background img

புதிய வரவு

கீரையையும் சேர்க்கலாமே!

உங்களது உணவில் கட்டாயம் கீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்களிலிருந்து ஊட்டச்சத்து நிபுணர்கள் வரை விடாது வலியுறுத்தி வருகிறார்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது புத்தகத்திலோ கீரையின் மகத்துவத்தை பற்றி படிக்கையில் மட்டும் உணர்ச்சிவசப்பட்டு, கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்பவர்களில், அதனை நடைமுறைப்படுத்துவர்கள் மிகச் சிலரே.

நம்மில் பெரும்பாலானோருக்கு அது இளவயதினராக இருந்தாலும் சரி அல்லது முதியவர்களாக இருந்தாலும் சரி, ஆணோ அல்லது பெண்ணோ கீரையை உணவில் எடுத்துக் கொள்வது என்றால் அவ்வளவாக விரும்புவதில்லை. அதே சமயம் கீரையின் மகத்துவத்தை பற்றி, மருத்துவர்களை காட்டிலும் ஏகமாக மற்றவர்களுக்கு பரிந்துரைப்பார்கள்.

இப்படி மற்றவர்களுக்கு பரிந்துரைப்பதை காட்டிலும் நாமும் அதனை கடைபிடித்தோமானால் ஆரோக்கிய வாழ்வு நிச்சயம்.

ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்த கீரைகள், குறைந்த கலோரி கொண்டவை என்பதோடு மட்டுமல்லாது, கொழுப்பு சத்து இல்லாததும் கூட.

அதுமட்டுமல்லாது கீரை வகைகள் உடலுக்கு எந்தெந்த விதமான பலன்களை அளிக்கிறது என்பது மேலும் குறித்த தகவல் இங்கே:

கீரைகளை பச்சையாக உண்டால் அதன் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக அப்படியே கிடைக்குமாம். ஆனால் சமைத்த கீரையை சாப்பிடுவதே நம்மவர்களுக்கு பெரும்பாடாக இருக்க, பச்சை கீரை அளவுக்கு போகாவிட்டாலும், சமைத்த கீரையையாவது சாப்பிடலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts