background img

புதிய வரவு

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விளக்கம் அளிக்கப் போகிறோம்-- மதுரை ஆதீனம், நித்தியானந்தா




முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மதுரை ஆதீனம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளிக்கப் போகிறோம் என்று மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் மதுரை ஆதீனம் பேசுகையில், 

மதுரை ஆதீனம் மீட்புக் குழு என்ற ஓர் அமைப்பு, ஆதீனத்துக்குள் நுழைந்து வழிபாடு நடத்தப் போவதாகக் கூறியுள்ளது. ஆதீனத்தின் அனுமதியில்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. சட்டம், ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் அத்தகைய முயற்சியை எடுக்கின்றனர். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தருமபுரம் ஆதீனமும், திருப்பனந்தாள் மடமும்தான் பொறுப்பு.

ஆதீனம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ளோம். 1980 முதல் எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டில் நடந்த பேரவைத் தேர்தலின்போது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தமிழகத்தில் உள்ள ஆதீனங்களில் பழமையானது மதுரை ஆதீனம். ஆனால், பிற ஆதீனங்கள் மனரீதியாக அளித்துவரும் இடையூறுகளால் எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டது என்றார்.

அடுத்து நித்தியானந்தா பேசுகையில்,

மதுரை ஆதீனத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், வழிபாடு நடத்தப் போவதாக ஒரு குழு அறிவித்திருக்கிறது. அவர்களை அனுமதிக்கக் கூடாது என காவல் துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதையும் மீறி மதுரை ஆதீனத்துக்குள் நுழைந்து பிரச்னை ஏற்படுத்த நினைத்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

எனது தியான பீட பக்தர்கள், மீட்புக் குழுவின் போராட்டத்தை அறிவித்த நெல்லை கண்ணனின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். பிற ஆதீன மடங்களின் தலைவர்கள், ஆன்மிக ரீதியாகவும், இறைசக்தி ரீதியாகவும் என்னோடு போட்டியிட வேண்டும். அதைத் தவிர்த்து எனது குணநலன்களைப் பற்றி தவறாக அவதூறு பரப்பக் கூடாது என்றார்.

பேட்டியின்போது மதுரை உதவி போலீஸ் கமிஷனர் துரைசாமி மீதும் இருவரும் குற்றம் சாட்டினர். அவர், குண்டர்களை வைத்து மிரட்டுவதாக இருவரும் கூறினர்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts