அல் கொய்தா பயங்கரவாதிகளால் விமானம் மூலம் மோதி தகர்க்கப்பட்ட அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது.
2001-ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. இதில் 2500 பேர் பலியாகினர்.
சரித்திரத்தின் சோகமாகிப் போன உலக வர்த்தக மையத்தை உள்ளடக்கிய அந்த இரட்டைக் கோபுரத்தை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 1270 அடி உயரத்தில் ஒரு கட்டிடமும் 1776 அடி உயரத்தில் மற்றொரு கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 1250 அடி உயர கட்டிடம் முடிவடையும் நிலையில் உள்ளது.
1776 அடி உயர கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும் என்று கூறப்படுகிறது. இது 104 மாடிகளைக் கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய கட்டிடம் மூலம் அமெரிக்காவின் உயரமான கட்டிடம் என்ற பெருமையை இரட்டைக் கோபுரம் பெற உள்ளது.
1931-ம் ஆண்டு கட்டப்பட்ட எம்பையர் கட்டிடம்தான் 1545 அடி உயரத்துடன் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது.
0 comments :
Post a Comment