
இதில் முதல்முறையாக திருநங்கைகள், ஒருபாலுறவு ஆண்கள் மற்றும் பெண்களின் பிரத்யேக பிரச்சினைகளும் உள்ளடக்கப்பட்டு அவற்றை களைவதற்கான வழிமுறைகளும் ஆராயப்படுகின்றன.
இப்படி மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சினைகள் முதல்முறையாக இந்திய அரசின் கொள்கைக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதை வரவேற்கிறார், இவர்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் சென்னையைச் சேர்ந்த இந்திய சமூக சேவை நிறுவனம் என்கிற தொண்டு நிறுவனத்தின் நிறுவன செயலர் ஏ ஜெ ஹரிஹரன்.
இதன்மூலம் முதல்முறையாக இந்திய நடுவணரசு மூன்றாம் பாலினத்தவர்களின் இருத்தலை அங்கீகரித்து கொள்கை வகுத்திருப்பதுடன் அவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கு சமூகத்தின் கருத்துக்களை கேட்டிருப்பது ஆரோக்கியமான அணுகுமுறை என்றும் அவர் பாராட்டினார்.
நன்றி: BBC தமிழ்
0 comments :
Post a Comment