background img

புதிய வரவு

பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது

பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஒருவர் இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறும் ''சித்ரவதைகளில் இருந்து விடுதலை'' (Freedom from Torture) என்னும் அமைப்பு, ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது என்று கேட்டுள்ளது.
பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட மற்றுமொரு தொகுதியினர் வியாழனன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையிலேயே இந்த அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட இந்த அமைப்பின் தலைமை நிர்வாக இயக்குனர் கீத் பெஸ்ட் அவர்கள் இது குறித்து பிபிசியிடம் பேசும் போது, பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு, இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளாகி, மீண்டும் பிரிட்டனில் தஞ்சம் கோரியுள்ள ஒருவர் பற்றிய ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இது குறித்த தகவல்களை தாம் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ள போதிலும், பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கைக்கு தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவது துரதிர்ஸ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களை ஒரு வகையில் ரகசியமான முறையில் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் தொடர்பில் இவ்வாறான பல சம்பவங்கள் குறித்த தகவல்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறும் கீத் பெஸ்ட் அவர்கள், இப்படியான சம்பவங்கள் குறித்து இலங்கையில் ஒரு முழுமையான பொறுப்புக் கூறல் நடக்கும் வரை தஞ்சம் கோரியவர்களை அங்கு பிரிட்டிஷ் அரசாங்கம் திரும்ப அனுப்பக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு முழுமையான தெளிவு பெறும் வரை தமது நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts