background img

புதிய வரவு

புவி ஈர்ப்பையே கட்டுப்படுத்தி வைத்திருந்த நம் தமிழ் மூதாதையர்! ஆதாரம் இப்பொழுதும்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தின் அருகில் அமைந்துள்ளது ஶ்ரீ வஞ்சுனவள்ளி ஸமேத ஶ்ரீ ஶ்ரீனிவாசன் திருக்கோயில். இத் தலத்தின் இன்னோர் பெயர் நாச்சியார் கோவில்.

இக் கோவிலில் விஷ்ணு பகவானின் வாகனமாக வைஷ்னவர்களால் வழிபடப்படும் கருடபகவான் 10.5 அடி அடி உயரத்தில் எழுந்தருளியுள்ளார். மார்கழி மற்றும் பங்குனி மாதத்தில் கருட சேவை நடைபெறும். இதற்காக கருட பகவானின் சிலை சன்னதியை விட்டு வெளியே வர வர எடை கூடிக்கொண்டே போவார். சன்னதியின் உள்ளே இருந்து 4 பேர் தூக்கிக்கொண்டு வெளியே வர வர எடை கூடிக்கொண்டே போகும் கருட பகவானை கோவிலின் வெளியே தூக்கி வர 128 பேர் தேவைப்படுகிறார்கள்…!

ஓர் பொருளின் எடையை புவியீர்ப்பு விசை தான் நிர்ணயம் செய்கிறது. (பொருளின் நிறை அப் பொருளின் திணிவை புவீர்ப்பு விசையால் பெருக்கும் தொகைக்கு சமனாக காணப்படும்.)

கல் கருடபகவானின் சிலையின் எடை எவ்வாறு கூடி குறைகிறது???

நம் முன்னோர்கள், பூமியின் ஈர்ப்பு விசையை கட்டுப்படுத்தக்கூடிய ஏதோ ஓர் சக்தியை கருட சன்னிதியில் வைத்துள்ளார்கள். அதுவே சன்னிதியில் இருக்கும் போது கருட பகவானின் நிறை மிக குறைவாக இருப்பதுற்கு காரணம். அதாவது சன்னிதியில் கருட பகவானின் நிறை சுமார் 32 மடங்கு குறைவாக காணப்படுகிறது.

சன்னதியை விட்டு வெளியே செல்ல செல்ல கருடனின் நிறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பூமியின் புவியீர்ப்பு அதிகமாகி, கருடனின் எடை அசாத்தியமான அளவில் அதிகரிக்கின்றது.

தற்கால அறிவியலால் இயற்கையை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் நமது தமிழ் மூதாதையர் புவஈர்ப்பு விசையையே செயல் இழக்க வைத்து இயற்கையை வென்றுள்ளனர் என்பது தமிழர் என்று சொல்ல பெருமைப்பட வைக்கிறது…!

- ஜனவரி மாத சுதேசி சஞ்சிகையில் இருந்து பிரதி செய்யப்பட்டது -

 


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts