background img

புதிய வரவு

ஐபிஎல் 5: கடைசி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் சொந்த மண்ணில் மீண்டும் மண்ணை கவ்வியது


Gowtham Gambhir


சென்னை: ஐபிஎல் 5 தொடரில் 140 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. கடைசி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதியில் சொந்த மண்ணில் மீண்டும் மண்ணை கவ்வியது.

ஐபிஎல் 5 தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ந்து கை கொடுத்த வந்த துவக்க வீரர் டு பிளசிஸ் இன்று 3 ரன்களில் அவுட்டானார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மைக்கேல் ஹஸ்ஸி 18 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். துவக்கத்திலேயே 2 விக்கெட்களை இழந்து தவித்த அணியின் ஸ்கோரை உயர்த்த சிறப்பாக ஆடி வந்த ரெய்னாவிற்கு, ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பிராவோ 12 ரன்களில் அவுட்டானார்.

சுரேஷ் ரெய்னா 34 ரன்களை எடுத்து ஐபிஎல் தொடர்களில் 2,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால் 44 ரன்களை எடுத்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆட முயன்ற போது, காலிஸ் பந்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த ஜடேஜா, கேப்டன் டோணி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றது. ஆனால் 9 ரன்கள் எடுத்த ஜடேஜா கேட்ச் கொடுத்து வெளியேறினார். விக்கெட்கள் தொடர்ந்து சரிந்த நிலையில் இறுதி வரை களத்தில் இருந்த கேப்டன் டோணி, 34 ரன்களை எடுத்தார். அவருக்கு மார்கல் ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்களை இழந்து 139 ரன்களை எடுத்தது. கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணியின் தரப்பில் காலிஸ் 2 விக்கெட்களை எடுத்தார்.

140 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துவக்கத்திலேயே மெக்கல்லம் 2 ரன்கள் எடுத்த துவக்க வீரர் மெக்கல்லம், அஸ்வின் வீசிய பந்தை அடித்த ஆட முயன்ற போது கேட்சாகி வெளியேறினார்.

அடுத்து வந்த ஜாக் காலிஸ், கேப்டன் கம்பிர் உடன் ஜோடி சேர்ந்து ஆடினார். ஆனால் 26 ரன்கள் எடுத்த காலிஸ் அடித்து ஆட முயன்று, டோணியிடம் கேட்சாகி வெளியேறினார். ஆனால் கேப்டன் கம்பிர் தொடர்ந்து பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்தார். அதன்பிறகு வந்த திவாரி 1 சிக்ஸ் அடித்து 13 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஆனால் வெற்றியை நெருங்கிய நிலையில் கேப்டன் கெளதம் கம்பிர் 63 ரன்களில் எல்.பி.டபில்யூ ஆனார். கடைசி கட்டத்தில் யூசுப் பதான் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்சாகி ஆட்டமிழந்தார். இறுதியில் 19.4 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிய வெற்றிப் பெற்றது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts