
கரூரில், ஈமு கோழிப்பண்ணை ஒன்று திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகை நமீதா நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் இருந்து அவர் கார் மூலம் கரூருக்கு போய்க்கொண்டிருந்தார்.
வழியில், திருச்சி முக்கொம்பு என்ற கிராமம் வழியாக கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் உள்ள கோவிலில், ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொன்ன நமீதா, இறங்கி நேராக திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த கோவிலை நோக்கிச் சென்றார். நமீதாவை பார்த்ததும் திருமண வீட்டாருக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
நமீதா நேராக மணமக்களை நோக்கி நடந்தார். அவர்கள் இருவருடனும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மணமக்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்து, இன்ப அதிர்ச்சி அளித்ததுடன், அவர்களுடன் நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டார்.
இந்தத் திருமணத்தை என்றென்றும் நினைவிலிருக்கும்படி செய்துவிட்ட நமீதாவுக்கு நன்றி தெரிவித்தனர் மணமக்களும் குடும்பத்தினரும்.
0 comments :
Post a Comment