காதலித்து திருமணம் செய்திருந்தாலும் சில வருடங்களிலே லைப் போராடிக்க ஆரம்பிக்கிறதா? காதலிக்கும் போது எப்படி உயிரோட்டமுள்ளதாய் வாழ்க்கை இருந்ததோ அதேபோல மாற்றுங்கள். காதலிக்கும் போது உயிரைக் கொடுத்து சொல்லியிருப்போம் ஐ லவ் யூ என்ற வார்த்தையை. அதையே திருமணத்திற்குப் பின்னரும் சொல்லிப்பாருங்களேன். ஐ லவ் யூ என்பது மூன்றெழுத்து வார்த்தைதான், அது நிகழ்த்தும் மாயாஜாலம் அற்புதமானது. இந்த வார்த்தையை சாதாரணமாக சொன்னால் இயந்திரத்தனமாக இருக்கும். எனவே உங்கள் துணையை கவர, உங்களின் நேசத்தை வெளிப்படுத்த ஐ லவ் யூ என்ற வார்த்தையை எங்கு, எப்படிச்சொன்னால் உயிரோட்டமுள்ளதாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? இதோ உங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் நிபுணர்கள்.
காஃபியில் இதயம்
தினசரி காலையில் கண் விழிக்கும் போதே ஐ லவ் யூ என்ற வார்த்தையில்தான் கண்விழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ரொம்ப சிம்பிள் நீங்கள் கொடுக்கும் காஃபியில் சாக்லேட் பவுடரைக் கொண்டு இதயத்தை வரைந்து கொடுங்கள் அந்த இனிப்பான இதயம் உங்களவரின் இதயத்தை நேரடியாக சென்று தொடும். உங்கள் காதலை அவருக்கு உணர்த்தி விடும்.
கடற்கரை மணல் கவிதை
தம்பதி சமேதராக கடற்கரைக்கு போகிறீர்களா? அங்கே அழகாக சொல்லலாம் ஐ லவ் யூ. கடற்கரை மணலின் பின்னணியில் எழுதுங்கள் கடற்காற்றின் ஜில்லிப்பை விட ஐ லவ் யூ என்ற வார்த்தையில் உங்களவர் குளிர்ந்து போவார்.
மெழுகுவர்த்தி வெளிச்சம்
இரவு நேர டின்னரின் போது தனிமைப் பொழுது ரொமான்டிக்காக மெழுகுவர்த்தியை அலங்கரியுங்கள். அந்த விளக்கு வெளிச்சத்தில் மின்னட்டுமே ஐ லவ் யூ. அப்புறம் பாருங்கள் காதல் உணர்வுகள் சிறகடிக்கும்.
கற்பனையாய் கவிதை
உலகத்தில் உள்ள மிகச்சிறந்த வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எழுதுங்கள் ஒரு கவிதையை. உங்களவர் விரும்பி படிக்கும் புத்தகத்தில் இந்த கவிதையை புக் மார்க் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு கவனியுங்கள். அவர் அந்த கவிதையை படித்த பின் பாருங்கள் உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை.
காதலை நினைவூட்டுங்கள்
அழகான நிறத்தில் ஒரு காகிதம் எடுங்கள். உங்கள் எண்ணத்தில் இருப்பதை என்ன தேவை என்பதை எழுதுங்கள். உங்களின் கடந்த காலத்திய ரொமான்ஸ் நினைவுகளை நினைவூட்டுங்கள். சின்ன, சின்னதாய் காதலை உணர்த்தும் படங்களை வரையுங்கள். அப்புறம் இருக்கிறது முத்தாய்ப்பாய் ஐ லவ் யூ என்ற வார்த்தை. இந்த கடிதம் அசத்திவிடும் உங்கள் ஆளை.
ஆசையாய் ஒரு படம்
எழுத வரவில்லையா? படம் வரைவதில் கில்லாடியா நீங்கள்? உங்களுக்கு பிடித்தமான படம் ஒன்றை வரையுங்கள். அதில் சாமர்த்தியமாய் உங்களின் காதலை வெளிப்படுத்துங்களேன். இதுமாதிரியான ரொமான்ஸ் ஐடியாக்களால் உங்கள் காதல்வாழ்க்கை உயிரோட்டம் உள்ளதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். முயற்சி செய்து பாருங்களேன்.
0 comments :
Post a Comment