background img

புதிய வரவு

முன்னாள் விடுதலைப் புலிகள் ஒரு தொகுதியினர் விடுதலை

திசாநாயக்க முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 78 பேர் சனிக்கிழமையன்று வவுனியாவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்று பேர் பெண்கள்.

நான்கு வருடங்களின் பின்னர் தற்போதுதான் வெளியுலகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் தனக்குக் கிடைத்தது என விடுதலையான ஓர் இளைஞன் குறிப்பிட்டார்.

தங்களைப் போன்று தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என விடுதலையான மற்றுமோர் இளைஞன் கேட்டுக்கொண்டார்.
இறுதிச் சண்டைகளின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த 12 ஆயிரம் பேரில் 11 ஆயிரம் பேர் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கபட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்னும் 1200 பேரளவில் தமது காவலில் இருப்பதாகவும், இவர்களில் புனர்வாழ்வுப் பயிற்சி பெறுபவர்கள் அல்லது சுமார் 700 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாகவும் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள புனர்வாழ்வு பெறொவோர் அனைவரையும் இந்த வருட இறுதிக்குள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts