background img

புதிய வரவு

வில்லனாக நடிக்க ஆசைப்படும் உதயநிதி

புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகவும் ஓ.கே ஓ.கே நாயகன் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் உதயநிதி நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட உதயநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சீர்திருந்த படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன்.
புகை பிடிக்கும் காட்சி, புகையிலை பயன்படுத்தும் காட்சியில் நடிக்க மாட்டேன். வித்தியாசமான கதை அம்சம் உள்ள படங்களில் நடிக்க முயற்சி செய்வேன் என்றார்.
மேலும் ஜனரஞ்சகமான நகைச்சுவைப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கவுள்ளதாகவும் வித்தியாசமான ஆக்ஷன் படங்கள், வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.
ராஜேஷ் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுவதாகவும் சந்தானத்துடன் கூட்டணி மீண்டும் தொடரும் எனவும் கூறினார்.
மேலும் நடிகர் வடிவேல் தனக்கு நல்ல நண்பர் என்றும் அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புவதாகவும் பேட்டியில் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts