background img

புதிய வரவு

முதல்வர் ஜெயலலிதாவை 'டீச்சராக்கிய' அமைச்சர் செந்தில்பாலாஜி!

முதல்வர் ஜெயலலிதாவிடம் எப்படியெல்லாம் காக்கா பிடிக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் ரூம் போட்டுத்தான் யோசிப்பார்கள் என்பதை அமைச்சர் செந்தில்பாலாஜி நிரூபித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவினர் அம்மா, தாயே ஆதிபராசக்தி என போஸ்டர் அடித்தும், நாளிதழ்களில் விளம்பரம் செய்வதும் தமிழக மக்கள் அறிந்ததே.

தற்போது அதையெல்லாம் தாண்டி ஆர்வக்கோளாறு காரணமாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 12 பக்க வண்ண புத்தகம் ஒன்றை தமது சொந்த செலவில் பல லட்சம் பிரதிகள் அச்சிட்டு அதில் தொலைநோக்கு திட்டம் 2023 குறித்த தகவல்கள், போக்குவரத்து துறையின் சாதனைகளை விளக்கும் வண்ணமும், தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் பங்கு, வளர்ச்சி உளளிட்டவைகள் அடங்கிய விரிவான தகவல்கள் இடம்பெறச் செய்துள்ளார்.

அதில், "வாட்டம் கொண்டிருந்த போக்குவரத்து துறைக்கு ஏற்றம் தரும் மாபெரும் சாதனை திட்டங்கள் தந்து ஒரே ஆண்டில் நூற்றாண்டு சாதனைகளை வழங்கி போக்குவரத்து துறையை தலைநிமிர செய்திட்ட சரித்திரம் போற்றும் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மலர் பாதங்களில் கோடான கோடி நன்றி மலர்களை சமர்பித்து பணிந்து வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ள செந்தில்பாலாஜி அதிரடியாக "மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் விசுவாசமிக்க மாணவன்" வி செந்தில்பாலாஜி, போக்குவரத்துறை அமைச்சர் என அச்சடித்துள்ளார்.

ஆக ஜெயலலிதாவுக்கு இப்பொழுது டீச்சர் போஸ்டையும் கொடுத்துவிட்டார் செந்தில்பாலாஜி..

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts