திருந்தி வந்த இலியானா என்றும் சொல்லலாம். கேடியில் அறிமுகமான பின் இலியானாவை தமிழ்த் திரையுலகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் தெலுங்குக்கு சென்றவர் அங்கு முன்னணி நடிகையானார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவின் அழைப்பை கண்டு கொள்ளவில்லை, உதாசீனம் செய்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழில் நடித்தப் படம் நண்பன்
தெலுங்கில் தமன்னா,த்ரிஷா,தாப்ஸி, நயன்தாரா போன்றவர்கள் முன்னணி ஹீரோக்களுடன் அதிகமாக ஜோடி சேர்வதால் இலியானாவின் இடம் காலியாகி வருகிறது. இதனால் தமிழ்ப்பட இயக்குனர்களுக்குத் தூது அனுப்பி வருகிறார். முதல்கட்டமாக லிங்குசாமி இந்தியில் ரீமேக் செய்யும் வேட்டையில் ஷாகித் கபூர் ஜோடியாக நடிக்கிறார். விரைவில் கார்த்தி, ஜீவா என்று அவர் ஜோடிபோட வாய்ப்பு உள்ளது.
0 comments :
Post a Comment