background img

புதிய வரவு

ஜூன் 1-ம் தேதி முதல் இலவச அரிசி

கரூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் இலவச அரிசி வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஜெ. உமா மகேஸ்வரி.


கரூர் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரசி வழங்குவது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியர் உமா மகேஸ்வரி பேசியது:



தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

தகுதியுள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம், சிறப்பு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகளை அனைத்து அலுவலர்களும் திறம்பட ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.


தொடக்க நாளன்று அதிக அளவில் குடும்ப அட்டைதாரர்கள் வந்தால், நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் பொறுமையாகவும், கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும்.


அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.


தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அளவு அரிசி இலவசமாக வழங்கப்படும்.


அரிசி இலவசமாக வழங்கும் திட்டம் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஜூன் 1-ம் தேதி முதல் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.


அதற்குத் தேவையான பணிகளை அனைத்து அலுவலர்களும் தவறாது செய்து முடிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.


மாவட்ட வருவாய் அலுவலர் தி. பிச்சையா, மாவட்ட வழங்கல் அலுவலர் வி. நாகஜோதி, கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் சா. மதிவாணன், தனி அலுவலர்கள், பறக்கும் படை, தனிப் படை வட்டாட்சியர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.



0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts