background img

புதிய வரவு

ஆட்சி கவிழ்ப்பு சதி: 2 அமைச்சர்கள், 1 எம்பியை சஸ்பெண்ட் செய்தார் நவீன்பட்நாயக்

ஒடிசா மாநிலத்தில் ஆளும் பீஜூ ஜனதா கட்சியில் தமக்கு எதிராக செயல்பட்ட எம்.பி. பியாரி மோகன் மொஹபாத்ரா, 2 அமைச்சர்கள், 2 எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்.

நவீன் பட்நாயக் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருந்த போது பியாரி மோகன் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் ரகசிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார். இதில் 33 எம்.எல்.ஏக்களும் 3 அமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர். இது ஒடிசா மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்துவிட்டு ஒடிசா திரும்பிய நவீன்பட்நாயக் கட்சியினருடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் கட்சியில் இருந்து பியாரி மோகன் எம்.பி, பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அஞ்சலி பெஹிரா, போக்குவரத்துத்துறை இணையமைச்சர் சஞ்சீவ் சாகு ஆகியோரையும் எம்.எல்.ஏ.க்கள் பிரதாப் பிஸ்வால், பிகுதி பல்வந்திரி ஆகியோரையும் சஸ்பெண்ட் செய்து நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் நவீன்பட்நாயக்கின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பியாரி மோகன், தாம் கட்சிக்கு எதிராக எதையும் செய்யவில்லை என்றும் இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

நன்றி: OneIndia தமிழ்  

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts