கலகலப்பு படத்துக்காக லைட்டாக குண்டடித்த அஞ்சலி தற்போது அதைக் கஷ்டப்பட்டு இறக்கி வருகிறாராம். இதற்காக ஜிம்முக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறார். சீக்கிரம் பழையபடி ஸ்லிம்மாகி விடுவாராம்.கலகலப்பு படத்தில் ஓவியாவுக்கு ஈக்வலாக கவர்ச்சியில் புகுந்து விளையாடி ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறார் அஞ்சலி. அவரும், ஓவியாவும் ஒரு பாட்டில் போட்டுள்ள கிளாமர் ஆட்டம்தான் இந்த நிமிடம் வரை அத்தனை பேரின் பேச்சாகவும் இருக்கிறது.
இப்படத்துக்காக கொஞ்சம் போல குண்டடித்திருந்தார் அஞ்சலி. காட்சியில் கிளாமர் வருவதால் அதற்கேற்ற உடல் வாகுக்காக இந்த குண்டடிப்பாம். இப்போது அதைக் குறைக்க கடுமையாக உடற்பயிற்சியில் குதித்துள்ளார் அஞ்சலி.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார் அஞ்சலி. இதற்காகத்தான் இந்த உடல் குறைப்பு முயற்சியாம். இந்தப் புதிய படத்தில் காலேஜ் கேர்ள் வேடத்தில் வருகிறாராம் அஞ்சலி. எனவேதான் உடலைக் குறைத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளாராம்.
ஜிம்முக்குப் போய் கடுமையாக உடற் பயிற்சி செய்து வரும் அஞ்சலிக்கு எடையில் நல்ல குறைவு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹேப்பியாகியிருக்கிறார்.
இந்தப் படம் தவிர டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக்கான வருத்தப்படாத வாலிபர் சங்கத்திலும் நடிக்கப் போகிறார் அஞ்சலி.
தொடர்ந்து படங்கள் கை வசம் குவிந்து வருவதால் அஞ்சலிக்கு செம டைட்டாகியிருக்கிறதாம் கால்ஷீட் புக். இதனால் பார்த்துப் பார்த்துத்தான் வாய்ப்ப்புகளை ஏற்கிறாராம்.
0 comments :
Post a Comment