தன்னை அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பூரிப்புடன் பேட்டியில் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்தது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்தது.
அதையேற்று கடந்த சனிக்கிழமை ரஹ்மான் அமெரிக்கா சென்றார். அங்கு மியாமி பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்ட அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பின்னர் அவர் கூறியதாவது: அமெரிக்க ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டு என்னை வெள்ளை மாளிகை விருந்திற்கு வரச்சொல்லி கடிதம் அனுப்பி இருந்தனர்.
இதை கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. இந்நேரத்தில் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தி தந்தவர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன் என்றார்.
எனது தந்தை, தாயார் என் வாழ்க்கையை ஒழுக்க நெறிகளுடன் செம்மையாக அமைத்து தந்தனர்.
கொலிவுட்டில் ‘ரோஜா’ படம் மூலம் எனக்கு முதன்முதலாக வாய்ப்பளித்தவர் மணிரத்னம். இஸ்லாமிய ஞானிகள் என்னை நானே உணர்ந்துகொள்ள வழிகாட்டினார்கள்.
இந்திய ரசிகர்கள் என்னையும், எனது இசையையும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரவணைத்துக்கொண்டனர்.
அதேபோன்று ஹாலிவுட்டிலும் என்னை ஏற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்
0 comments :
Post a Comment