background img

புதிய வரவு

கருணாநிதி பிறந்தநாளில் கே.டிவிக்கு போட்டியாக வரும் முரசு டிவி

Murasu Tv Go Official On Karunanidhi B Day திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த சேனலாக முரசு டிவி சேனல் வரவிருக்கிறது.

தமிழ் மக்களுக்கு அரசியல், சினிமா, விளையாட்டு, சமையல், நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகளை சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, பாலிமர் டிவி, மக்கள் டிவி, கேப்டன் டிவி என பல தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றன. இந்த நிலையில் சன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நாள் முழுக்க திரைப்படம் மட்டுமே ஒளிபரப்ப கே டிவியும், செய்திக்காக சன் நியூஸும், பாடல்களுக்காக சன் மியூசிக் சேனலும், நகைச்சுவைக்காக ஆதித்யா சேனலும், குழந்தைகளுக்காக சுட்டி டிவியும் துவங்கப்பட்டது.

அதே வழியில் கலைஞர் தொலைக்காட்சியும், இசையருவி, சிரிப்பொலி, கலைஞர் செய்திகள் போன்ற சேனல்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. இந்த வரிசையில் கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த சாதனையாக முரசு டிவி என்ற சேனலை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்த சேனல் சோதனை அடிப்படையில் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், அதன் பிரத்யேக ஒளிபரப்பு திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி துவங்க உள்ளதாம். 

முரசு டிவியில் கே.டிவியைப் போன்று முழுக்க முழுக்க திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர். குறிப்பாக அந்த கால கருப்பு- வெள்ளை படங்களை அதிக அளவில் ஒளிப்பரப்ப உள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் முரசு என்ற பெயர் தேமுதிக கட்சியின் சின்னத்தின் பெயராக உள்ளதால் ஒரு வேளை இந்த டிவி தேமுதிக டிவியோ என சிலர் ஐய்யபாடு தெரிவிக்கக் கூடாது என்பதற்காக முரசு பின்னணியில் உதய சூரியன் உதிப்பது போல லோகோ அமைத்துள்னர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts