background img

புதிய வரவு

டிரைவர் இல்லாமல் இயங்கும் 'ரயில்'கார்கள்: வால்வோ சோதனை வெற்றி

கூகுளுக்கு அடுத்து டிரைவர் இல்லாமல் இயங்கும் புதிய தானியங்கி கார் தொழில்நுட்பத்தை வால்வோ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஆனால், இது கூகுள் கார் போன்று இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை தயாரிப்பில் ஏராளமான நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இணைய தள உலக ஜாம்பவானான கூகுள் உருவாக்கிய தானியங்கி காருக்கான தொழில்நுட்பம் சோதனைகளில் வெற்றியடைந்துள்ளது.

டொயோட்டோ பிரையஸ் காரில் இந்த புதிய தொழில்நுட்பத்தை வைத்து கூகுள் சோதனை நடத்தி வருகிறது. மேலும், சாலையில் நேரடியாக தனது தானியங்கி காரை இயக்கி சோதனைகள் நடத்த அமெரிக்காவிலுள்ள நெவடா மாகாண போக்குவரத்து துறையிடம் கூகுள் சமீபத்தில் அனுமதியும் பெற்றுவிட்டது.

இந்த நிலையில், வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற சுவீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் தானியங்கி கார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கூகுள் தானியங்கி கார் தொழில்நுட்பமும், வால்வோ தொழில்நுட்பமும் முற்றிலும் வெவ்வேறானது.

சாட்ரி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் ஒரே நேரத்தில் பல கார்களை ரயில் போல இணைத்து சாலையில் செல்ல முடியும். முன்னாள் செல்லும் காரை மட்டும் டிரைவர் ஓட்டினால் போதுமானது.

பின்னால் வரும் கார்களுக்கு டிரைவர் தேவையில்லை. வயர்லெஸ் கட்டுப்பாடு மூலம் வேகம் மற்றும் 16 முதல் 50 மீட்டர் இடைவெளியில் பின்னால் வரும் கார்கள் டிரைவர் இல்லாமல் அழகாக ரயில் பெட்டிகள் போன்று பின்தொடரும்.

பின்னால் வரும் கார்களின் பிரேக், ஆக்சிலேட்டர் என அனைத்தையும் முன்னால் டிரைவர் ஓட்டி செல்லும் காரை அடிப்படையாக வைத்து இந்த புதிய தொழில்நுட்பம் அழகாக கட்டுப்படுத்தும்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 3 கார்களை இணைத்து சமீபத்தில் ஸ்பெயின் நெடுஞ்சாலையில் 200 கிமீ வரை சோதனை நடத்தியுள்ளது வால்வோ. இந்த சோதனை பெரும் வெற்றி பெற்றதாக வால்வோ தெரிவித்துள்ளது.

அருகில் செல்லும் வாகனங்கள் மற்றும் எதிரில் வரும் வாகனங்கள் குறித்து முன்னால் செல்லும் கார் மூலம் குறியீட்டு தகவல்களை பெற்று பின்னால் வரும் கார்களும் லாவகமாக கடந்து சென்றதாக வால்வோ தெரிவித்துள்ளது. இதனால், இந்த சோதனை பெரும் வெற்றியடைந்துள்ளதாக வால்வோ தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts