background img

புதிய வரவு

இந்தியாவில் தட்டம்மை மரணங்கள் அதிகமாக இருப்பது ஏன்?


மீசல்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டம்மையால் ஏற்படும் குழந்தை மரணங்கள் ஒரு பக்கம் உலக அளவில் வேகமாக குறைந்துகொண்டிருந்தாலும் இந்தியாவில் இத்தகைய மரணங்கள் உரிய வேகத்தில் குறையாமல் இருப்பது கவலை தருவதாக லான்செட் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான ஆய்வுக்கட்டுரை கவலை வெளியிட்டிருக்கிறது.
உலக அளவில் 127 நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களை ஒப்பிட்டு ஆராய்ந்த இந்த ஆய்வுக்கட்டுரை ஆசிரியர்கள், 2010 ஆம் ஆண்டு உலக அளவில் தட்டம்மையால் ஏற்பட்ட சிறார் மரணங்களில் 47 சதவீத மரணங்கள் இந்தியாவில் நடப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதே காலகட்டத்தில் ஆப்ரிக்க நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களின் சதவீதம் 36 சதவீதமாக இருப்பதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், தட்டம்மை மரணங்களை தடுப்பதில் இந்தியா ஆப்ரிக்க நாடுகளைவிட பின் தங்கியிருப்பது கவலை தருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படியான மரணங்களை தடுக்கவேண்டுமானால், இளம்பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் தட்டம்மை தடுப்பு மருந்தளிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும் என்றும், பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த தடுப்பு மருந்துகள் கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்றும் அந்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts