background img

புதிய வரவு

தமிழக மக்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்..மின்வெட்டு நேரம் குறைப்பு

தமிழ்நாட்டில் பொதுமக்களை கடந்த சில மாதங்களாக வாட்டி வதைத்து வரும் மின்வெட்டு தொல்லையில் இருந்து கொஞ்சம் ரிலாஸ்க் கிடைத்திருக்கிறது. மின்வெட்டு "நேரத்தை" குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் நீடிக்கும் மின்வெட்டு நேரத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை நகரில் 2 மணி நேரமாக இருக்கும் மின்வெட்டை 1 மணி நேரமாகவும் பிற மாவட்டங்களில் அமலில் இருக்கும் 4 மணி நேர மின்வெட்டை 3 மணி நேரமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய மின்வெட்டு நேரம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: OneIndia தமிழ்   

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts