பெய்ரூட்: சிரிய அதிபருக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை
ஒடுக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 32 குழந்தைகள் உட்பட 92 பேர்
கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலக வேண்டும் என்பதற்காக கடந்த 14 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹெளலாவில் நேற்று ராணுவம் நடத்திய தாக்குதலில் இளம் பிஞ்சுகள் அகோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். சிலரது மண்டை ஓடுகள் பிளந்து ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கிற காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சிரிய ராணுவத்தின் கோரத் தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், பொதுமக்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை சிரியா ராணுவம் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

0 comments :
Post a Comment