background img

புதிய வரவு

தமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் – குப்பையில்

தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது .
இங்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலை சுவடிகள், தஞ்சாவூர் ஓவியங்கள், கையெழுத்து படிகள், பழமையான நூல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1627 அச்சிடப்பட்ட பழமையான் அச்சு புத்தகம் இங்கு பாதுகாக்கப் பட்டு வருகிறது .
தமிழர் நாட்டில் உள்ள பண்டைய ஓலை சுவடிகளில் 50 மட்டுமே இது வரை படித்து அறியப்பட்டுள்ளன. அதற்குள் அடங்கியவை தான் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூற, புறநானூறு, பதிற்று பத்து, எட்டு தொகை, நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறு சீவக சிந்தாமணி, பரி பாடல் போன்றவை.
இதில் சில இலக்கியங்களின் செழுமையும் தொன்மையையும் கண்டு உலகமே வியந்து நிற்கிறது.
மூன்று லட்சம் ஓலை சுவடிகளையும் படித்தறிந்தால் தமிழனின் வாழ்க்கை முறையும் தமிழ் மொழியின் செழுமையும் பற்றி நாம் அறிந்து கொள்ள எதுவாக இருக்கும் .
உலகில் தோன்றிய மொழிகளில், மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழினம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்க இந்த ஓலை சுவடிகள் உதவும்.
செம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையான இலக்கியங்களை கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு
இதற்கு வெறும் நூறு கோடி ரூபாய் ஒதுக்கினால் போதுமானது.

”சார் பெட்ரோல் இல்ல, லீவு வேணும்.. வீட்டுல இருந்தே வொர்க் பண்ணுங்க..”- ஐடி நிறுவன ஐடியாக்கள்!

சென்னையில் நிலவும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு சாப்ட்வேர் நிறுவனங்களையும் விடவில்லை.
சென்னையில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஜெனரேட்டர்களை வைத்துத் தான் சாப்ட்வேர் நிறுவனப் பணிகள் சமாளிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏசி, லிப்ட்களின் இயக்கமும் அடக்கம்.
ஆனால், கடந்த சில நாட்களாக டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அட்மின் மேனேஜர்களும், பெசிலிடீஸ் மேனேஜர்களும் அல்லோலப்பட்டு வருகின்றனர். டீசல் வாங்க ஆபிஸ் பாஸ்களுடன் ஒவ்வொரு பெட்ரோல் நிலையமாக ஏறி இறங்கி வருகின்றனர்.
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு டீசல் கிடைக்கவில்லை. இதையடுத்து பல சாப்ட்வேர் நிறுவனங்களில் நேற்றும் இன்றும் லிப்ட்கள் இயங்கவில்லை, ஏசிக்களும் இயங்கவில்லை. மின்சாரம் இருக்கும்போது மட்டுமே அவை இயக்கப்பட்டன. மற்ற நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டன.
தரமணி எஸ்டிபிஐ பார்க்கில் டீசலை முன்பே வாங்கி வைத்ததால் தப்பிவிட்டனர். ஆனால், டைடல் பார்க்கில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் படிக்கட்டுகளில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தனர்.
இந்த மின் தட்டுப்பாடு, பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு காரணாக ஆபிஸ்களுக்கு லீவு போட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதையடுத்து ‘வீட்டிலிருந்தே வொர்க் பண்ணுங்கோ’ ஆயுதத்தை பல நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.
நிலைமை மிக மோசமாகி வருவதால், தமிழக மின்வாரியத்தின் உதவியை நாஸ்காம் மூலம் நாடியுள்ளன சாப்ட்வேர் நிறுவனங்கள். இதையடுத்து ஐடி பார்க்குகளுக்கு மட்டும் முடிந்தவரை கரண்டை கட் பண்ண மாட்டோம் என்று உறுதி தந்திருக்கிறார்களாம் மின்வாரிய அதிகாரிகள்.

விஜய், ஷாருக்கான், பிரபுதேவா பங்கேற்ற ‘ரவுடி’ பார்ட்டி!

ரவுடி ரத்தோர் இந்திப் படத்தை இயக்கியுளள பிரபுதேவா நைட் பார்ட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் நடிகர்கள் விஜய், அக்ஷய்குமார், சஞ்சய் கபூர், காமெடியன் விவேக், நடிகை திரிஷா உள்பட பலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி சாப்பிட்டு கலகலப்பாக்கியுள்ளனர்.
இந்த நள்ளிரவு பார்ட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானும், கொல்கத்தா அணியின் ஆதரவாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டதால் விருந்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ரவுடி ரத்தோர் படக் குழு சார்பில் தமிழ் மற்றும் இந்தி நடிகர், நடிகைகளுக்கு ஒரு பார்ட்டிய ஏற்பாடு செய்திருந்தார் பிரபுதேவா. இதில் அக்ஷய் குமார், சபீனா கான், சோனாக்ஷி சின்ஹா, ஷாருக் கான், அவரது மனைவி கெளரி, ரித்தேஷ், அவருடய மனைவி ஜெனிலியா, சங்கி பாண்டே, கரீம் மொரானி, சஞ்சய் கபூர், சாஜத் கான், நடிகர்கள் விஜய், விவேக், சுதீப், பிரசன்னா, பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி, சுந்தர்.சி, சித்தார், நடிகைகள் திரிஷா, சிம்ரன், சோனியா அகர்வால், சார்மி, சினேகா, குத்து ரம்யா, லட்சுமி மஞ்சு, பிரியா ஆனந்த், பூனம் கெளர், பிரகாஷ் ராஜ் மனைவி போனி வர்மா, இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி, நடிகை சங்கீதா அவருடைய கணவர் கிருஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆடல், பாடல், விருந்து என தடபுடலாக போனதாம் விருந்து. இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோற்ற அன்று இரவு நடந்த இந்த பார்ட்டி சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. போட்டியில் வென்ற கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானையும் கொல்கத்தா ஆதரவாளர்களையும் அழைத்து விருந்து வைத்துள்ளார் பிரபுதேவா என்று சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வடிவேலு இப்போ அடுத்த C.M?

தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை மன்னராக இருந்தார் வடிவேலு. ஆனால் யார் கண் பட்டதோ அரசியலில் குதித்ததன்மூலம் தனது மார்கெட்டை இழந்தார். இன்னோரு பக்கம் சந்தானத்தின் விஸ்வரூப வளர்ச்சி, வடிவேலுவின் இடத்தை நிரப்பியது. இதனால் பிஸியாக இருந்த வடிவேலு கேட்பாரற்று கிடந்தார்.
இதனால் மீண்டும் ஒரு அதிரடியான நுழைவின் மூலம் தனது இடத்தை பிடிக்க முடிவு செய்திருக்கும் வடிவேலு, இதற்காக இயக்குனர் சிம்புதேவனைச் சரணடைந்தார். சிம்புதேவனும் ‘மாரீசன்’ படத்துக்கு உடனடியாக கால்ஷீட் கொடுக்காததால், வெறுத்துப் போய் இருந்த சூழ்நிலையில் வடிவேலு வலிய வந்து நின்றதில் அவரை அப்படியே கப்பென்று பிடித்துக் கொண்டாராம்! மார்கெட் இழந்த நடிகர். மார்கெட் இழந்த இயக்குனர் இரண்டுபேரும் முதல் முறையாக ஒன்றாக சேர்ந்து இருக்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திரையுலகில் இருந்து வடிவேலு மறைந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து , “நான் ஓடி ஒளியவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பேன், அதுவும் ஹீரோவாகத்தான் வருவேன்” என்று கூறிவருகிறார் வைப்புயல். இந்நிலையில்தான் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை மிகபிரமாண்டமாக உருவாக்குவதை விட குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கலாம் என்று ஒருமனதாக முடிவு இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் வடிவேலுவை திடீர் முதலமைச்சராக காட்டுவதென்று முடிவு செய்து கதை விவாதம் நடத்தி முடித்திருகிறாராம் சிம்புதேவன். இதனடிப்படையில் வடிவேலு தமிழக முதல்வரானால் என்ன நடக்கும் என்பதை இரண்டரை மணிநேர திரைக்கதையாக்கி, முதல் பாகத்தை தயாரித்த ஷங்கரிடமே சொல்லியிருகிறார் சிம்பு!
கதைக்கேட்டு மூக்கில் விரல்வைத்த ஷங்கர் “ இதுதாங்க ரியல் ஸ்ஃபூப்” என்றாராம். அத்துடன் புலிகேசியின் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க ஷங்கரே ஒப்புகொண்டிருகிறார் என்கிறார்கள். ஜூன் முதல்வாரம் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் சிம்புதேன், தேன்நிலவு முடிந்ததும், புலிக்கேசி இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்க இருக்கிறராம் எது எப்படியோ! இந்த இரண்டாவது பாகத்தில் கேப்டன் நடிகரை கைது செய்து, தனது ஆட்சியில் படாத பாடு படுத்துவதுபோல வடிவேலு காட்சி அமைக்கச் சொல்லுவர் என்பது மட்டும் உறுதி!

மனக் கசப்புடன் காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்போம்: கருணாநிதி

 Karunanidhi Rolls Back Pull Out Threat பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டாலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக் கூட்டணியில் கசப்புடன் நீடிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அண்ணா அறிவாலயத்தில் நிருபகளுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: மத்திய அரசை விட்டு வெளியேற தயங்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே..

பதில்: நான் எங்கே அப்படிச் சொன்னேன். மத்திய அரசை விட்டு வெளியேறுவோம் என்று என்னுடைய பேச்சில் எங்கேயாவது இருக்கிறதா? என்னிடம் பேச்சு `ஆடியோ' செய்யப்பட்டதே இருக்கிறது. 

கடந்த காலத்தில் பாஜகவோடு கூட்டணியிலே இருந்து கொண்டு, வி.பி. சிங் பிரதமராக இருந்த போதும் அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டு, எந்த இடத்தில் இருந்தாலும் என்று சொல்லி எங்களுடைய கொள்கைகளில் ஒத்துவராத சூழ்நிலையில் நாங்கள் வெளியேற நேர்ந்தது என்று கடந்த காலத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். இப்போது வெளியேறுவோம் என்று சொல்லவில்லை. நீங்கள் நல்ல எதிர் காலத்தை உருவாக்க வேண்டிய பத்திரிகையாளர்கள். நீங்களாவது இவ்வாறு யூகம் செய்து கொண்டு கேட்பது விஷமத்தனமான காரியமாகும்.

கேள்வி: பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்காவிட்டால் நீங்கள் கூட்டணியிலிருந்து வெளியே வந்து விடுவீர்களா?

பதில்: நீங்கள் எல்லாம் விரும்புவதைப் போல அப்படி ஒரு நிபந்தனையை நாங்கள் வைக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறி விடுவோம் என்று கூற முடியாது.

ஏனென்றால், திடீரென்று கூட்டணியை விட்டு வெளியே வந்தால், மத்தியில் வரவிருக்கின்ற ஆட்சி பிற்போக்கான ஆட்சியாக மாறி விடலாம். மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம். அதையும் நாங்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதை மாத்திரம் காட்டி மக்களுக்குத் தேவையான காரியங்களில் மத்திய அரசும் இடையூறு செய்யக் கூடாது.

எனக்கு இப்போது வந்துள்ள தகவல்களின்படி, பிரதமர் இதைப் பற்றி யோசிப்பதாக நான் கேள்விப்படுகிறேன். மக்களுடைய கிளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பிரதமர் யோசிப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த யோசனை நல்ல முறையிலே விளைவுகளைத் தருமேயானால் மகிழ்ச்சி அடைவேன்.

கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைக்கப் போவதாக மத்திய அரசிடமிருந்து உங்களுக்கு கூட்டணி என்ற முறையில் தகவல் வந்திருக்கிறதா?

பதில்: யூகமான தகவல் தான். வரும் என்று எதிர்பார்க்கிறேன். பெட்ரோலைப் பொறுத்தவரையில் மத்திய அரசிடமிருந்து நல்ல செய்தி வரக் கூடும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் மத்திய அரசை விட்டு வெளியேறிவிடுவோம் என்று நீங்கள் பேசியதைப் பற்றி?

பதில்: மறுபடியும் அதையே கேட்கிறீர்கள். இப்போது இருக்கிற மத்திய அரசு இதற்கு முன்பு நான் சொன்ன அரசுகளைப் போல அல்ல. நாங்கள் இப்போது சொல்வதையெல்லாம் எண்ணிப் பார்க்கும். இந்தக் கிளர்ச்சிகளையெல்லாம் மதிக்கக் கூடிய அரசு தான் இப்போதுள்ள மத்திய அரசு. மாநில அரசு தான் மதிக்காத அரசு. அது மாத்திரமல்ல. விரைவிலே குடியரசு தலைவர் தேர்தல் வரவுள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கக்கூடிய காரியங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம். தி.மு.கழகம் கசப்போடு, இந்தக் கூட்டணியிலே நீடிக்கும். அவ்வளவு தான்.

கேள்வி:
 இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தானே?

பதில்: மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்றார் கருணாநிதி.

லக்ஷ்மி ராயின் ஆசையை நிறைவேற்றிய விஜய்

Vijay Fulfills Lakshmi Rai S Desire இளைய தளபதியுடன் நடிக்க வேண்டும் என்ற லக்ஷ்மி ராயின் ஆசையை இயக்குனர் விஜய் நிறைவேற்றியுள்ளார்.

சீயான் விக்ரமை வைத்து தாண்டவம் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் விஜய் அடுத்ததாக இளைய தளபதி விஜயை வைத்து தலைவன் படத்தை இயக்குகிறார். தாண்டவம் படத்தில் நடித்து வரும் லக்ஷ்மி ராய் தனது நீண்ட நாள் ஆசை ஒன்றை இயக்குனர் விஜயிடம் தெரிவித்துள்ளார். அதை கேட்ட விஜய் உடனே அவரது ஆசையை நிறைவேற்றிவிட்டாராம்.

இளைய தளபதியுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையைத் தான் லக்ஷ்மி ராய் தெரிவித்துள்ளார். அதற்கு விஜய் தான் எடுக்கும் தலைவன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் தருவதாக வாக்களித்துள்ளார்.

தாண்டவம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஏமி ஜாக்சன் இருக்கையில் லக்ஷ்மிராய் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தில் தான் விக்ரமை காதலிக்காவிட்டாலும் தன்னுடைய கதாபாத்திரம் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் பணியாற்றுகிறார்.

கருணாநிதி பிறந்தநாளில் கே.டிவிக்கு போட்டியாக வரும் முரசு டிவி

Murasu Tv Go Official On Karunanidhi B Day திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த சேனலாக முரசு டிவி சேனல் வரவிருக்கிறது.

தமிழ் மக்களுக்கு அரசியல், சினிமா, விளையாட்டு, சமையல், நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகளை சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, பாலிமர் டிவி, மக்கள் டிவி, கேப்டன் டிவி என பல தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றன. இந்த நிலையில் சன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நாள் முழுக்க திரைப்படம் மட்டுமே ஒளிபரப்ப கே டிவியும், செய்திக்காக சன் நியூஸும், பாடல்களுக்காக சன் மியூசிக் சேனலும், நகைச்சுவைக்காக ஆதித்யா சேனலும், குழந்தைகளுக்காக சுட்டி டிவியும் துவங்கப்பட்டது.

அதே வழியில் கலைஞர் தொலைக்காட்சியும், இசையருவி, சிரிப்பொலி, கலைஞர் செய்திகள் போன்ற சேனல்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. இந்த வரிசையில் கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த சாதனையாக முரசு டிவி என்ற சேனலை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்த சேனல் சோதனை அடிப்படையில் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், அதன் பிரத்யேக ஒளிபரப்பு திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி துவங்க உள்ளதாம். 

முரசு டிவியில் கே.டிவியைப் போன்று முழுக்க முழுக்க திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர். குறிப்பாக அந்த கால கருப்பு- வெள்ளை படங்களை அதிக அளவில் ஒளிப்பரப்ப உள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் முரசு என்ற பெயர் தேமுதிக கட்சியின் சின்னத்தின் பெயராக உள்ளதால் ஒரு வேளை இந்த டிவி தேமுதிக டிவியோ என சிலர் ஐய்யபாடு தெரிவிக்கக் கூடாது என்பதற்காக முரசு பின்னணியில் உதய சூரியன் உதிப்பது போல லோகோ அமைத்துள்னர்.

விவேக்கின் பசுமை கலாம் திட்டத்தில் 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை

நடிகர் விவேக் தொடங்கி வைத்த பசுமை கலாம் திட்டத்தை வரும் ஜூன் மாதம் 13ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நிறைவு செய்கிறார். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 13 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஓராண்டுக்கு முன்பு நடிகர் விவேக் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்தார். அப்போது கலாம், நீங்கள் ஏன் உங்கள் படத்தில் மரக்கன்றுகள் நடுவதின் அவசியம் பற்றி கூறக்கூடாது என்று கேட்க அதற்கு விவேக் நான் படத்தில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன், நீங்கள் கூறினால் ஒரு இயக்கம் அமைத்து மரக்கன்றுகள் நடுவேன் என்றார்.

அதற்கு கலாம் ஓ.கே. சொல்லி எத்தனை கன்றுகள் நடுவீர்கள் என்று கேட்டதற்கு 10 லட்சம் என்று பதில் அளித்தார் விவேக். இதையடுத்து விவேக் பசுமை கலாம் என்ற திட்டத்தை துவங்கினார். இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் இதுவரை 13 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை படைத்துள்ளனர். 

இந்த திட்டத்தின் நிறைவு விழா வரும் ஜூன் மாதம் 13ம் தேதி கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. 

இது குறித்து விவேக் கூறுகையில்,

பசுமை கலாம் திட்டத்தை அப்துல் கலாம் துவங்கி வைத்தார். என்னையும் அறியாமல் இத்திட்டத்தில் அதிகம் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளது எனது முயற்சியின் முதல் கட்டம் மட்டுமே. மேலும் பல லட்சம் கன்றுகளை நட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். மரவளத்தை பெருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 

ராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியதாக இதிகாசங்களில் உள்ளது. அதே போன்று அரசின் மரவளம் பெருக்கும் பணிக்கு நான் அணில் போல் பணியாற்றுவேன் என்றார்.

ஆனந்த் மீண்டும் உலக சதுரங்க சாம்பியன்

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
மாஸ்கோவில் புதனன்று(30.5.12) முடிவடைந்த இந்தப் போட்டியில் டை பிரேக்கர் முறையில் இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்டை 2.5-1.5 என்கிற கணக்கில் வென்றார்
உலகப் பட்டத்தை நிர்ணயிக்க நடைபெற்ற 12 போட்டிகள் மாஸ்கோவின் ட்ரெட்யகோவ் அரங்கில் இருவருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், யார் உலகப் பட்டத்தை வெல்வார்கள் என்பது டை பிரேக்கர் முறையில் தீர்மானிக்கப்பட்டது.
மிக விரைவாக குறிப்பிட்ட நேரத்துக்குள் காய்களை நகர்த்தும் நான்கு டை-பிரேக்கர் போட்டிகளின் இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த் வெற்றி பெற்றதன் மூலம் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இதர மூன்று போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன.

விஸ்வநாதன் ஆனந்த் ஐந்தாவது முறையாக உலக சதுரங்கப் பட்டத்தை வென்றுள்ளார்.
அதிலும் குறிப்பாக நான்கு முறை தொடர்ச்சியாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நான்கு ஆட்டங்களை கொண்ட டை பிரேக்கரின் முதல் ஆட்டத்தில் 33 நகர்வுகள் இடம்பெற்ற பிறகு இருவரும் அந்த ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர்.
அடுத்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மொத்தமாக 77 நகர்வுகள் இடம்பெற்றன. இதில் ஆனந்த் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார். அதன் பிறகு இடம்பெற்ற மற்ற இரண்டு ஆட்டங்களும் சமநிலையில் முடிவடைந்த காரணத்தால் ஆனந்த் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.
விஸ்வநாதன் முதல் முறையாக 2000 ஆம் ஆண்டு உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக 2007, 2008 மற்றும் 2010 ஆண்டுகளிலும் இந்தப் பட்டத்தை வென்றிருந்தார்.
அடுத்த உலக சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டி 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

திருப்பூரில் பந்த்துக்கு முழு ஆதரவு: ஜவுளி ஆலைகள் மூடல், நகரமே ஸ்தம்பித்தது!

தமிழகத்தில் பாரத் பந்துக்கு திருப்பூர் பகுதிகளில் மட்டும் கொஞ்சம் ஆதரவு கிடைத்துள்ளது.

பாஜக அழைப்பு விடுத்த இந்த பந்துக்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்ததால் திருப்பூரில் ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் சுமார் 6,500 ஜவுளி ஆலைகளும் மூடப்பட்டுள்ளன.

அதே போல பிரிண்டிங் நிறுவனங்கள், எம்பிராய்டரி நிறுவனங்கள், நிட்டிங் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. 

தொழிலாளர்கள் பணிக்கு வராததால் ஹோட்டல்கள், பேக்கரிகள், கடைகளும் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்களில் பகல் காட்சி சினிமா ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. பஸ், லாரி, ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன.

அதே போல கோவை மாவட்டத்தில் அந்த பந்த்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. கேரளத்தில் பந்த் நடந்தாலும் கோவையில் இருந்து இன்று காலை வழக்கம் போல் பஸ்கள் கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றன.

ராணுவத் தளபதி வி.கே. சிங் இன்று ஓய்வு: ஆனால்.. விசாரணை ஆரம்பம்!

 Probe Ordered On Defamation Plea Against Army Chief  தனது பதவிக் காலத்தின் கடைசி சில மாதங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் இன்று (மே 31) ஓய்வு பெறுகிறார்.

62 வயதாகும் சிங், ராணுவத்தில் 42 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதையடுத்து கிழக்கு பிராந்திய கமாண்டராக உள்ள ஜெனரல் விக்ரம் சிங், புதிய ராணுவத் தளபதியாக இன்று பொறுப்பேற்கிறார். அவர் இந்தப் பதவியில் 2 ஆண்டுகள் 3 மாதங்கள் இருப்பார்.

2010ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ராணுவத் தலைமைத் தளபதியாக வி.கே. சிங் பொறுப்பேற்றார். நேர்மையான அதிகாரியான அவர், முதலில் வயது தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். ராணுவ செயலகத்தில் அவரது பிறந்த தேதி மே 10, 1950 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஜெனரல் அலுவலகத்தில் அவரது பிறந்த தேதி மே 10, 1951 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர் ஓய்வு பெறும் வயது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே அவர் ஓய்வு பெற வேண்டும் என மத்திய அரசு சொல்ல, அடுத்த ஆண்டு தான் எனக்கு உண்மையான ரிடையர்மென்ட் ஏஜ் என்று பிடிவாதம் பிடித்தார் சிங். ஆனாலும் கடைசியில் அரசு சொன்னது போல இன்று ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து ராணுவத்தின் வலிமை குறித்து பிரதமருக்கு இவர் எழுதிய ரகசிய கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அடுத்ததாக தரக்குறைவான டாட்ரா கவச வாகனங்களை ராணுவத்துக்கு வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தனக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர் சிங் ரூ. 14 கோடி லஞ்சம் அளிக்க முன்வந்தார் என்று கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தினார் சிங்.

இவ்வாறு பல சர்ச்சைகளுக்கு இடையே தனது பதவிக் காலத்தின் கடைசி நாட்களைக் கடந்த சிங் இன்று ஓய்வு பெறுகிறார்.

இந் நிலையில் தேஜிந்தர் சிங் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய வி.கே. சிங் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசிகாந்த் சர்மாவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் தங்களுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய வி.கே.சிங்கை ஓய்வு காலத்தில் நிம்மதியாக இருக்க விடாமல் சட்டச் சிக்கல்களில் இழுத்துவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

என் ஸ்டைல் தனி ஸ்டைல்: அமலா பால்

I Have My Own Style Amala Paul தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்திருப்பதாக மைனா புகழ் அமலா பால் தெரிவித்துள்ளார்.

சிந்து சமவெளி மூலம் கோலிவுட்டுக்கு வந்த அமலா பால் மைனா படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இதையடுத்து விகடகவி, தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் வாய்ப்புகள் வராததால் தெலுங்கு, மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் தனது நடிப்பு பற்றி அமலா பால் கூறுகையில்,

எனக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கு. நான் யாரையும் காப்பியடித்து நடிப்பதில்லை. என் ஸ்டைலில் நடிப்பதால் தான் எனக்கென்று ஒரு பெயர் கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல நடிகைகள் வருகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே நினைவில் நிற்கிறார்கள். அவ்வாறு நினைவில் நிற்க தனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்றார்.

அமலா பால் என்றால் நம் நினைவுக்கு வருவதென்னவோ அவர் கண்கள் தான். சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

மயங்கினேன் தயங்கினேனில் 100 இடங்களில் கை வைத்த சென்சார்

மயங்கினேன் தயங்கினேன் படத்தை பார்த்த சென்சார் போர்டு வெறும் 100 இடங்களில் மட்டுமே காட்சிகளை நீக்கச் சொல்லியுள்ளனர்.
Mayanginen Thayanginen Faces 100 Cuts In Censor
நிதின் சத்யா, திஷா பாண்டே நடித்துள்ள படம் மயங்கினேன் தயங்கினேன். திஷா பாண்டே தமிழ்ப் படம் மூலம் பிரபலமானவர். இன்னொரு நாயகனாக தருண் சத்ரியா நடித்துள்ளார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, புதுமுகம் பாலா, தேஜாஸ்ரீ, அஜய் ரத்னம், டிபி கஜேந்திரன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

பெண்கள் மனநல விடுதிகளில் நடக்கும் பாலியல் அக்கிரமங்களை சொல்லும் இந்த படத்தில் சஞ்சனா சிங் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். படத்தை முடித்து சென்சாருக்கு அனுப்பினர். அவர்களோ வெறும் 100 இடங்களில் மட்டுமே காட்சிகளை கட் செய்தால் போதும் என்றும், 10 இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகளை மியூட் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.

'யு' சான்றிதழ் வேண்டும் என்றால் சென்சார் போர்டு சொல்வதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் சொன்ன மாற்றங்களை செய்ய படத்தின் இயக்குனர் எஸ்டி வேந்தன் ஒப்புக் கொண்டுள்ளாராம். ஆனாலும் சென்சார் போர்டின் இந்த பரிந்துரையால் மனிதர் அதிருப்தி அடைந்துள்ளார். ஒன்னா, இரண்டா 100 இடங்களில் அல்லவா காட்சிகளை கட் பண்ண சொல்லியிருக்கிறார்கள்.

கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி - பெட்ரோல் விலை ரூ 2 குறைய வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால், வேறு வழியின்றி பெட்ரோல் விலையில் ரூ 2 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும், 1-ந்தேதி மற்றும் 16-ந்தேதி பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.

பொதுவாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1 டாலர் உயர்ந்தாலும், உடனே விலையை ஏற்றிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.

ஆனால் இந்த முறை கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தும்கூட, நஷ்டம் என்று கூறி லிட்டருக்கு ரூ 7.50 உயர்த்தி பொதுமக்களை அலற வைத்தன.

இதற்கு எதிர்ப்பும் நாடெங்கும் கண்டனப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணை நேற்று 111 டாலரில் இருந்து 106 டாலராக குறைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் கூட குறைய வாய்ப்புள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ரூபாய் மதிப்பில் எந்த வீழ்ச்சியும் ஏற்படவில்லை. இதன் காரணமாக கடந்த வாரம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை சற்று குறைக்க இந்திய எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50 முதல் ரூ.2 வரை குறைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று அல்லது நாளை இதுபற்றி ஆலோசித்து விலை குறைப்பு முடிவை அறிவிப்பார்கள்.

எண்ணை நிறுவனங்களின் அறிவிப்பு இன்றிரவு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் பெட்ரோல் விலை குறைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வரலாம்.

இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவன தலைவர் ஆர்கே சிங் கூறுகையில், 'பெட்ரோல் விலை ரூ 1.50 வரை குறைக்கப்படலாம். அதற்கான சாத்தியம் உள்ளது,' என்றார்.

இதற்கான நடவடிக்கைகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வேகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களை சற்று தணிக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது!

நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு சாதனை படைத்த இந்திய மாணவன்



 Indian Boy Solves 350 Year Old Math Problem By Newton
லண்டன்: கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய மாணவன். இந்தக் கணிதப் புதிரைப் போடட்வர் மறைந்த சர் ஐசக் நியூட்டன் ஆவர்.

கடந்த 350 ஆண்டுகளாக உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் 'ஜஸ்ட் லைக் தட்' இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன்.

ஜெர்மனியின் டிரட்சென் பகுதியில் வசித்து வருகிறார் ராய். இவர் விடை கண்டுள்ள கணிதப் புதிர், டைனமிக்ஸ் தியரியில் வருகிறது. டிரட்சென் பல்கலைக்கழகத்திற்கு ராய் பள்ளிச் சுற்றுலாவாக சென்றபோதுதான் இந்தக் கணிதப் புதிர் குறித்து ராய்க்குத் தெரிய வந்தது. அப்போது அங்குள்ள பேராசிரியர்கள் இதுகுறித்து கூறியபோது, இதற்கு விடை காணவே முடியாது என்று கூறினர்.

ஆனால் அதை சவாலாக எடுத்துக் கொண்டார் ராய். பின்னர் அதற்கு விடை காணும் முயற்சியில்இறங்கினார், வெற்றியும் பெற்றார்.

இது மட்டுமல்லாமல் மிகக் கடினமான கணிதப் புதிர்களைக் கூட எளிதாக அவிழ்க்கும் வித்தை இவரிடம் உள்ளது. 6ம் வயதிலிருந்தே இதே வேலையாகத்தான் திரிகிறாராம் இவர்.

அதேசமயம், தன்னை மேதை என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும், அந்த அளவுக்கு தான் இன்னும் வளரவில்லை என்றும் அடக்கத்துடன் கூறுகிறார்.

4வயதாகஇருந்தபோது கொல்கத்தாவிலிருந்து ஜெர்மனிக்கு வந்து செட்டிலானவர் ராய். தற்போது தனது தாய் மொழியான பெங்காலியை விட ஜெர்மனியை மிக லாவகமாக பேசுகிறார் ராய்.

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு படையை அனுப்புங்கள்: மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை அடைக்க அண்மையில் தமிழக அதிகாரிகள் சென்றிருந்தனர். ஆனால் அவர்களை கேரள அதிகாரிகள் தடுத்து தாக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கேரளத்தின் அடாவடியை சுட்டிக்காட்டியுள்ளதுடன் அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகள் நிறுத்தப்படவில்லை எனில், தமிழக போலீசாரையே அங்கு நிறுத்த நேரிடும் என்றும் பிரதமருக்கு ஜெயலலிதா தமது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தி பாஷா பாட்டு ரிலீஸ்... ரஜினி வாழ்த்து!

பாட்ஷா படத்தின் இந்திப் பதிப்பான பாஷாவின் ஆடியோ ரிலீஸ் ஸ்டார் கூட்டத்திற்கு மத்தியில் கோலாகலமாக நடந்தேறியது. இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. இருப்பினும் விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தமிழில் வெளியான பாட்ஷா சூப்பர் ஹிட் திரைப்படம் தற்போது பாஷா என்ற பெயரில் இந்தியில் ரிலீஸாகிறது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முன்பு அஜய் தேவ்கன் விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும் இது தற்போது நேரடியாக இந்தியில் டப் ஆகியுள்ளது. இப்படத்தை டிஜிட்டல் முறையில் சீர்திருத்தி பத்ரகாளி ரமேஷ், நரேந்திர சிங் ஆகியோர் இந்தியில் வெளியிடுகின்றனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில்நடந்தது. இசைத் தட்டுக்களை இசையமைப்பாளர் மான்டி சர்மா வெளியிட அதை நடிகர் பாயல் ரோஹத்தி பெற்றுக் கொண்டார். இதில் ஏராளமான இந்தி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தை டிஜிட்டல் முறையில் சீரமைத்து வெளியிடுகின்றனர். டைட்டில் கார்டு முதல் அனைத்தையும் சரி செய்து நவீன முறையில் மாற்றியுள்ளனர். 5.1 டிஜிட்டல் ஆடியோ முறையில் ஒலி, ஒளியமைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. தமிழில் இசையமைத்த தேவாவே இந்திப் படத்தின் இசையையும் கவனித்துள்ளார்.

விழாவில் ரஜினி வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் ரஜினி வரவில்லை. மாறாக அவரது வாழ்த்துச் செய்தி வந்திருந்தது. மே மாத இறுதியில் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

சிரிய ராணுவத்தின் அட்டூழியம்: கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 92 பேர் பலி

பெய்ரூட்: சிரிய அதிபருக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை ஒடுக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 32 குழந்தைகள் உட்பட 92 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலக வேண்டும் என்பதற்காக கடந்த 14 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹெளலாவில் நேற்று ராணுவம் நடத்திய தாக்குதலில் இளம் பிஞ்சுகள் அகோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். சிலரது மண்டை ஓடுகள் பிளந்து ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கிற காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சிரிய ராணுவத்தின் கோரத் தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், பொதுமக்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை சிரியா ராணுவம் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை 'டீச்சராக்கிய' அமைச்சர் செந்தில்பாலாஜி!

முதல்வர் ஜெயலலிதாவிடம் எப்படியெல்லாம் காக்கா பிடிக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் ரூம் போட்டுத்தான் யோசிப்பார்கள் என்பதை அமைச்சர் செந்தில்பாலாஜி நிரூபித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவினர் அம்மா, தாயே ஆதிபராசக்தி என போஸ்டர் அடித்தும், நாளிதழ்களில் விளம்பரம் செய்வதும் தமிழக மக்கள் அறிந்ததே.

தற்போது அதையெல்லாம் தாண்டி ஆர்வக்கோளாறு காரணமாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 12 பக்க வண்ண புத்தகம் ஒன்றை தமது சொந்த செலவில் பல லட்சம் பிரதிகள் அச்சிட்டு அதில் தொலைநோக்கு திட்டம் 2023 குறித்த தகவல்கள், போக்குவரத்து துறையின் சாதனைகளை விளக்கும் வண்ணமும், தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் பங்கு, வளர்ச்சி உளளிட்டவைகள் அடங்கிய விரிவான தகவல்கள் இடம்பெறச் செய்துள்ளார்.

அதில், "வாட்டம் கொண்டிருந்த போக்குவரத்து துறைக்கு ஏற்றம் தரும் மாபெரும் சாதனை திட்டங்கள் தந்து ஒரே ஆண்டில் நூற்றாண்டு சாதனைகளை வழங்கி போக்குவரத்து துறையை தலைநிமிர செய்திட்ட சரித்திரம் போற்றும் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மலர் பாதங்களில் கோடான கோடி நன்றி மலர்களை சமர்பித்து பணிந்து வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ள செந்தில்பாலாஜி அதிரடியாக "மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் விசுவாசமிக்க மாணவன்" வி செந்தில்பாலாஜி, போக்குவரத்துறை அமைச்சர் என அச்சடித்துள்ளார்.

ஆக ஜெயலலிதாவுக்கு இப்பொழுது டீச்சர் போஸ்டையும் கொடுத்துவிட்டார் செந்தில்பாலாஜி..

3 நாள் பயணமாக மியான்மர் சென்றார் மன்மோகன்சிங்

பிரதமர் மன்மோகன்சிங் 3 நால் சுற்றுப் பயணமாக மியான்மருக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். கடந்த 25 ஆண்டுகளில் மியான்மருக்கு பயணம் மேற்கொண்ட முதலாவது இந்திய பிரதமர் மன்மோகன்சிங்தான்.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் ஜனநாயகத்துக்காக ஆங்சாங்சூயி தலைமையில் போராட்டமும் நடைபெற்று வந்தது. மேற்குலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் ஜனநாயகப் பாதைக்கு மியான்மர் திரும்பியது. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ஆங்சாங்சூயி-யின் ஜனநாயகக் கட்சிக்கு கணிசமான இடங்களும் கிடைத்தது. ஆங்சாங்சூயியும் நாட்டின் எம்.பியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதைத் தொடந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கிமூன் மியான்மர் சென்றிருந்தார். இங்கிலாந்து பிரதமரும் அண்மையில் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மெதுமெதுவாக விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று மியான்மர் பயணம் மேற்கொள்கிறார். மியான்மர் செல்லும் முன்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும் உறவு நாடாகவும் மியான்மர் திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.மேலும் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங்சாங்சூயியையும் மன்மோகன்சிங் சந்தித்துப் பேச உள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமாக மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக நூல்

Popular Posts