இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் நிர்வாகத்துக்குள் போராட்டப் பயிற்சிக்காக சென்ற நூற்றுக்கணக்கான காஷ்மீர் செயற்பாட்டாளர்கள் மீண்டும் தாய் மண்ணுக்குத் திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய ஆட்சிக்கு எதிராக போராடுவதற்கான பயிற்சியைப் பெறுவதற்காக பாகிஸ்தான் நிர்வாகத்துக்குள் சென்றிருந்த இவர்கள் இப்போது ஆயுதப் போராட்டத்தை வெறுப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில், ஏற்கனவே சுமார் 500 பேர் வரையான முன்னாள் போராளிகள் தாய் நாட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்.
பாகிஸ்தானிடமிருந்து தமக்கு ஒத்துழைப்புக் குறைந்துள்ளதாகவும் அதனால் இந்தியா அறிவித்திருந்த பொது மன்னிப்பை ஏற்று நாடு திரும்புவதாகவும் முன்னாள் கிளர்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment