background img

புதிய வரவு

3 நாள் பயணமாக மியான்மர் சென்றார் மன்மோகன்சிங்

பிரதமர் மன்மோகன்சிங் 3 நால் சுற்றுப் பயணமாக மியான்மருக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். கடந்த 25 ஆண்டுகளில் மியான்மருக்கு பயணம் மேற்கொண்ட முதலாவது இந்திய பிரதமர் மன்மோகன்சிங்தான்.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் ஜனநாயகத்துக்காக ஆங்சாங்சூயி தலைமையில் போராட்டமும் நடைபெற்று வந்தது. மேற்குலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் ஜனநாயகப் பாதைக்கு மியான்மர் திரும்பியது. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ஆங்சாங்சூயி-யின் ஜனநாயகக் கட்சிக்கு கணிசமான இடங்களும் கிடைத்தது. ஆங்சாங்சூயியும் நாட்டின் எம்.பியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதைத் தொடந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கிமூன் மியான்மர் சென்றிருந்தார். இங்கிலாந்து பிரதமரும் அண்மையில் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மெதுமெதுவாக விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று மியான்மர் பயணம் மேற்கொள்கிறார். மியான்மர் செல்லும் முன்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும் உறவு நாடாகவும் மியான்மர் திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.மேலும் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங்சாங்சூயியையும் மன்மோகன்சிங் சந்தித்துப் பேச உள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமாக மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts