background img

புதிய வரவு

தமிழகத்தில் 4,000 கோடியில் புதிய ஆலை: மஹிந்திரா

தமிழகத்தில் புதிய வாகன தயாரிப்பு ஆலை கட்டுவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, மஹிந்திரா குழுமத் துணைத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தலைமையிலான குழு முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா தனது வர்த்தக விரிவாக்கப் பணிகளை முடுக்கி வி்ட்டுள்ளது. இதற்காக, தமிழகத்தில் புதிய வாகன தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

ரூ.4,000 கோடியில் கட்டப்பட உள்ள இந்த புதிய ஆலைக்கான நிலம் மற்றும் சலுகைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் மஹிந்திரா தலைமையில் மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சு நடத்தினர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் மஹிந்திரா கூறுகையில்,"வர்த்தக விரிவாக்கத்தின் ஒருபகுதியாக புதிய வாகன தயாரிப்பு ஆலை கட்ட திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் புதிய ஆலை கட்டுவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினோம். பிற மாநிலங்களிலும் ," என்றார்.

இதற்கு முன்னதாக மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் வர்த்தக பிரிவு தலைவர் பவன் கோயங்கோ முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார். இடம் ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அவர் ஏற்கனவே பேச்சு நடத்திவிட்டார்.

எனவே, இரண்டாம் கட்டமாக தற்போது முதல்வர் ஜெயலலிதாவை மஹிந்திரா அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளதால் தமிழகத்தில் மஹிந்திராவின் புதிய ஆலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. புதிய ஆலைக்காக ரூ.4,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts