background img

புதிய வரவு

ரஜினிகாந்த் குணமடைய திரூப்பூரில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை

திருப்பூர்: ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

மனிததெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்

திருப்பூரில் “மனிததெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்” இயங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். தற்போது நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரார்த்தனை

இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம் சார்பில் திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் பிரார்த்தனை செய்தனர். இது தவிர, 51 பக்தர்கள் திருமூர்த்தி மலை அமணலிங்கேசுவரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் இருந்து பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு 50 கிமீ தூரம் பாத யாத்திரையாக செல்கிறார்கள்.

அன்னதானம்

சேவை மையத்தின் சார்பில் பக்தர்களுக்கு வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மனிததெய்வம் ரஜினிகாந்த் இயக்க நிர்வாகிகள், ரஜினி ரசிகர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts