நாட்டை காக்கும் ராணுவ சேவை என்பது மகத்தான சேவை. கிரிக்கெட் போட்டிகளில்
இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எதிர்காலத்தில் ராணுவத்தில் சேவை என்று
கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் டோணி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சேவையை பாராட்டி அவருக்கு ராணுவத்தில் கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் சனிக்கிழமையன்று ஜம்மு-காஷ்மிரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு சென்று அங்கு வீரர்களை சந்தித்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டதை டோணி உற்சாகத்துடன் கண்டு ரசித்தார். பின்னர் ராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றியதாவது,
இப்போது உங்கள் முன் நிற்பதற்கு
காரணம் கிரிக்கெட் தான். கிரிக்கெட் போட்டிகளால் தான் நான் இந்தளவுக்கு
பிரபலமாக உள்ளேன்.இதற்கு பாதிப்பு வரும் வகையில் எப்போதும் செயல்பட
மாட்டேன். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பின், ராணுவத்துக்காக நிச்சயம்,
தீவிர சேவை செய்வேன். இதில் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது.
போர்க்களத்தில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. தற்போது தான் இவர்களை மிக அருகில் சந்திக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இதுபோன்று எல்லைப் பகுதிக்கு வருவது இதுதான் முதன் முறை. இங்குள்ள அதிகாரிகளின் குடும்பத்தினர் இங்கு வந்துள்ளனர். இப்போது தான் இவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பொதுவாக விளையாட்டுக்கு எவ்வித தடைகளையும் தகர்க்கும் சக்தி உண்டு. இதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையில் போட்டிகளை மீண்டும் துவங்குவது முக்கியம். இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து, எப்போது விளையாடுவது என்பதை முடிவு செய்ய வேண்டும். இதேபோல நாமும் அங்கு சென்று விளையாட வேண்டும். என்ன நடக்கின்றது என பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.
டோணிக்கு ராணுவ உடை மிடுக்கான தோற்றத்தை அளித்தாலும் அவருடைய நீண்ட தலைமுடி மற்ற ராணுவ வீரர்களிடம் இருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டியது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சேவையை பாராட்டி அவருக்கு ராணுவத்தில் கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் சனிக்கிழமையன்று ஜம்மு-காஷ்மிரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு சென்று அங்கு வீரர்களை சந்தித்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டதை டோணி உற்சாகத்துடன் கண்டு ரசித்தார். பின்னர் ராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றியதாவது,
போர்க்களத்தில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. தற்போது தான் இவர்களை மிக அருகில் சந்திக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இதுபோன்று எல்லைப் பகுதிக்கு வருவது இதுதான் முதன் முறை. இங்குள்ள அதிகாரிகளின் குடும்பத்தினர் இங்கு வந்துள்ளனர். இப்போது தான் இவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பொதுவாக விளையாட்டுக்கு எவ்வித தடைகளையும் தகர்க்கும் சக்தி உண்டு. இதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையில் போட்டிகளை மீண்டும் துவங்குவது முக்கியம். இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து, எப்போது விளையாடுவது என்பதை முடிவு செய்ய வேண்டும். இதேபோல நாமும் அங்கு சென்று விளையாட வேண்டும். என்ன நடக்கின்றது என பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.
டோணிக்கு ராணுவ உடை மிடுக்கான தோற்றத்தை அளித்தாலும் அவருடைய நீண்ட தலைமுடி மற்ற ராணுவ வீரர்களிடம் இருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டியது.
0 comments :
Post a Comment