ராணாவாவது காணாவாவது... என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து ரஜினி ரசிகர்களின் கோபத்தை(யும்) சம்பாதித்துக் கொண்ட வடிவேலு, மருத்துவமனையில் சிகிகிச்சை பெற்று வரும் ரஜினியை பார்க்கச் சென்றிருக்கார். ரஜினியின் நெருங்கிய விஐபி நண்பர்களையே உள்ளே அனுமதிக்காத மருத்துவமனை நிர்வாகம் வடிவேலுவை மட்டும் விட்டுவிடுமா என்ன? விரட்டியடித்து விட்டார்களாம்.
திமுகவின் பிரசார பீரங்கியாக வலம் வந்தபோது சக நடிகர் என்றும் பாராமல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை வாய்க்கு வந்தபடி பேசியதன் விளைவாக ரஜினியின் ராணா படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த வடிவேலு, ராணாவாவது... காணாவாவது... தேர்தல் முடிவு வந்த பிறகு பாருங்கள், எத்தனை பேர் யார் காலில் வந்து விழப்போகிறார்கள் என்று... என்று தெனாவட்டாக கூறினார். வடிவேலுவின் போதாத காலம்... தேர்தல் முடிவில் திமுக வரலாறு காணாத தோல்வியை தழுவியது. திமுக இறங்குமுகமாக இருந்தபோதே வடிவேலுவின் வீடு மீது கல் வீசப்பட்டது. மர்ம நபர்கள் வடிவேலுவின் பண்ணை தோட்டத்தை நாசப்படுத்தினர். இதனால் சென்னை செல்லாமல் மதுரையிலேயே பதுங்கியிருந்தார் வடிவேலு.
நிலைமை சற்று அமைதியானதால் சென்னை சென்ற வடிவேலு, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினியின் உடல்நிலையை விசாரிக்கச் சென்றுள்ளார். ஏற்கனவே கொதித்துப் போயிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இந்த நேரத்தில் வடிவேலுவும் போய் நின்றால் என்னாகும்? ரஜினியை பார்க்க போன வடிவேலுவை துரத்தியடிக்காத குறையாக அனுப்பி வைத்தார்களாம். நல்லவேளையாக இவர் போயிருந்த நேரத்தில் ரசிகர்கள் பெருமளவு இல்லை. எப்படியோ உள்ளே சென்றவர், அண்ணனை பார்க்கணும் என்றதாகவும், பெரிய பெரிய ஆளுங்களையே உள்ள விடல. உங்களை எப்படி விட முடியும்? போயிட்டு வாங்க என்றார்களாம் மருத்துவமனை நிர்வாகத்தில்! ரஜினி குடும்பத்தை பார்த்து சில வார்த்தைகள் விசாரித்துவிட்டு வரலாம் என்று நினைத்த வடிவேலுவுக்கு அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சியதாம்! என்னத்த சொல்ல...?

0 comments :
Post a Comment