கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் அணு உலையில் மாதிரி
எரிபொருள் அகற்றும் பணி தொடங்கியது. இதற்கான அனுமதியை அணுசக்தி ஒழுங்கு முறை
வாரியம் வழங்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியுடன் ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் சுமார் தலா 1000 மெகாவாட் திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையின் மூலம் கடந்த டிசம்பர் மாதமே மின்சார உற்பத்தி தொடங்க இருந்தது. ஆனால் அணு மின் நிலையத்துக்கு எதிராக அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதால் 6 மாதத்திற்கும் மேலாக பணிகள் தடைபட்டன.
இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி முதல் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு முழு வீச்சில் நடந்து வருகின்றன. முதல் அணு உலையில் மாதிரி எரிபொருள் நிரப்பப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் மாதிரி எரிபொருளை அகற்ற அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது கூடங்குளம் முதல் அணு உலையில் அழுத்த கலனை திறக்கவும், அதில் நிரப்பப்பட்ட மாதிரி எரிபொருளை அகற்றவும் கூடங்குளம் அணு மின் நிலையம் கடந்த மார்ச் 2ம் தேதி அணு சக்தி ஒழுங்கு முறை வாரியத்திடம் விண்ணப்பித்தது.
இதை தொடர்ந்து சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்ததன் பேரில் முதல் அணு உலையில் அழுத்த கலனை திறக்கவும், அதில் நிரப்பியுள்ள மாதிரி எரிபொருளை அகற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

0 comments :
Post a Comment