background img

புதிய வரவு

கருணாநிதியைச் சந்திக்க விரும்பும் ராசா... அனுமதி கோரி கோர்ட்டில் விண்ணப்பிக்கிறார்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்க முன்னாள் மத்திய அமைச்சர் ராசா விரும்புகிறாராம். இதற்காக சென்னை வர விரும்பும் அவர், கோர்ட் அனுமதி கோரி விண்ணப்பிக்கவுள்ளார். கிடைத்தவுடன் சென்னை வருவார் என்று தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி கைதான முதல் நபர் ராசா. மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்து வந்த ராசா, இந்த வழக்கில் சிக்கி கைதான கனிமொழி உள்ளிட்ட அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி விட்ட நிலையில் கடைசி ஆளாக ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார்.

ஏப்ரல் 15ம் தேதி ஜாமீனில் விடுதலையான ராசா, டெல்லியை விட்டு எங்கும் போகக் கூடாது என்று நிபந்தனையுடன் விடுதலையாகியுள்ளார்.எனவே தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது கருணாநிதியைச் சந்திக்க ராசா விரும்புகிறார். கருணாநிதிக்கு ஜூன் 3ம் தேதி பிறந்த நாள் வருகிறது. எனவே அன்று அவரை சந்தித்து வாழ்த்து கூறவும் ஆசி பெறவும் அவர் விரும்புவதாக தெரிகிறது. இதற்காக தான் சென்னைக்குச் செல்ல அனுமதி வேண்டும் என்று கோரி கோர்ட்டை அணுக அவர் திட்டமிட்டுள்ளாராம்.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து அவர் விடுதலையான போது சென்னைக்கு வந்த போது மிகப் பிரமாண்டமான வரவேற்பை திமுக அளித்தது. அதேபோல ராசாவும் சென்னைக்கு வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts