ஸ்டைல் கட்டிங், பாப் கட்டிங் என்று என்னதால் குழந்தைகளுக்கு முடி வெட்டி விட்டாலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு அப்புறம் பெண் குழந்தைகளுக்கு கூந்தல் வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்து விடுகிறது. ஒரு சில குழந்தைகளுக்கு எளிதாக முடி வளர்ந்து விடும் ஒரு சில குழந்தைகளுக்கு என்ன செய்தாலும் கூந்தல் வளரவே வளராது. அழகான கரு கருவென கார் கூந்தல் வளர செய்ய வேண்டிய கூறுகின்றனர் குழந்தைகள் நல நிபுணர்கள்.
சரியான உணவு
வளரும் குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்கவேண்டும். இது உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது கூந்தல் வளர்ச்சிக்கும் ஏற்றது. ஜங் ஃபுட் சாப்பிடக்கொடுப்பதை தவிர்க்க வேண்டும், அதற்கு பதிலாக தானியங்கள் அடங்கிய ரொட்டிகளை கொடுக்கலாம். அதேபோல் குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நிலையை பாதிக்கும் அதற்கு பதிலாக பழரசங்கள், அதிகம் தண்ணீர் குடிக்க கொடுக்கலாம்.
புரதம் அவசியம்
கூந்தல் வளர்ச்சிக்கு புரதச்சத்து மிகவும் அவசியம். வளரும் பெண் குழந்தைகளுக்கு பால் பொருட்களை அதிகம் உண்ணக்கொடுக்கலாம். அதில் உள்ள உயர்தர அமினோ அமிலங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. மாமிச உணவுகள், பால், முட்டை, பாதாம், முந்திரி கொட்டைகள் போன்றவை குழந்தைகளுக்கு உண்ணக்கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம். அதேபோல் ஒமேகா 3 அடங்கிய உணவுப்பொருட்களான மீன், பாதாம் போன்ற உணவுகளையும் சாப்பிடக் கொடுக்கலாம்.
இரும்பு, துத்தநாகம்
கூந்தல் வளர்ச்சிக்கு இரும்பு, துத்தநாகச் சத்துக்கள் அவசியம். உங்கள் குழந்தைகளின் உணவில் இரும்புச் சத்து நிறைந்த பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் குழந்தைகளுக்கு கூந்தலை வளர்ப்பதோடு பெற்றோர்களின் கடமை முடிந்து போவதில்லை அவற்றை நன்றாக பராமரிப்பதும் பெற்றோர்களின் கடமையாகும். குழந்தைகளுக்கு கூந்தலில் அதிக சிக்கல் ஏற்படும். அவற்றை பத்திரமாக எடுக்க வேண்டும் இல்லையெனில் கூந்தல் அதிக அளவில் உடைந்து உதிர்ந்து விடும்.
குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்
கூந்தலை பத்திரமாக பார்த்துக்கொள்வது எவ்வாறு என்று உங்கள் பெண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். பெரிய பற்கள் கொண்ட சீப்பினை உபயோகித்து தலைசீவி விடுங்கள். சரியான, ரசாயன கலப்பில்லாத ஹேர் ஆயில் பயன்படுத்தி கூந்தலை பராமரியுங்கள். மென்மையான குஞ்சங்கள் கொண்ட சீப்புகள் குழந்தைகளின் தலைக்கும், தலைமுடிக்கும் பாதுகாப்பை தரும், அது கூந்தலின் வேர்களில் மசாஜர் போல செயல்படுவதோடு மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கச் செய்கிறது. இதனால் கூந்தல் வளர்வதோடு மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும்.
0 comments :
Post a Comment