background img

புதிய வரவு

தேர்தல் வாக்குறுதிகளை முடிக்கும் வரை ஓய்வு கூடாது: முதல்வர் ஜெ., கண்டிப்பு

"தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடிக்கும் வகையில், ஒவ்வொரு துறையிலும் அவசர தேவைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்' என, தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டத்தில், அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையின் (கேபினட்) முதல் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஜார்ஜ் கோட்டையில் நேற்று நடந்தது. காலை 9.40 மணிக்கு துவங்கிய கூட்டம், 10.50 மணிக்கு முடிந்தது. இதில், 33 அமைச்சர்களும் பங்கேற்றனர்."தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை, எந்த தாமதமுமின்றி நிறைவேற்ற, ஒவ்வொரு துறை அமைச்சரும் பணியாற்ற வேண்டும். தங்கள் தொகுதிகளில் உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்னைகளுக்கு முன்னுரிமை தரவேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றரை ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

"இதை மனதில்கொண்டு அமைச்சர்கள் தங்கள் துறை செயலர்களுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுகளை தவிர்த்து விட்டு, ஆய்வுக் கூட்டங்களை வேகமாக முடித்து, அவரவர் துறை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பிரச்னைகளை தெரிந்து கொள்ள வேண்டும்' என்பன போன்ற உத்தரவுகளை அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் வழங்கினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்றபோதிலும், முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவை கூட்டம் நடத்தியதால், தலைமைச் செயலக ஊழியர்கள் பலர் வேலைக்கு வந்திருந்தனர். அனைத்து துறைகளின் செயலர்களும் காலை 8 மணிக்கே தலைமைச் செயலகம் வந்திருந்தனர். கூட்டத்திற்கு பின் தங்கள் அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தியபின், அதிகாரிகள் மதியம் தான் வீட்டிற்கு சென்றனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts