background img

புதிய வரவு

ஹஜ் பயணத்துக்கன மானியத்தை ரத்து செய்யலாம்: இந்திய உச்சநீதிமன்றம்

இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனித ஹஜ் யாத்திரைக்கென அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாக குறைத்து பத்தாண்டுகளில் முற்றிலுமாக ரத்து செய்துவிடவேண்டுமென இந்திய உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்திரவிட்டது.


ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து 1.75 இலட்சம் யாத்திரீகர்கள் ஹஜ் பயணம் செல்கின்றனர்.
அவர்களில் 1.25 இலட்சம் பேர் மத்திய அரசு நியமிக்கும் குழுவால் தெரிவுசெய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர். அவர்களது பயணக் கட்டணத்தை அரசு விமான நிறுவனத்துக்கு அளித்துவிடுகிறது.
அவ்வாறு செல்வோரில் முக்கிய பிரமுகர்கள் என்று வகைப்படுத்தப்படுவோர் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவைத் தவிர்த்து வேறு நிறுவனங்களின் வழியே பயணம் செய்தாலும் அவர்களுக்கும் மானியம் அளிக்கலாம் என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மத்திய அரசு மனுச் செய்தபோது, ஹஜ்ஜிற்கான மானியமே தேவையா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் வகையிலேதான், நீதிபதிகள் அல்தமஸ் கபீர் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மானியத்தை ரத்து செய்துவிடலாம் எனக் கூறியிருக்கிறது.

மேலும் இந்திய ஹஜ் கமிட்டி எப்படி செயல்படுகிறது என்பதையும், ஹஜ் பயணத்துக்கு யாத்ரீகர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதையும் ஆய்வு செய்யப் போவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சில முஸ்லீம் அமைப்புகள் , ஹஜ்ஜிற்கு இலட்சக்கணக்கில் முஸ்லிம்கள் செல்கிறார்கள், அவர்களது பயணத்திற்கான கட்டணத்தை அரசு கொடுக்கும்போது அரசு நிறுவனமான ஏர் இந்தியாவிற்கே இலாபம், பெரிதாக முஸ்லிம்களுக்கு இழப்பில்லை என்றும், தங்கள் மதக் கடமையை நிறைவேற்ற கட்டணத்தொகையினை எப்படியாவது திரட்டிவிடலாம் எனவே மானியத்தை ரத்து செய்து யாத்ரீகர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்துகொடுக்கலாம் என்றும் கூறுகின்றன .


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts