இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் யூன் 4ம் திகதி மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்க உள்ளார்.
கடந்த ஏப்ரல் 26ல் மத்திய அரசால் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டார்.
ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தால் அவரால் அப்போது பதவியேற்க முடியவில்லை.
இதனையடுத்து, சச்சின் வரும் யூன் 4ம் திகதி பதவியேற்றுக் கொள்வார் என்று மாநிலங்களவை இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சச்சின் டெண்டுல்கருக்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்துவைப்பார் எனவும் கூறப்படுகிறது.
சச்சினுடன் மாநிலங்களவை எம்.பியாக நியமிக்கப்பட்ட நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு ஆகா ஆகியோர் தற்போது முடிவடைந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.
மேலும், மாநிலங்களவை உறுப்பினராகும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment