இளைய தளபதி விஜய் நடித்து வெளிவரவுள்ள ”துப்பாக்கி” திரைப்படத்தின் First Look போஸ்டர் கடந்த மே மாதம் முதலாம் திகதி, அப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதில் தளபதி, புகைபொருள் புகைப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார். இது பொது மக்களை தவறாக வழிநடாத்துகிறது என ஓர் கட்சி ஒன்றினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ் ஆர்ப்பாட்டம், குறித்த போஸ்டரை தடைசெய்யகோரி நடாத்தப்பட இருப்பதாக தெரியவருகிறது.
மின்வெட்டு….. விலைவாசி உயர்வு….. போன்றவற்றிற்கு மௌனம் காத்த குறித்த மருத்துவர் பெயர் கொண்ட குழு தளபதி விடயத்தில் கொந்தளிப்பது ஏன்?
குறித்த போஸ்டரில் புகைப்பது உடல்நலத்துக்கு கேடு என குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment