சுந்தர் சியின் 25 வது படமான கலகலப்பு, விநியோகஸ்தர்களின் நம்பிக்கைக்குரிய படமாக மாறியிருக்கிறது.
அஞ்சலி, ஓவியா என இரு இளம் நடிகைகளை மேக்ஸிமம் கவர்ச்சி காட்ட வைத்திருப்பதும், இன்றைய தேதிக்கு பரபரப்பான காமெடியனான சந்தானத்துக்கு படத்தில் பிரதான இடம் கொடுத்திருப்பதும், கேட்ட விலையைத் தர வைத்துள்ளது விநியோகஸ்தர்களை.
ஒரு படத்தை கமர்ஷியலாகக் கொடுப்பது சுந்தருக்கு கைவந்த கலை.
“பொழுதுபோக்குக்கு கியாரண்டியான படமாக இருக்கும் இந்த மசாலா கபே” எனும் சுந்தர், நான் யாரையும் கட்டாயப்படுத்தி கவர்ச்சி காட்டச் சொல்லவில்லை. கதை மற்றும் காட்சிகளைக் கேட்டபின், அவர்களாகவே இந்த அளவு கிளாமராக நடித்துக் கொடுத்தனர். கவர்ச்சியாக இருக்கும். ஆனா நிச்சயம் விரசமாக இருக்காது”, என்கிறார்.
அஞ்சலி, ஓவியாவின் இந்த அதிரடி கவர்ச்சியே படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாகவும் உள்ளதை ஒப்புக் கொள்கிறார் சுந்தர்.
அனைத்து ஏரியாக்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வரும் மே 11-ம் தேதி உலகமெங்கும் பெரிய அளவில் ரிலீசாகிறது கலகலப்பு.
0 comments :
Post a Comment