிக்க, பதட்டம் தணிந்தது. மும்பை அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 101 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை டெக்கான் வீரர் ஸ்டைன் வென்றார்.

ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 1 ஓட்டத்தில் அதிர்ச்சி தோல்வி

ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 153 ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 1 ஓட்டத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. ஐபிஎல் 5 தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் துடுப்பெடுத்தட முடிவு செய்தது. அதன் பின் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்சின் தொடக்க வீரர் ஜெயவர்த்தனே 2வது ஓவரிலேயே 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பீட்டர்சனும் 5 ஓட்டங்களில் டிராவிடிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடக்கத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்கோரை, அணித்தலைவர் ஷேவாக் தூக்கி நிறுத்தினார். அதிரடியாக ஆடிய ஷேவாக் ஐபிஎல் 5 தொடரில் தனது 4வது அரைசதத்தை கடந்தார். அதன்பிறகும் அதிரடியை தொடர்ந்த ஷேவாக் 39 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸ், 8 பவுண்டரிகள் அடித்து 63 ஓட்டங்களை குவித்து, மெனாரியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி வந்த ரோஸ் டெய்லர் 25 ஓட்டங்கள் எடுத்து போல்டானார். அடுத்த வந்த நமன் ஓஜா அதிரடியாக 1 சிக்ஸ் அடித்து, அடுத்த பந்தில் டிராவிடிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் யோகேஷ் நகர் உடன் ஜோடி சேர்ந்த இர்பான் பதான் அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினார். யோகேஷ் நகர் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் இர்பான் பதான் ஒரு பவுண்டரி அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ஓட்டங்களை எடுத்தது. 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்று களமிறங்கிய ராஜஸ்தான் றொயல்ஸ் அணி மந்தமாக தொடங்கினாலும், 5 ஓவர்களுக்கு பிறகு அதிரடிக்கு தாவியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் டிராவிட், ரஹானே ஜோடி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். 13வது ஓவர் வரை விக்கெட் போகாமல் ஆடிய ராஜஸ்தான் றொயல்ஸ் 99வது ஓட்டத்தில் முதல் விக்கெட்டை இழந்தது. அணித்தலைவர் ராகுல் டிராவிட் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகும் அதிரடியாக ஆடிய ரஹானே அரைசதம் கடந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பிராட் ஹார்ஜ் 22 ஓட்டங்கள் எடுத்து எல்.பி.டபில்யூ ஆனார். கடைசி வரை ரஹானே களத்தில் நின்று அணியின் வெற்றிக்காக பாடுபட்டார். கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஓவைஸ் ஷா 1 சிக்ஸ் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் கடைசி பந்தில் வெற்றிப் பெற 2 ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் பந்தை அடிக்க தவறிய ரஹானே ரன் ஓட, எதிர் முனைக்கு சென்ற ஓவைஸ் ஷா ஆட்டமிழந்தார். இதனால் கடைசி வரை களத்தில் நின்று போராடிய ரஹானே ஆட்டம் வீணாகி, ராஜஸ்தான் ராயல்ஸ் 1 ஓட்டத்தில் தோல்வியை தழுவியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஹானே 63 பந்துகளில் 1 சிக்ஸ், 9 பவுண்டரிகள் அடித்து 84 ஓட்டங்கள் எடுத்தார்.

மதுரை ஆதீனத்தின் அதிரடி முடிவு… இந்து அமைப்புகள் அவசரமாக கூடுகின்றன!


Arjun Sampathநித்தியானந்தாவை, 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்தியாவின் மூத்த ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக தற்போதைய ஆதீனம் நியமித்துள்ளது குறித்து பல்வேறு இந்துக் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்துப் பேச அவசரக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியிலும் மதுரை ஆதீனத்தின் இந்த திடீர் முடிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஆதீனத்தை மக்கள் தற்போது கேலிப் பொருளாக பார்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், இன்னும் ஓரிரு நாளில் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம். தற்போது நடந்து வருவது மிகவும் அபாயகரமான சூழல் ஏற்பட்டிருப்பதையே உணர்த்துகிறது. மதுரை ஆதீனம் மிகவும் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார். இந்துக்கள் அனைவரையும் அவர் அவமானப்படுத்தியுள்ளார், களங்கப்படுத்தியுள்ளார்.

மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டவருக்கு பெங்களூரில் வைத்து முடி சூட்டியுள்ளார். அங்கு போய் மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு யார் என்பதை அவர் கூறியுள்ளார். இது தவறான செயல் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை அவசரப்பட்டு முடிவு செய்ய முடியாது. திருப்பனந்தாள், தருமபுரம் ஆதீனங்களை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.
நித்தியானந்தா போன்றவர்களுக்கான பதவி அல்ல இது. அவர் இந்தப் பதவிக்கு வர அருகதை இல்லை. தனது பெயரை முதலில் சரி செய்து விட்டுத்தான் அவர் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.
மதுரை ஆதீனம் தற்போது பெங்களூரில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். தனது பாதுகாவலர்களைக் கூட அவர் பெங்களூருக்குக் கூட்டிச் செல்லவில்லை. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

எந்தவிதமான முறையான அம்சங்களும் இந்த விவகாரத்தில் கையாளப்படவில்லை. இது பெரும் நகைச்சுவையான ஒரு சம்பவமாக மாறியுள்ளது. அதேசமயம், இந்து மக்கள் மனதளவில் புண்பட்டுப் போயுள்ளனர் என்றார் சம்பத்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் எஸ்.பரமசிவம் கூறுகையில் தனது வாரிசாக மதுரை ஆதீனம் தேர்ந்தெடுக்கும் நபரை ஏற்கவே முடியாது. இதுகுறித்து நாங்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதேபோல விஸ்வ இந்து பரிஷத்தும் மதுரை ஆதீனத்தின் முடிவை விமர்சித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நித்தியானந்தாவை கூட்டிப் போனார் மதுரை ஆதீனம்!


பெங்களூர் முடி சூட்டலுக்குப் பின்னர் மதுரை திரும்பிய நித்தியானந்தாவை மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கூட்டிச் சென்று கோவிலை சுட்டிக் காட்டினார் மதுரை ஆதீனம். இதனால் கோவிலுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் நேற்று இரவு பெங்களூரிலிருந்து மதுரைக்கு வந்தனர். மதுரை ஆதீன மடத்திற்குள் உள்ள விடுதியில் தங்கினர். நடிகை ரஞ்சிதாவும் இவர்களுடன் பெங்களூரிலிருந்து வந்தார்.
இதையடுத்து இன்று காலை செய்தியாளர்களை ஆதீனமும் நித்தியானந்தாவும் சந்தித்தனர். அப்போது மதுரை ஆதீனம் பேசுகையில், மதுரை ஆதீன மடத்தின் அடுத்த ஆதீனமாக 2 நாட்களுக்கு முன்பு நித்தியானந்தா நியமிக்கப்பட்டார். முறைப்படியான இளைய ஆதீனமாக பட்டம் சூட்டும் விழா ஜூன் 5ம் தேதி நடைபெறும். மதுரை ஆதீன மடத்திற்கு நித்தியானந்தா ரூ. 1 கோடி நிதியுதவி செய்கிறார் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு இருவரும் அருகில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றனர். தற்போது மதுரையில் சித்திரைத் திருவி்ழா நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. இந்த நிலையில் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் கோவிலுக்குள் சேர்ந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நித்தியானந்தாவுக்கு கோவிலைச் சுற்றிக் காட்டினார் மதுரை ஆதீனம். பின்னர் இருவர் பெயரிலும் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.

இணையத்தில் வெளியானது பில்லா 2 பாடல்கள் அதிர்ச்சியில் படக்குழு


அஜித்தின் நடிப்பில் பெரும் எதிர்ப்பை ஏற்ப்படுத்திய பில்லா 2 திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நாளைய தினம் நடைபெறும் என அறிவித்த நிலையில் பாடல்கள் இணையத்தில் வெளியாகி பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளன.

எனக்கு திருமணம் -நடிகை ஸ்ரேயா


நடிகை ஸ்ரேயாவுக்கு திருமண ஏற்பாடு நடப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது உண்மைதான் என ஒப்புக் கொண்டார். ஸ்ரேயா அளித்த பேட்டி வருமாறு:- 
நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அது அது அந்தந்த வயதில் நடக்க வேண்டும். பெற்றோருக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே நான் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையே திருமணம் செய்து கொள்வேன். 
திருமணத்துக்கு நான் சம்மதித்து விட்டதால் ஸ்ரேயாவுக்கு சினிமா வாய்ப்பு போய்விட்டது. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் பரவக்கூடும். சினிமாவுக்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து இதனை புரிந்து கொள்ளவேண்டும். மனதுக்கு பிடித்தவர் கிடைத்தால் காதலிக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அப்படி யாரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை. 
எனவேதான் பெற்றோர் பார்க்கிறார்கள். எனக்கு கணவராக வருபவர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். சினிமாவை பற்றி நன்றாக புரிந்து தெளிவடைந்தவராக இருக்க வேண்டும். எனக்கு நல்ல நண்பராக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் என்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். 
திருமணத்துக்கு பிறகு நிறைய பேர் விவாகரத்து செய்து பிரிகிறார்கள். அப்படி விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. திருமணத்துக்கு முன்பு கணவராக வரப்போகிறவர் எப்படிப்பட்டவர் என்று முழுமையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவரது குணநலன், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பிறகு கழுத்தை நீட்ட வேண்டும். திருமணமானபின் எக்காரணத்தை கொண்டும் விவாகரத்து செய்யக்கூடாது.

கார்த்தி, ‌ஜீவாவுடன் ஜோடி சேரும் இலியானா


திருந்தி வந்த இலியானா என்றும் சொல்லலாம். கேடியில் அறிமுகமான பின் இலியானாவை தமிழ்‌த் திரையுலகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் தெலுங்குக்கு சென்றவர் அங்கு முன்னணி நடிகையானார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவின் அழைப்பை கண்டு கொள்ளவில்லை, உதாசீனம் செய்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழில் நடித்தப் படம் நண்பன்

தெலுங்கில் தமன்னா,த்‌ரிஷா,தாப்ஸி, நயன்தாரா போன்றவர்கள் முன்னணி ஹீரோக்களுடன் அதிகமாக ஜோடி சேர்வதால் இலியானாவின் இடம் காலியாகி வருகிறது. இதனால் தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு‌த் தூது அனுப்பி வருகிறார். முதல்கட்டமாக லிங்குசாமி இந்தியில் ‌ரீமேக் செய்யும் வேட்டையில் ஷாகித் கபூர் ஜோடியாக நடிக்கிறார். விரைவில் கார்த்தி, ‌ஜீவா என்று அவர் ஜோடிபோட வாய்ப்பு உள்ளது.

மே-11-ல் சகுனி ஆடியோ ரிலீஸ்!



கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சகுனி படத்தின் ஆடியோ ரிலீஸ் மே 11ம் தேதி நடைபெற இருக்கிறது. புதுமுகம் ஷங்கர் தயாள் இயக்கத்தில், கார்த்தி, ப்ரணீதா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சகுனி. இப்படத்தில் கார்த்தி முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் சேர்ந்து காமெடியில் சாந்தானமும் அசத்த இருக்கிறார். பெப்சி பிரச்னையால் சூட்டிங் பாதிப்பு, சகுனியின் வில்லன் போர்ஷன் சரிவர அமையாததால் மீண்டும் ‌வில்லன் நடிகரை மாற்றி பிரகாஷ்ராஜை வைத்து மீண்டும் ரீ-சூட்டிங் என்று பல்வேறு பிரச்னைகளால் சிக்கி தவித்து வந்த சகுனி படம் ஒருவழியாக முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் ஆடியோவை வருகிற மே 11ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், மே 11முதல் ரசிகர்களின் செவிகளுக்கு இன்ப தேனாக பாய இருக்கிறது.

ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டியது ….

அழகு என்பதும் முக்கியமான விடயம் தான் என்று சமூக அமைப்பு சொல்லிகொடுத்திருக்கிறது அழகாக இருக்க வேண்டும் என்பதை கொஞ்சம் அன்னியப்படுத்தியே எமது சமூகம் சொல்லி வந்துள்ளது இதை உலக அரசியல் அழகுத்தளம் சரியாக பயன்படுத்திக்கொண்டது அழகுசதனங்களுக்கு குறைந்தது 60 கோடி வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள் திடீர் என்று அழகுசாதன விளம்பரங்களில் உதித்தார்கள் அழகிகள் சுஸ்மிதாசன் ஐஸ்வர்யாராய் போன்றோர் அதுவரை எங்கள் வீட்டில் அழகிகள் இல்லையா என்ன ?உங்களுடைய அம்மா என்னுடைய அம்மா உங்களுட்டைய அக்கா,சகோதரிகள் எல்லோரும் அழகாகத்தான் இருந்திருக்கிறோம் உங்களுக்கு அழகு என்றால் என்ன என்ற புரிதலை ஏற்படுத்துவதற்கு பதிலாக புதிதாக ஏற்பட்டிருக்க கூடிய பொருளாதார சித்தாந்தம் அழகென்றால் இதுதான் என்று ஒரு வரை படத்தை உங்கள் முன்னால் வைத்திருப்பதுதான் வருத்தத்திற்குரிய விடயம் ரொம்ப அழகாக உங்களுக்கு முற்றிலும் பொருத்தமில்லாத உருவத்தை முன்வைக்கிறார்கள் ஏன் அப்படி முன்வைக்கிறார்கள் என்றால் அப்படி முன்வைத்தால் தான் நீங்கள் அதை நோக்கி ஓட முடியும் உங்களை போன்ற ஒரு சக மனிசியை முன் வைத்தல் இதுதானே நான் நான் ஏன் அதை நோக்கி ஓட வேண்டும்
உங்களுக்கு பொருத்தமில்லாத இன்னும் சொன்னால் இந்திய பெரும்பான்மை சமூகத்திற்கு பொருத்தமில்லாத உடல் வடிவமைப்பும் முக வடிவமைப்பும் நிற வடிவமைப்பும் மேலை நாடுகளால் உருவாக்கப்பட்டு அது படமாக்கப்பட்டு உங்கள் கண்முன்னால் தொடர்ந்து திணிக்க படுகின்றது
நமக்கு ஏற்ற விதமாக மாறி இருக்க கூடிய அழகின் அரசியலை கையாளுங்கள்


நண்பர்களிடையே காதல் பூப்பதற்கு அடிப்பட காரணங்கள்.

ஜ்

ஆண் தோழன், பெண் தோழி என்ற வித்தியாசங்கள் கடந்து, நட்பு என்ற வட்டத்தின் எல்லை கடக்கத் தூண்டும் பதின்பருவத் தீண்டல்கள்.

விரும்பியவர்களிடத்தில் மனம் சில விதிகளை மீற விரும்பும். எதிர்பாலின நட்பில் மட்டும் மனம் ஆயிரம் ஜாலம் காட்டும். நட்புக்கும் காதலுக்கும் எது எல்லைக் கோடு? எதைக் கடந்தால் காதல்? உறக்கம் தொலைக்கவைக்கும் உணர்வை, உறவை, உளவியலைப் பற்றிச் உளவியல் நிபுணர்கள் என்ன சொல்கின்றார்களெனில்,

”இவையிவைதான் நட்பின் கட்டுப்பாடுகள் அல்லது எல்லைக் கோடுகள்’ என்று ஆண்-பெண் உறவைத் தெளிவாக வரையறுக்க முடியாது. பலருக்கு நட்பும் காதலும் பாலும் நீரும் போலக் கலந்திருப்பதால் குழப்பத்திலேயே திளைப்பார்கள். ஓரளவுக்கு நெருங்கிப் பழகிய பிறகு தெரியாத நபரைவிட, தெரிந்த நபரே நல்லது என்று பெண்கள் உணர்கிறார்கள்.

நண்பர்களிடையே காதல் பூப்பதற்கு அடிப்படை நான்கு காரணங்கள்.

முதல் காரணம்,:- நெருக்கம். மிக அருகருகே இருப்பதால், அடிக்கடி பார்ப்பதால், பேசுவதால் காதல் ஏற்படும்.

இரண்டாவது காரணம்:- நிறம், நடை, உடை, பாவனை, பிடித்த விஷயங்கள், கோட்பாடு, கொள்கை, சினிமா, வேலை என இருவருக்குமே ஒரே மாதிரியான கருத்து ஒத்திசைவால் ஏற்படும் காதல். பரஸ்பர உதவி, அக்கறை காரணமாக ஏற்படுவது.

மூன்றாவது காரணம்:- உதாரணத்துக்கு, பிறந்த நாள் வாழ்த்து சொல்வது, பரிசுப் பொருள் வழங்குவது, உடல்நலம் இல்லாத சமயம் கவனித்துக்கொள்வது போன்றவற்றால் காதல் அரும்பலாம்.

நான்காவதாக:
- இரு பாலினத்தவரும் எதிர் பாலினத்தவர் மீது வைத்திருக்கும் உடல் ரீதியான கவர்ச்சி, அழகுணர்ச்சி ஆகிய காரணங்கள்.

பொதுவாக ஆண்கள், அழகான பெண்களைத்தான் காதலிப்பார்கள். நேர் எதிராகப் பெண்களோ, தன்மேல் அன்பாக, அக்கறையாக, மனம் குதூகலிக்கப் பேசுபவனாக, தனக்குப் பாதுகாப்பாக இவன் இருப்பான் என்று எந்த ஆணை நினைக்கிறார்களோ அவர்களைத்தான் காதலிப்பார்கள். பெண்ணின் அழகைப் பார்த்து ஆணுக்குக் காதல் அரும்ப, ஆணின் அரவணைக்கும் குணமே பெண்ணுக்குக் காதலைத் தூண்டும் சக்தியாக இருக்கிறது.

ஆண் இன்னொரு ஆணுடன் பழகும்போது நட்புக்காகப் பணம், வேலை ஏன் உயிரையே கொடுக்கலாம். பெண் அதிகபட்சமாகத் தன்னையே கொடுக்க முடிவெடுப்பாள். வசதியான பெண், நன்றாகப் படிக்கும் ஏழைப் பையனுக்கு உதவ வேண்டும் என்று பரிதாபத்தில் பழகினால்கூட, ‘உன் மேல இவ்ளோ அன்பு வெச்சிருக்காளே. மச்சான், இது சத்தியமா காதல்தான்டா’ என்று அவனது நண்பர்களின் தூண்டுதலை அவனே நம்பத் தொடங்குவான். இது பெண்ணுக்குத் தெரிந்தால் அவளுக்குப் பேரதிர்ச்சிதான் மிஞ்சும்.

ஆண் காதல் சொல்லி பெண் ஏற்கவில்லை எனில், சொறி…இனிமே ஃப்ரெண்ட்ஸாவே பழகலாம்’ என்று சொல்லி மறுத்தாலும், அது அவன் அடிமனதில் வண்டல் மண் போலத் தேங்கி இருக்கும். அடுத்தடுத்து தொடர்ச்சியாகத் தன் காதலை சமயம் கிடைக்கும்போது எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பான். இறுதி வரை ஆணின் எண்ணம் மாறாது.

ஆண் – பெண் நட்பு கம்பி மேல் நடப்பதற்குச் சமம். அந்த நட்பில் அதிகம் பேசப் பேச நெருக்கம் அதிகமாகும். நட்பு, காதலாகும் என்ற உண்மையை, அதில் இருக்கும் நல்லது கெட்டதுகளை உணர்ந்து, இறுதி வரை நட்பாகவே இருக்கலாம். அல்லது அந்த நட்பு காதலாக உருமாறும் சமயம் அது உங்களுக்கு உண்மையாக, நம்பிக்கையான வாழ்நாள் துணையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், மேற்கொண்டு தொடரலாம்!”

ஆதலினால், நட்பின் கணவாய் வழியே காதல் தேசம் புகுதல் சரி/தவறு. உங்கள் தேர்வு எது என்பது உங்கள் கையில்!


எப்படி சொல்லலாம் ஐ லவ் யூ …

Fun Waysகாதலித்து திருமணம் செய்திருந்தாலும் சில வருடங்களிலே லைப் போராடிக்க ஆரம்பிக்கிறதா? காதலிக்கும் போது எப்படி உயிரோட்டமுள்ளதாய் வாழ்க்கை இருந்ததோ அதேபோல மாற்றுங்கள். காதலிக்கும் போது உயிரைக் கொடுத்து சொல்லியிருப்போம் ஐ லவ் யூ என்ற வார்த்தையை. அதையே திருமணத்திற்குப் பின்னரும் சொல்லிப்பாருங்களேன். ஐ லவ் யூ என்பது மூன்றெழுத்து வார்த்தைதான், அது நிகழ்த்தும் மாயாஜாலம் அற்புதமானது. இந்த வார்த்தையை சாதாரணமாக சொன்னால் இயந்திரத்தனமாக இருக்கும். எனவே உங்கள் துணையை கவர, உங்களின் நேசத்தை வெளிப்படுத்த ஐ லவ் யூ என்ற வார்த்தையை எங்கு, எப்படிச்சொன்னால் உயிரோட்டமுள்ளதாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? இதோ உங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் நிபுணர்கள்.

 

காஃபியில் இதயம்
தினசரி காலையில் கண் விழிக்கும் போதே ஐ லவ் யூ என்ற வார்த்தையில்தான் கண்விழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ரொம்ப சிம்பிள் நீங்கள் கொடுக்கும் காஃபியில் சாக்லேட் பவுடரைக் கொண்டு இதயத்தை வரைந்து கொடுங்கள் அந்த இனிப்பான இதயம் உங்களவரின் இதயத்தை நேரடியாக சென்று தொடும். உங்கள் காதலை அவருக்கு உணர்த்தி விடும்.
கடற்கரை மணல் கவிதை
தம்பதி சமேதராக கடற்கரைக்கு போகிறீர்களா? அங்கே அழகாக சொல்லலாம் ஐ லவ் யூ. கடற்கரை மணலின் பின்னணியில் எழுதுங்கள் கடற்காற்றின் ஜில்லிப்பை விட ஐ லவ் யூ என்ற வார்த்தையில் உங்களவர் குளிர்ந்து போவார்.
மெழுகுவர்த்தி வெளிச்சம்
இரவு நேர டின்னரின் போது தனிமைப் பொழுது ரொமான்டிக்காக மெழுகுவர்த்தியை அலங்கரியுங்கள். அந்த விளக்கு வெளிச்சத்தில் மின்னட்டுமே ஐ லவ் யூ. அப்புறம் பாருங்கள் காதல் உணர்வுகள் சிறகடிக்கும்.
கற்பனையாய் கவிதை
உலகத்தில் உள்ள மிகச்சிறந்த வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எழுதுங்கள் ஒரு கவிதையை. உங்களவர் விரும்பி படிக்கும் புத்தகத்தில் இந்த கவிதையை புக் மார்க் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு கவனியுங்கள். அவர் அந்த கவிதையை படித்த பின் பாருங்கள் உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை.
காதலை நினைவூட்டுங்கள்

அழகான நிறத்தில் ஒரு காகிதம் எடுங்கள். உங்கள் எண்ணத்தில் இருப்பதை என்ன தேவை என்பதை எழுதுங்கள். உங்களின் கடந்த காலத்திய ரொமான்ஸ் நினைவுகளை நினைவூட்டுங்கள். சின்ன, சின்னதாய் காதலை உணர்த்தும் படங்களை வரையுங்கள். அப்புறம் இருக்கிறது முத்தாய்ப்பாய் ஐ லவ் யூ என்ற வார்த்தை. இந்த கடிதம் அசத்திவிடும் உங்கள் ஆளை.
ஆசையாய் ஒரு படம்
எழுத வரவில்லையா? படம் வரைவதில் கில்லாடியா நீங்கள்? உங்களுக்கு பிடித்தமான படம் ஒன்றை வரையுங்கள். அதில் சாமர்த்தியமாய் உங்களின் காதலை வெளிப்படுத்துங்களேன். இதுமாதிரியான ரொமான்ஸ் ஐடியாக்களால் உங்கள் காதல்வாழ்க்கை உயிரோட்டம் உள்ளதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். முயற்சி செய்து பாருங்களேன்.


ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் பள்ளி தலைமையாசிரியருக்கு எழுதிய கடிதம்.


<!--
google_ad_client = "ca-pub-3180037313078984";
/* tyc main post */
google_ad_slot = "4701460135";
google_ad_width = 468;
google_ad_height = 60;
google_language = 'en';
//-->



மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களே,

எனது மகன், அனைத்து மனிதர் களும் நியாயமானவர்கள் அல்ல;அனைத்து மனிதர்களும் உண்மை யானவர்கள் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல ஒரு பின்பற்றத் தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று ஓர் அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு பகைவனைப் போல ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பின்வருவதை அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும்.

ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரைவிட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

அவனுக்குத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள்.

அவனுக்குப் பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் இரகசியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள்.

அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

மற்றவர்கள் தவறு என்று விமரிசித்தாலும், தனது சுய சிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டு குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாய்க் கரைந்து போய்விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவி சாய்க்க வேண்டும். எனி னும் உண்மை என்னும் சல்லடையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்து எடுக்க அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள். தனது செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் சாமர்த்தியம் அவனுக்கு வேண்டும்.

ஆனால், தனது இதயத்திற்கும், தனது ஆன்மா விற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. பெருங் கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்டிப் போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொடுங்கள்.

அவனை அன்போடு நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் காட்டி மற்றவர்களைச் சார்ந்திருக்க வைக்க வேண்டாம். ஏனென்றால் கடுமையான தீயில் காய்ச்சப்பட்ட இரும்பு மட்டும்தான் பயன்மிக்கதாக மாறுகிறது.

தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள் அதே வேளை யில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இது ஒருமிகப் பெரிய பட்டியல் தான். இதில் உங்களுக்குச் சாத்திய மானதையெல்லாம் நீங்கள் அவனுக் குக் கற்றுக் கொடுங்கள்.

அவன் மிக நல்லவன் , எனது அன்பு மகன்.

முக நூல்

Popular Posts