background img

புதிய வரவு

Showing posts with label 2gscam. Show all posts

மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி)அறிக்கையின் அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 2ஜி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை வரிசையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறி தன்னார்வ அமைப்பு ஒன்றும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிஏஜி-யின் அறிக்கை மற்றும் அதில் உள்ள புகார்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய முடியாது என்று கூறினர்.

மேலும், மத்திய அரசு தாக்கல் செய்யும் அந்த அறிக்கையின் அடிப்படையிலும், விசாரணையின் முடிவில் கிடைக்கப்பெறும் உண்மையின் அடிப்படையிலுமே நீதிமன்றம் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.

'சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் 2ஜி உரிமங்களை ரத்து செய்ய முடியாது

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த இமாலய ஊழலையடுத்து, அதற்கான புதிய கொள்கை வகுக்கப்படும் என்று கூறியுள்ள தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், இதற்கு மேல் தொலைத் தொடர்பு சேவைக்கு அளிக்கப்படும் உரிமத்துடன் அலைக்கற்றை ஒதுக்கீடு சேர்த்தளிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கபில் சிபல், “இதற்குமேல் உரிமத்துடன் அலைக்கற்றை சேர்த்து வழங்கப்பட மாட்டாது. ‘ஒன்றிணைந்த உரிமம’ (Unified Licence) என்று வழங்கப்படும் உரிமத்திற்கு, தொலைத் தொடர்பு சேவை நடத்தும் நிறுவனம், எப்படிப்பட்ட சேவையைத் தர விரும்புகிறதோ அதற்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பம் செய்து பெறவேண்டும். அதற்கு சந்தை விலை அடிப்படையிலான முறை (ஏலம்) கையாளப்படும” என்று கூறியுள்ளார்.

இந்த அடிப்படையில் புதிய தொலைத் தொடர்பு கொள்கை வகுப்படுவதால், செல்பேசி சேவைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கும் நிறுவனத்திற்கு 4.4 மெஹா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படும். அதற்கு மேல் - தற்போது பெரும் நிறுவனங்கள் பயன்படுத்திவரும் - 6.2 மெஹா ஹெர்ட்ஸ் அலைகற்றை பெற விரும்பினால், மீதமுள்ள 1.8 மெஹா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கான சந்தை விலையை அளித்துதான் பெற முடியும்.

இந்த கொள்கை மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்று கபில் சிபல் கூறியுள்ளார்.

“இதற்கு மேல் 6.2 மெ.ஹெ. அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு, சரியான போட்டியை உருவாக்கிடும் ஏல முறையை நடைமுறைக்குக் கொண்டு வருவது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ள கபில் சிபல், நிறுவனங்களுக்கு இடையே சரி சமமான சந்தை வாய்ப்பை பெறும் வகையில் அவைகள் பெற்ற அலைக்கற்றைக்காக அரசுக்கு அளிக்க வேண்டிய வருவாய் பகிர்வை சரி சமமாக அளிக்க வழிகாணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்குமேல் உரிமத்துடன் அலைக்கற்றை ஒதுக்கீடு கிடையாது: கபில் சிபல்

தொலைத்தொடர்பில் மக்களுக்கு சலுகைகளை அளிக்கவே 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

2ஜி அலைக்கற்றை விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. பா.ஜ.க.தலைவர் தலைமையில் உள்ள பொதுக் கணக்குக் குழுவும் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறது.மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

மத்திய அரசின் சிபிஐ பிரிவும், அமலாக்கப் பிரிவும் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தனித்தனியாக இதுபற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றன.அதற்கிடையில் பலரும் அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்கிறார்கள்.எனவே, அவர்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தணிக்கைக் குழு அளித்த அறிக்கையில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று சொல்லும் போதே அது அனுமானத்தின் அடிப்படையில்தான் என்ற வார்த்தையைக் கூறியிருக்கிறது.

ஆனால், உடனே எதிர்க்கட்சியினர் அந்தத் தொகையையே லஞ்சம், ஊழல் என்று பிரசாரம் செய்தார்கள்;செய்கிறார்கள்.இப்படி நடந்து இருந்தால் அரசுக்கு இவ்வளவு வருவாய் வந்திருக்கக் கூடும் என்று சில மேற்கோள்களைக் காட்டி ஊழல் என்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கபில் சிபில்,திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

ஏன் ஏலம் விடப்படவில்லை? ஏலத்தில் விட்டிருந்தால் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் வந்திருக்கும் என்று அனுமானித்து குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. ஏலத்தில் ஏன் விடப்படவில்லை என்பதற்கான விளக்கமும் பலராலும் தரப்பட்டு விட்டது.

தொலைத்தொடர்பு துறையில் மக்களுக்கு சலுகைகளை அளிக்க வேண்டாம் எனக் கருதி இருந்தால், யாராவது ஏலம் எடுத்து மக்களிடம் இருந்து அதிகத் தொகையை வசூலித்துக் கொள்ளட்டும் என நினைத்திருந்தால் லாபம் கூட வந்திருக்கும்.

மக்கள் நல அரசு என்கிற போது அந்த அரசு வணிக நோக்கத்தோடு லாபம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டு நடைபெறாது. சமூக நன்மையைக் கருத்தில் கொண்டு அரசு நடைபெற வேண்டுமே தவிர, நிதி இழப்பு-மிச்சம் என்பதை மட்டும் கவனத்தில் கெண்டு நடைபெறுவது நல்லதல்ல.

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்காக ஓராண்டுக்கு 17 ஆயிரத்து 921 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.இந்தத் திட்டங்களை எல்லாம் அரசு நடைமுறைப்படுத்தாமல்- மக்கள் எப்படி வாழ்ந்தால் என்ன என்று இருந்தால் அரசுக்கு ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவே ஏற்பட்டு இருக்காது. இதை அரசுக்கு இழப்பு என்று யாராவது கூற முடியுமா?

ஒரு காலத்தில் செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டபோது கருவியின் விலை ரூ.30 ஆயிரத்துக்கு மேல் இருந்தது. இப்போது சாதாரண மக்களிடம் கூட செல்போன் உள்ளது.

செல்போன் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் ஒரு நிமிடம் பேச ஒரு அழைப்புக்கு ரூ.16-ம், அழைக்கப்பட்டவர் ரூ.8-ம் செலுத்த வேண்டும்.இப்போது ஒரு நிமிடத்துக்கு 30 பைசா என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. இது மேலும் குறையக் கூடும் என்று சொல்கிறார்கள்.

மாதத்துக்கு இதற்காகும் செலவு ரூ.340 என்பதில் இருந்து ரூ.120 ஆகக் குறைந்துள்ளது. தொலைத்தொடர்பு துறை சார்பாக எடுக்கப்பட்ட முடிவு 2011-க்குள் 600 மில்லியன் மக்களுக்கு தொலைத் தொடர்புத் துறையின் பயன் சென்று அடைய வேண்டும் என்பதாகும்.

ஆனால், இதற்குள் தொலைத் தொடர்பு பயன் கிடைத்து இருக்கும் மக்களின் எண்ணிக்கை 720 மில்லியன் என்பதாகும்.ஏலம் ஏன் விடவில்லை என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.ஏன் ஏலம் விடப்படவில்லை என்றால் ஏலம் விடத் தேவையில்லை என்று தொலைத் தொடர்புத் துறைக்கு ஆலோசனை கூறுகின்ற அதிகாரத்தில் உள்ள டிராய் அமைப்பு கூறியிருக்கிறது.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை பா.ஜனதா ஆட்சியில் வகுக்கப்பட்ட தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதாகும். அவர்கள் எந்த முறையைப் பின்பற்றி இந்த உரிமங்களை வழங்கினார்களோ அதே நடைமுறைதான் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது இவ்வாறு அதில் கருணாநிதி கூறியுள்ளார்.

2ஜி விவகாரம்: கருணாநிதி புதிய விளக்கம்

முக நூல்

Popular Posts