background img

புதிய வரவு

இதற்குமேல் உரிமத்துடன் அலைக்கற்றை ஒதுக்கீடு கிடையாது: கபில் சிபல்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த இமாலய ஊழலையடுத்து, அதற்கான புதிய கொள்கை வகுக்கப்படும் என்று கூறியுள்ள தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், இதற்கு மேல் தொலைத் தொடர்பு சேவைக்கு அளிக்கப்படும் உரிமத்துடன் அலைக்கற்றை ஒதுக்கீடு சேர்த்தளிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கபில் சிபல், “இதற்குமேல் உரிமத்துடன் அலைக்கற்றை சேர்த்து வழங்கப்பட மாட்டாது. ‘ஒன்றிணைந்த உரிமம’ (Unified Licence) என்று வழங்கப்படும் உரிமத்திற்கு, தொலைத் தொடர்பு சேவை நடத்தும் நிறுவனம், எப்படிப்பட்ட சேவையைத் தர விரும்புகிறதோ அதற்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பம் செய்து பெறவேண்டும். அதற்கு சந்தை விலை அடிப்படையிலான முறை (ஏலம்) கையாளப்படும” என்று கூறியுள்ளார்.

இந்த அடிப்படையில் புதிய தொலைத் தொடர்பு கொள்கை வகுப்படுவதால், செல்பேசி சேவைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கும் நிறுவனத்திற்கு 4.4 மெஹா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படும். அதற்கு மேல் - தற்போது பெரும் நிறுவனங்கள் பயன்படுத்திவரும் - 6.2 மெஹா ஹெர்ட்ஸ் அலைகற்றை பெற விரும்பினால், மீதமுள்ள 1.8 மெஹா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கான சந்தை விலையை அளித்துதான் பெற முடியும்.

இந்த கொள்கை மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்று கபில் சிபல் கூறியுள்ளார்.

“இதற்கு மேல் 6.2 மெ.ஹெ. அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு, சரியான போட்டியை உருவாக்கிடும் ஏல முறையை நடைமுறைக்குக் கொண்டு வருவது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ள கபில் சிபல், நிறுவனங்களுக்கு இடையே சரி சமமான சந்தை வாய்ப்பை பெறும் வகையில் அவைகள் பெற்ற அலைக்கற்றைக்காக அரசுக்கு அளிக்க வேண்டிய வருவாய் பகிர்வை சரி சமமாக அளிக்க வழிகாணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts